Re:வாசிப்பும், வாழ்வும்!... posted byM.S. Abdul Hameed (Dubai)[10 February 2012] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20503
மிக அருமையான கட்டுரை.
சாளை பஷீர் காக்காவின் எழுத்துகளை மிக நீண்ட நாட்கள் கழித்து வாசிக்கின்றேன். பழைய நினைவுகள் என்னைப் பந்தாடுகின்றன.
வாசிப்பில் நமதூர் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை நாசூக்காக, எல்லோருக்கும் புரியும்படியாக தனக்கேயுரிய தனித்தமிழ்ப் பாணியில் அசத்தலாக எழுதியிருக்கிறார்.
வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க நமதூரில் நடைமுறைப் பயிற்சிகள் சில மேற்கொண்டால் நலம் பயக்கும் என்பது என் தாழ்வான எண்ணம்.
உதாரணத்திற்கு சிறு நூலகம் அமையப் பெற்ற முன்மாதிரி இல்லங்களை நாமே உருவாக்கிக் காட்டவேண்டும். நல்ல வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நூல்களை வைத்து இதனைச் செய்து காட்ட வேண்டும்.
புதிதாக வீடுகளைக் கட்டுவோர் நூல்களை வைப்பதற்கும், வாசிப்பதற்கும் என்று சிறிதாக தனியறை அமைத்துக் கட்டும் பழக்கம் உருவாக வேண்டும். மேலை நாடுகளில் இந்தப் பழக்கம் உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross