Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!... posted byShameemul Islam SKS (Chennai)[10 February 2012] IP: 101.*.*.* India | Comment Reference Number: 20506
வரலாற்றைப் படைக்க வரலாற்றைப் படிக்க வேண்டும் என்பது உண்மைதான். எழுத்தாளரின் விழைவும் அது தான்.
ஆனால் ஒரு வேளை என் தலைமுறையைத் தேடிப்பார்த்து அதில் ஒருவேளை என் தலைமுறை தான் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் இணைகின்றதென்றால் எனக்கு சந்தோஷத்தை விட கவலைத்தான் அதிகரிக்கும். அதிகரிக்க வேண்டும்.
ஏனெனில் குலப்பெருமை பேசுபவர்கள் இன்றும் நம்மூரில் அதிகம் இருக்கவே செய்கிறார்கள்.
ஒருவர் குடுபத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஒருவருக்கு கண்ணியம் எனில் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் உள்ள அன்னாரை வளர்த்தெடுத்த, எதிரிகளிடம் இருந்து அன்னாருக்கு யாதொரு இன்னலும் நேராமல் பாதுகாத்தவர்களுக்கு கூட ஹிதாயத் கிடைக்கவில்லை,
என்பதை விட ஹிதாயத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை.
அதே வேளை அபூபக்கர் (ரலி) அவர்கள் வமிசத்திலிருந்து அல்லது மக்காவிலிருந்து நேரடியாக வந்தவர்களுக்கான பொறுப்பு யாதெனில் அவர்கள் ஈமான் அளவிற்கு தமது ஈமானை உயர்த்த முனைவதும் இவ்வுலக வாழ்க்கைக்குப் பின் ஒருவர் கூட நரகில் போய் விழாமல் தடுக்க அவர்களிடம் ஓயாது உறங்காது இறை அழைப்புப்பணியைச் செய்வதும், மேலும் நன்மையை பிறருக்கு ஏவித் தம்மையே அதில் முன்மாதிரியாக்கிக் காட்டுவதும் தான்.
ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் அல்லாஹ்விடத்தில் அதிக கண்ணியத்திற்கு உரியவர் உங்களில் இறையச்சத்தில் சிறந்தவரே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross