Re:எங்கே செல்கிறது நம் மாணவ ... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A)[21 February 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20545
மிக அழகாக அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் கட்டுரையை தந்துள்ளார். பாராட்டுக்கள்.
பெற்றோரின் கடமை என்ன என்பதே மிக முக்கியம்.
மாணவர்களை பண்படுத்த தான் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் பள்ளியே மாணவனை இந்தகதிக்கும் கொண்டு செல்கிறது
என்பது நிதர்சனமான உண்மை. இன்றுள்ள சூழ்நிலையில் நன்கு படிக்கும் மாணவனை தலையில் தூக்குவதும், படிப்பில் குறைவானவனை அவமதிப்பதும் இதுபோன்ற செயலுக்கு முக்கிய காரணம்
.
ஒரு நேரத்தில் காலையில் மக்களை புனித குர்ஆன் மதரசாவிற்கு அனுப்பி ஓதிய பின் உலக கல்வி பயில அனுப்புவதுதான் நமதூர் மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் வாழும் டவுன், கிராமம், நகரம் என அணைத்து ஊர்களிலும் நடந்தது இன்றோ அது அடியோடு காணவில்லை.
நாமக்கல்லில் நல்ல மதிப்பென்னோடு சென்று படித்தால்தான் மகன் டாக்டராகவோ என்ஜினியராகவோ வருவான் என எதிர்பார்கிரார்க்ளே தவிர மகன் நல்ல மனிதனாக வளர வேண்டும் என்றென்னும் பெற்றோர்களின் சதவிகிதம் மிக சொற்பமே!
நமதூரில் போற்றத்தக்க ஹாமிதியா போன்ற மார்க்க கல்வி நிறவனங்கள் இருப்பதால் நம் மாணவர்கள் பண்படுத்த படுகிறார்கள்.
பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவர் தலைவர் தேர்வு மன்ற தலைவர் தேர்வு என தேர்வு முறையிலேயே வன்முறை, அடி தடி அரங்கேறு கிறது பின்னால் அதுவே அவர்களின் வன்முறை வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகிறது.
மேலை நாடுகளில் மாணவனின் உற்சாகம் எந்த துறயில் இருக்கிறது என்பதனை அவனது இளம் பிராயத்திலேயே அறிந்து அவனது உயர் கல்வியை ஏற்பாடு செய்கிறார்கள் நம் நாட்டிலோ எந்த துறை அதிகம் பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த துறையே பெற்றோர்கள் மாணவர்கள் மீது திணிக்கிறார்கள். இதுவும் பெற்றோர்களின் மனோபாவத்தில் மாற வேண்டும், பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்மக்கள் என பெயர் சொல்ல.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross