Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:08:20 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 9
#KOTWEM9
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 21, 2012
எங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்! (பகுதி – 1)

இந்த பக்கம் 3742 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பொதுவாக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 'மாணவன்...ஆசிரியரை, சக மாணவர்களை துப்பாகியால் சுட்டு கொன்றான்' என்று கேள்விபடுவோம். ஆனால் இன்று நமது மாநிலத்தில் '9ம் வகுப்பு மாணவன் ஆசிரியை கொலை செய்த பயங்கர சம்பவம்' எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தனையும் 'மேற்கத்திய' மயமாகி வரும் நமது நாட்டில் 'தனிநபரை' முன்னிறுத்தும் அவர்களது வாழ்க்கைமுறை மட்டும் விதிவிலக்கா என்று நினைக்க தோனுகிறது. சில ஊடகங்கள் அம்மாணவனின் பெயரை வெளியிட்ட போது நமக்கு இன்னும் பேரதிர்ச்சி. 'பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்' என்று இஸ்லாம் சொல்லித்தந்த அளவுக்கு வேறெந்த மதமும் சொல்லிதந்திருக்காது. இருப்பினும் நமது மாணவ சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது...சமுதாயத்தினராகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதனை சற்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஏனென்றால் 'வாழ்க்கை' எனும் சுழல்சக்கரத்தில் நாம் அனைவரும் 'வெறும் இயந்திரங்களாக' மாறி, இஸ்லாம் கற்றுத்தந்த குழந்தை வளர்ப்பு முறையினை மறந்து வருகிறோம் என்றால் மிகையாகாது. அதற்க்கான அறிகுறி தான் இது போன்ற நிகழ்வுகள்.

"எனக்கென்று தனி அறை, செல்லமான வளர்ப்பு, `ரிப்போர்ட்' கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்து பாசத்தையும் செலவுக்கு பணம் தருவதையும் நிறுத்தி விட்ட கண்டிப்பான (?) அப்பா" கொலை செய்ய தூண்ட முதற்காரணமாகி போனது. அடுத்து வன்முறையான சினிமா. பொதுவாக சினமாவில் தான் 'கிளைமாக்ஸ்' வரும் ஆனால் இவ்விசயத்தில் 'சினிமாவே' கிளைமாக்ஸ் ஆக துணை போனது வேறு விஷயம். இறைவன் நாடினால் மற்ற காரணங்களை இரண்டாம் பகுதியில் விரிவாக பேசலாம்.

எளிமையான, நல்ல பிள்ளைகளை ஒப்பிட்டு தனது பிள்ளைகள் அடம்பிடித்து கேட்ப்பவைகளை நாசூக்காக தட்டிகழித்த காலம் போய்...பாக்கட் மணி, கணினி, மடிக்கணினி, அலைப்பேசிகள் மற்றும் ஏனைய நவீனகாலத்து பொழுதுபோக்கு சமாச்சாரங்களை பிள்ளைகள் கேட்டவுடன் வாங்கி தந்து அழகு பார்ப்பதும் பின்னர் அவர்கள் 'நடவடிக்கைகள்' சரியில்லை என்றவுடன் அனைத்தையும் ஒரே நாளில் 'கட்' செய்யும் போது ஏற்படும் 'மன அழுத்தத்தினால்' இது போன்ற 'குற்றங்களுக்கு' தள்ளபடுகின்றார்கள். கேட்டதையெல்லாம் வாங்கி தருவதைவிட அப்பருவத்தில் அவர்களுக்கு தேவைதானா என்று சிந்தியுங்கள். ஒரே மகன் அல்லது மூன்று பெண்பிள்ளைகளில் ஒரு ஆண்பிள்ளை என்றால் பெற்றவர்கள் கொடுக்கும் செல்லம் இருக்கிறதே... நானெழுதி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும தீயவராவதும் அன்னை வளர்பதிலே". நிலவைக்காட்டி சோறூட்டிய அன்னை இன்று டி.வி.சீரியலைக் காட்டி அமுதூட்டும் கொடுமை. தொலைக்காட்சிகள் இல்லாத காலங்கள் போய் பஜ்ர் முதல் நள்ளிரவு வரை இசை, படங்கள், சீரியல்கள் என பெரும்பாலும் சினிமா நிகழ்ச்சிகள். சில பெரியவர்களும் விதி விலக்கல்ல. சிறுவயதிலேயே என் மகள் 'குர்ஆனை' மனனம்/ஓதி முடித்து விட்டாள் என்று அங்கலாய்த்த காலம் போய், என்ன அழகாக 'கொலை வெறி' பாடலை பாடுகிறாள், 'வாடி வாடி நாட்டு கட்...' பாடலுக்கு நடனம் ஆடுகிறாள் என்று பெருமைபட்டு கொள்ளும் இன்றை மாடர்ன் தாய்மார்கள்.

'பாய்' கடையில் போய் வாப்பாவுக்கு சிகரட் வாங்கி வாம்மா மற்றும் முசிபத்து, பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு,ஹயாத்தளி....(மீதியை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்) என்று திட்டும் பெற்றோர்களும் இன்றும் நமதூரில் இருக்கிறார்கள். காலங்கள் மாறியுள்ளதே தவிர காட்சிகள்/வாசகங்கள் இன்னும் வாழையடி வாழையாக அப்படியேதான் இருக்கின்றன. எதை விதைத்தோமோ அதுதான் முளைக்கும் என்பதற்க்கு சாட்ச்சியாக.

தவறு செய்யும் தம் பிள்ளைகளை கண்டிக்காமல், என் மகன் அப்படியெல்லாம் ஒருகாலும் செய்ய மாட்டான் என்று கண்மூடித்தனமாக ஒத்து ஊதுவதும், பெண் பிள்ளைகளை மட்டும் ஒழுக்கத்துடனும் நட்பன்புகளுடனும் வளர்த்தால் போதும் ஆண் பிள்ளைகள் ஒரு வயசில் கொஞ்சம் 'அப்படி இப்படிதான்' இருக்கும். பின்னொரு காலத்தில் சரியாகி விடுவார்கள் என்ற அதீத நம்பிக்கையில் கண்டும் காணாது விட்டு விடுகிறார்கள். ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையுமா...இதனாலேயே படிப்பில்/வாழ்க்கையில் கவனம் சிதறி 'திசைமாறிய' பறவைகள் ஏராளம்.

"...ஒரு பெண் அவளது கணவனுக்கும் அவனது குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்பு பற்றி (மறுமையில்) கேள்வி கேட்கப்படுவாள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு உம்ர் (ரலி) நூல் - புஹாரி

சமீபத்தில் ஒரு நண்பரை பல வருடங்கள் கழித்து நமதூரில் சந்திதேன். வியாபாரத்திற்காக அவர் வேறொரு ஊரிலும், படித்த மனைவி இன்னொரு நகரத்திலும், அவர்களின் ஒரு வயது குழந்தை கம்மா வீட்டிலும் (நமதூரில்) வளர்ந்து வந்தது. ஏதாவது ஒரு விசேசத்தில் ஊரில் சந்தித்து கொள்வார்கள். அன்றைக்கும் அது போல வந்திருந்தார். மகளுக்கு ஐந்து வயதாகிறது. உடம்பு அடிக்கடி சரியில்லாமல் போய் விடுகிறது. பிள்ளையும் எங்களுடன் ஓட்ட மாட்டேன் என்கிறாள் என்று. அக்குழந்தைக்கு அப்பருவத்தில் கிடைக்க வேண்டிய பெற்றவர்களின் அன்பையும் அரவணைப்பையும் உதாசினபடுத்திவிட்டு இப்பொழுது புலம்பி என்ன பயன்.

ஒரு கணவனாக மனைவிக்கும், தகப்பனாய் பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை 'அவர்கள்' அருகாமையிலிருந்தே செய்கின்ற வாய்ப்பிருந்தும் 'நிறைய சேமிக்க' வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மனைவி/மக்கள் ஒருபுறம்...தான் மறுபுறம் என வாழுந்து வருபவர்களும் உண்டு. பணம் முக்கியம்தான்...ஆனால் வெளியுலகத்தில் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அறியும் (அதை அறிந்து திருத்தும்) வாய்ப்பு தாயை விட தந்தைக்குத்தான் உள்ளது. எந்த குழந்தைகள் தாய் தந்தையரின் முழு பராமரிப்பில் வளர்கிறதோ அக்குழந்தைகள் 'வழிதவறி' போவதற்க்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் பிள்ளைகள் தாயிடமிருந்து கற்க்க வேண்டிய நல்லொழுக்கங்களை தாயிடமும் அதேபோல் தந்தையிடமும் கற்கிறார்கள்.

‘மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)

ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்தால், பெரும்பாலான பிள்ளைகளின் குணாதசியங்கள் (நல்லதோ/கெட்டதோ) பெற்றவர்களை போன்றே இருக்கும். நாம் எதை செய்கிறோமோ அல்லது எதன்படி நடக்கின்றோமோ அதுமாதிரி தான் நமது பிள்ளைகளும். நம் குழந்தை ஒழுக்கத்திலும் மார்க்கத்திலும் நன்நடத்தையிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் இவையனைத்தும் நம்மிடத்தில் 'முதலில்' ஏற்படவேண்டும். நமது நடவடிக்கைள் ஒவ்வொன்றும் இஸ்லாத்திற்கு உட்பட்டு அமைய வேண்டும்.

முந்தயகாலம் போல் மார்க்க அறிவுடன் கூடிய உலக கல்வி போய் 'உலக கல்வியே' வாழ்க்கை என்று இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர். சிலவருடங்களுக்கு முன் அமெரிக்காவில் வசிக்கும் நமதூரை சார்ந்த பையனிடம், ஹலால் இறைச்சிக்கு என்ன செய்கிறாய் என்றேன். எந்த இறைச்சியாக இருந்தால் என்ன காக்கா...அதை சாப்பிடும் பொது 'பிஸ்மி' சொல்லி சாப்பிட்டால் 'எல்லாம்' ஹலாலாகி விடும் என்று வியப்பில் ஆழ்த்தினான்.

கலாச்சாரதிற்க்கும் ஒழுக்கத்திற்கும் பெயர்போன நமது நாட்டிலேயே/ஊரிலேயே பிள்ளைகளை நல்லபடியாகவும் ஒழுக்கமாகவும் வளர்ப்பதில் இவ்வளவு சிரமம் என்றால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் (அதாவது காலாச்சார சீரழிவுக்கும் தனிநபர் சுதந்திரத்திற்க்கும் பெயர் போன) தங்கள் பிள்ளைகளை இஸ்லாமிய முறையில் ஒழுக்கத்துடனும் நற்பண்புகளுடனும் வளர்க்க விரும்பும் நம்மவர்கள் படும் கஷ்டத்தை இங்கே எழுதி மாள முடியாது. இது போன்ற நாடுகளில் முஸ்லிம் பெற்றோர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்க படுவது 'இஸ்லாமிய முறையில் குழந்தை வளர்ப்புதான்'. இலவசமாக படிப்பு கிடைக்கும் 'பப்ளிக்' ஸ்கூலில் படித்தால் எங்கே தனது பிள்ளைகள் கெட்டு விடுவார்களோ என்பதற்க்காக, மாதம் $500 - $750 வரை செலவு செய்து தனியார் இஸ்லாமிய பள்ளிகூடங்களுக்கு அனுப்புகின்றனர் ஆனால் இந்நிலை நமது நாட்டில் இல்லை. இன்னும் அமெரிக்காவில் தொலைகாட்சியில்லாத, தேவைக்கு மட்டும் கணினியை பயன்படுத்த தரும் எத்தனையோ இஸ்லாமிய வீடுகளும் உண்டு. ஆனால் இன்று தொலைகாட்சி இல்லாத வீடுகளே நமதூரில் இல்லை. கணினிகளும் மடிகனினிகளும் தேவையில்லை என்றால் கூட...இன்றைய இளைய தலை முறை கைகளில் கொடுத்து அழகு பார்ப்பதை பெருமையாக நினைக்கிறோம்.

குழந்தைகள் பெற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 'அமானிதம்' என்பதை மறந்துவிட்டோம். அமானித மோசடி செய்து மறுமையிலே இறைவனின் முன்பு நஷ்டவாளிகளாக ஆகிவிடக்கூடாது. குழந்தைகளை முறையாக வளர்க்கவில்லையெனில் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும். பெற்றோர்கள் 'உண்மையான' முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே இஸ்லாமிய சிந்தனையில் வளர்கிறார்கள் ஒரு வேளை 'பெயர் தாங்கி' முஸ்லிமாக இருந்தால் அவர்களும் பெயரளவிலே முஸ்லிம்களாக வளர்கிறார்கள் என்பதனை நாம் கண்கூடாகவே காண்கிறோம். பல பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்துவிடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். பெற்றெடுத்தக் குழந்தைகளை சரியான அடிப்படையில் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்ப்பதில் தான் பெற்றோரின் திறமையும் கடமையும் அடங்கியுள்ளது.

"உங்கள் பொருள்களும் உங்களின் குழந்தைகளும் (உங்களுக்கு சோதனையே...இந்த சோதனையில் வெற்றி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடம் மிகப் பெரிய மகத்தான கூலி இருக்கிறது (அல்குர்ஆனா 64:15) என்பதனை மனதில் கொண்டு, எல்லாப் பெற்றோர்களும் இஸ்லாம் கூறும் அழகான குழந்தை வளர்ப்பு முறையை நடைமுறை படுத்தினால், வளரும் குழந்தைகள் முழுக்க முழுக்க இறைவனுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அப்பேர்பட்டவர்களில் ஒருவராக நாமும் ஆகி...நமது பிள்ளைகளுக்கு ஒரு உண்மையான முன்மாதிரியாக (ரோல் மாடல்) இருக்கும் பாக்கியத்தை வல்ல இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!!

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு சில உதாரணங்கள் யாருடைய மனதையும் காயபடுத்துவற்க்காக அல்ல.

--- அபு ரய்யான்.

(அல்லாஹ் நாடினால் தொடரும்)

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: Vilack SMA (Hong Shen , Siacun) on 21 February 2012
IP: 218.*.*.* China | Comment Reference Number: 20535

நல்ல , தரமான கட்டுரை .......... பெற்றோர்களுக்கு .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: kmmsiddiq (Chennai) on 21 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20536

மாஷால்லாஹ் சிறப்பான கட்டுரை. ஆபாச படங்களை தன் மடிமேலே பிள்ளையே வைத்து பார்க்கும் காலம் இது. மாதம் மாதம் பைத்துல்மாலுக்கு 100 ரூபாய் கொடுங்கள் என்றால் எங்களிடம் வசதி இல்லை என்பார்கள். ஆனால் கேபிள் டிவிக்கு மட்டும் எங்கிருந்துதான் காசு வருமோ தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: S.A.HABEEB MOHAMED NIZAR (JEDDAH - K.S.A.) on 21 February 2012
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20537

மாசல்லாஹ் , மிக அருமையான கட்டுரை. தற்போதைய நிகழ்வை உணர்த்தி உள்ளார் தம்பி அவர்கள். எல்லா பெற்றோர்களும், இதை படித்து ஒரு கணம் சிந்தித்து செயல் படனும்.

சிறிய வேண்டுதல்: ஐந்தில் விளையாததா ? அல்லது வளயாததா..?

விளக்கம் ப்ளீஸ்...

Administrator: Corrected. Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நல்ல கருத்துக்கள்...
posted by: Koos Aboobacker (Riyadh) on 21 February 2012
IP: 195.*.*.* United Kingdom | Comment Reference Number: 20538

நல்ல கருத்துக்கள்...

இது போன்ற நல்ல கருத்துக்கள் உள்ள கட்டுரைகளை நோட்டீஸ் அடித்து ஊரில் விநியோகம் செய்தால் என்ன?

பெற்றோர்கள் இந்த கருத்துக்களில் ஒரு 50% follow பண்ணினால் கூட நல்ல மாற்றம் வர வாய்ப்பு உண்டு.

இது போன்ற முயற்சிகளுக்கு ஆகும் செலவில் பங்கு கொள்ள விருப்பம் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) on 21 February 2012
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20539

"அஸ்ஸலாமு அலைக்கும்."

உண்மையில் மீண்டும், மீண்டும் படித்தேன். அத்துடன் காப்பி & பேஸ்ட் போட்டு நிறைய நண்பர்ஹளுக்கு அனுப்பி வைத்தேன். தம்பி. சாலையார் எழதிய கட்டுரை "கதை அல்ல நிஜம்." கண்டிபஹா நாம் அனைவர்ஹளும் நம் பிள்ளைஹலை கண்காணித்து வளர்க்க கட்டாயத்தில் உள்ளோம், இன்று உள்ள இயந்திர வாழ்கையில்!

கோடான கோடி நன்றிஹள், இந்த பயனுள்ள தஹவல் அனுப்பிய அமெரிக்க வாழ, காயலர் தம்பி சாளை.மொஹிடீன்.

அன்புடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ்.எச்.- ரியாத். சவுதி அரேபியா.
கவிஞர். ஷேய்க் அப்துல் காதர்.
ஹாபில். சடகதுல்லாஹ்.
மாமா. சாலிஹு. ஜெட்டாஹ். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: Ahamed 48 (Chennai) on 21 February 2012
IP: 121.*.*.* India | Comment Reference Number: 20540

மாஷா அல்லாஹ் மிகவும் அழகான அவசியமான கட்டுரையும் கூட..! Mohideen பாய் தொடரட்டும் உங்கள் குரல். அவசியம் பிரதி எடுத்து நம் தாய்மார்களுக்கு அனுப்ப வேண்டிய ஒரு கட்டுரை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) on 21 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20542

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்! மிக அருமையான கட்டுரை. ஒவ்வொரு பெற்றோர்களும் இதனை படித்து பாடம் பெற வேண்டிய கட்டுரை.

நமதூரில் இன்றைய சூழ்நிலையில் காலையில் பிள்ளைகள் எழுந்த உடன் 6 மணிக்கே tuition க்கு செல்ல கூடிய நிலைமையை பார்க்கிறோம். தாய்மார்களும் tuition க்கு போ என்று அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஓத அனுப்ப வில்லை. பிள்ளைகளுக்கு ஓத தெரிய வில்லை. தொழுக தெரிய வில்லை. அடிப்படை மார்க்க கல்வி கூட தெரியாத சமுதாயமாக உருவாகி கொண்டு இருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் பெற்றோர்களே. நாளை மறுமையில் பெற்றோர்களே தம் குழந்தைகள் வளர்ப்பு குறித்து இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.

இந்த நவீன காலத்தில் தம் குழந்தைகளை வளர்ப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இது போன்ற கட்டுரைகள் நம் மக்களுக்கு மிக மிக அவசியம்.

என் நண்பன் சாளை M.A.C. முஹம்மத் மொஹிதீன் B.E அவர்களுடைய கட்டுரை மிக அருமையாக இருந்தது. இந்த விஷயங்களை நம் ஊர் மக்களும் தெரிந்து தம் வாழ்க்கை முறைகளை மாற்றி தம் குழந்தைகளை நல்ல மக்களாக வளர்ப்பதற்கு இது போன்ற விசயங்களை notice களாக வெளி இட வேண்டும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் கட்டுரைகள் தொடர என் வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: mackie noohuthambi (colombo) on 21 February 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 20543

அருமையான கட்டுரை, ஆனால் இதை படிப்பவர்கள் எத்தனை பேர். பெற்றோர்களிடம் கணினி இல்லை, அதை பார்க்கும் ஆறிவும் அவர்களுக்கு இல்லை. என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். எனது மக்கள் அனுப்பிய மடிக்கணினியில், அதை எப்படிப்பார்க்க வேண்டும் இயக்க வேண்டும் என்ற அறிவை அவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன்.

நல்ல வேலை அல்லாஹ்வின் பேருதவி, எனது மக்கள் புது யுகத்தில் இருக்கும் அதே வேளை இஸ்லாமிய உணர்வுகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். மக்களும் செல்வங்களும் இந்த உலகத்தின் அலங்காரங்கள் என்றும் அவைகளே உங்களுக்கு சோதனைகள் என்றும் அல்லாஹ்வே சொல்கிறான்.

தயவு செய்து உங்கள் கட்டுரைகளோடு நிறுத்தி விடாமல் அடிக்கடி மேடை போட்டு பேசவேண்டும், திருமண மேடைகளில், கந்தூரி விழாக்களில் இவை பகிரங்கமாக பேசப்படவேண்டும். கந்தூரிகள், மீளாது விழாக்கள் கூடுமா கூடாத என்ற சர்ச்சைகளில் இறங்கி அவற்றை ஒரு சாரார் புறக்கணிப்பது இன்னொரு சாராருக்கு தவறு செய்ய வழி வகுத்துக்கொடுத்து விடுகிறது, மாற்றுக்கருத்துகலை இதே மாதிரி விழாக்களில் பேசுங்கள். முல்லை முள்ளால் எடுப்பது போல, வைரத்தை வைரத்தால் அறுப்பது போல.

சில திருமண விழாக்களை சிலர் முற்றாக புறக்கணித்தால், அதன் விளைவு தவறு செய்பவர்களுக்கு துணை போன மாதிரித்தான். என்ன அருமையான கருதுக்கருவூலங்கள் இங்கே கொட்டப்பட்டுள்ளது, இதை குறுந்தகடாக வெளியிட்டு வீட்டுக்கு வீடு கொடுக்க வேண்டும். பிள்ளை பிறந்த வீட்டில் இதை பரிசாக கொடுக்க வேண்டும். AUDIO CASETTE டாக வெளியிட்டால் நிறைய வீடுகளில் TAPE RECORDER இருக்கும் அவர்கள் போட்டுப்பர்பார்கள். காயல் நல மன்றங்கள், நற்பணி மன்றங்கள் இதை செய்யலாம். இந்த இனைய தளத்தின் இயக்குனருக்கு இதன் மூலம் தெரிவிக்கிறேன். நான் இந்தியா ரூபாய் ஆயிரம் தந்து இதனை ஆரம்பிக்க உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

அணிலும் மண் சுமந்தது என்பார்கள். அதே போல் ஆரம்பிப்போம், மலைபோல் பணம் வந்து குவியும் பொறுப்பெடுத்து செய்யத்த்தான் ஆள் வேண்டும். அல்லா உங்கள் முயற்சிகளுக்கு வெற்றியை தருவான். இதனை படிக்கும் மருமகன் SAALIH அவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மக்கி நூஹுதம்பி

0094775131287


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (?????????????) on 21 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20544

உங்கள் கட்டுரை படித்தேன் தற்போது நடைமுறையில் உள்ளதை உள்ளபடி தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்..! எல்லா காலத்துக்கும் ஏற்ற மிக அருமையான கட்டுரை..!

ஆசிரியர்: சாளை M.A.C. முஹம்மத் மொஹிதீன் அவர்களின் கட்டுரை மேலும் தொடர வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) on 21 February 2012
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20545

மிக அழகாக அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் கட்டுரையை தந்துள்ளார். பாராட்டுக்கள்.

பெற்றோரின் கடமை என்ன என்பதே மிக முக்கியம்.

மாணவர்களை பண்படுத்த தான் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் பள்ளியே மாணவனை இந்தகதிக்கும் கொண்டு செல்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இன்றுள்ள சூழ்நிலையில் நன்கு படிக்கும் மாணவனை தலையில் தூக்குவதும், படிப்பில் குறைவானவனை அவமதிப்பதும் இதுபோன்ற செயலுக்கு முக்கிய காரணம்

. ஒரு நேரத்தில் காலையில் மக்களை புனித குர்ஆன் மதரசாவிற்கு அனுப்பி ஓதிய பின் உலக கல்வி பயில அனுப்புவதுதான் நமதூர் மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் வாழும் டவுன், கிராமம், நகரம் என அணைத்து ஊர்களிலும் நடந்தது இன்றோ அது அடியோடு காணவில்லை.

நாமக்கல்லில் நல்ல மதிப்பென்னோடு சென்று படித்தால்தான் மகன் டாக்டராகவோ என்ஜினியராகவோ வருவான் என எதிர்பார்கிரார்க்ளே தவிர மகன் நல்ல மனிதனாக வளர வேண்டும் என்றென்னும் பெற்றோர்களின் சதவிகிதம் மிக சொற்பமே!

நமதூரில் போற்றத்தக்க ஹாமிதியா போன்ற மார்க்க கல்வி நிறவனங்கள் இருப்பதால் நம் மாணவர்கள் பண்படுத்த படுகிறார்கள்.

பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவர் தலைவர் தேர்வு மன்ற தலைவர் தேர்வு என தேர்வு முறையிலேயே வன்முறை, அடி தடி அரங்கேறு கிறது பின்னால் அதுவே அவர்களின் வன்முறை வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகிறது.

மேலை நாடுகளில் மாணவனின் உற்சாகம் எந்த துறயில் இருக்கிறது என்பதனை அவனது இளம் பிராயத்திலேயே அறிந்து அவனது உயர் கல்வியை ஏற்பாடு செய்கிறார்கள் நம் நாட்டிலோ எந்த துறை அதிகம் பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த துறையே பெற்றோர்கள் மாணவர்கள் மீது திணிக்கிறார்கள். இதுவும் பெற்றோர்களின் மனோபாவத்தில் மாற வேண்டும், பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்மக்கள் என பெயர் சொல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: mohamed siraj (Singapore ) on 21 February 2012
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 20546

மிக அருமையான கட்டுரை ....பாராட்டுகள் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: ABUL HASSAN (MORDEN, UK) on 21 February 2012
IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 20548

ஸலாமுன் அலா இபதில்லாஹ்,

மிகவும் அற்புதமான கட்டுரை தம்பி சாளை முஹம்மது முஹைதீன்.

Exactly what our fellow kayalites need at this present situation. Here in the UK lot of Islamic organisation have had organised the Course called How to bring up your children with Islamic value. So, I take this opportunity to insist our Kayal Madaras's and Arabic colleges to organise such a courses in the very near future inshallah. I also encourage our all Kayal organisation to support this kind of Islamic courses (e.g. Tafsir of important and different Surahs from the quran, Seerah Prophet Mohammed (SAW), and the Sahaba's rilwanullah).

Wassalaam,
Abul Hassan
Morden, Greater London
UK


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:எங்கே செல்கிறது நம் மாணவ ...
posted by: H.M. SHAFIULLAH (Chennai-40) on 23 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20560

Fantastic sir. Brother has given life-long valid information to the society in a nutshell. Even a single argument in this essay cannot be omitted. This is up to the society to take it seriously or not.

If any one can circulate this too as hard copy .... !

Regards
SHAFIULLAH
9710008200
Chennai-40


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved