Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:49:10 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 10
#KOTWEM10
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 22, 2012
குழந்​தைக​ளைக் குறி ​வைக்கும் விளம்பரங்களும், விபரீதங்களும்!

இந்த பக்கம் 4545 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

"வாப்பா…! ஹார்லிக்ஸ் வாங்காம வந்துடாதே…" - சாமான்கள் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த தந்தையை நோக்கி 6 வயது மகன் கூறினான்.

ஹார்லிக்ஸ் விலையை யோசித்தபோது மனம் தயங்கினாலும், தந்தைக்கு உள்ளூர ஒரு பூரிப்பு. சாக்லேட் தவிர வேறெதையும் இதுவரை கேட்டிராத பிள்ளை, இன்று சத்தான ஆகாரமான ஹார்லிக்ஸ் வாங்கிக் கேட்கிறானே…

"ஹார்லிக்ஸ் வாங்கித் தரேன். பாலில் கலந்து தந்தால் மடக்கு மடக்குன்னு குடிக்கணும் என்ன…" – இது தந்தை.

உடனே மகன் சொன்னான்: "பாலில் கலக்கி நீயும், உம்மாவும் குடிச்சுக்கங்க. எனக்கு அந்த டிஜிட்ரோனிக்ஸ் வாட்ச் போதும்."

"டிஜிட்ரோனிக்ஸ் வாட்சா…?"

"ஆமா. டி.வி.யில விளம்பரம் பார்க்கலையா? அந்த வாட்ச் என்னா அழகா இருக்கு…! கையில கட்டுனா சூப்பரா இருக்கும்." – மகன் சொல்லி விட்டு துள்ளிக் குதித்தான். வாப்பா வாயடைத்துப் போனார்.

மிட்டாய் வாங்கித் தரவேண்டும், பிஸ்கட் வாங்கித் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது குழந்தைகளுக்குப் புதிதல்ல. ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறி வருகிறது. இன்று வெறுமனே ஒரு சாக்லேட்டையோ, பிஸ்கட்டையோ வாங்கிக் கொடுத்து குழந்தைகளைத் திருப்திப்படுத்திட முடியாது. அவர்களுக்கு இஷ்டப்பட்ட கம்பெனி, இஷ்டப்பட்ட பிராண்ட் தின்பண்டங்கள்தான் வாங்கிக் கொடுக்கவேண்டும்.

இதற்குக் காரணம் இன்று பரவலாகியிருக்கும் விளம்பரங்கள். குறிப்பாக குழந்தைகளைக் குறி வைக்கும் டி.வி. விளம்பரங்கள். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் குழந்தைகளின் மனங்களில் ஆழப் பதிந்து விடுகின்றன.

"எனக்கு நெஸ்லே சாக்லேட்டுதான் ரொம்பப் பிடிக்கும். விளம்பரத்தில் வர்ற நாய்க்குட்டி உடம்புல நட்சத்திரம் மின்னுறது எவ்வளவு அழகா இருக்கு…?" என்று இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை சொல்கிறது. அக்குழந்தை நெஸ்லே சாக்லேட் இல்லாமல் பள்ளிக்கூடமே போவதில்லை.

சாக்லேட்டும், பிஸ்கட்டும் போய் இன்று ஆடைகள் விஷயத்திலும் குழந்தைகளை ஆட்டிப் படைக்கிறது விளம்பரங்கள்.

விளம்பரங்களில் வரும் வாசகங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் அப்படியே பதிந்து விடுகின்றன.

"Boost is the secret of my energy" என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் சொன்னாலும் சொன்னார். இங்கே நமது வீடுகளில் எல்.கே.ஜி. குழந்தைகள் கையில் டம்ளரைப் பிடித்துக்கொண்டு, புஷ்டியைக் காட்டிக்கொண்டு அப்படியே சச்சின் மாதிரி சொல்கின்றன.

இப்போதுள்ள முக்கிய வியாபாரத் தந்திரமே இதுதான். குழந்தைகளுக்குப் பிடிக்கும் பொருட்களை "இலவசம்" என்று இணைத்துக் கொடுப்பது. அப்போதுதான் குழந்தைகள் பெற்றோர்களை நச்சரித்து அந்தச் சாமான்களை வாங்கச் சொல்வார்கள்.

சில பொருட்கள் வாங்கினால் 'டாடூஸ்" (Tatoos) என்ற கையிலும், உடம்பிலும் ஒட்டும் பொருட்களை இலவசமாகக் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்களும், மிருகங்களும், குத்துச்சண்டை வீரர்களின் படங்களும் இன்று டாடூஸாகக் கிடைக்கின்றன. நமக்கே தெரியாத, வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் குழந்தைகள் சரளமாகச் சொல்கின்றன.

கிஸான் (Kissan) ஜாம் வாங்கினால் "போக்கிமான்" கார்டு இலவசம்.

லேய்ஸ் (Lays) வாங்கினால் சேகரித்து வைக்குமாறு தூண்டுகிற டாடூஸ் இலவசம்.

இவைகளெல்லாம் குழந்தைகளிடத்தில் மிகப் பிரபலம்.

டி.வி.எஸ். விக்டர் என்ற இரு சக்கர வாகனம் வந்த புதிதில், "நீ பெரியவனானால் என்ன வண்டி வாங்குவாய்?" என்று ஒரு குழந்தையிடம் கேட்க, "டி.வி.எஸ். விக்டர் வாங்குவேன்" என்று சட்டென்று பதில் வந்தது.

ஏன் என்று கேட்க வாயைத் திறக்கும் முன்பே அடுத்த பதில் வந்தது: "அது டெண்டுல்கர் வண்டி. அவர்தான் எனக்குப் பிடித்த ஸ்டார்!"

பெற்றோர்கள் ஷாப்பிங் செல்லும்பொழுது பிள்ளைகளும் கூடச் செல்கின்றன. பெற்றோர்கள் தங்கள் ‘பட்ஜெட்டு’க்கேற்ப பொருட்களை விலையைப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் மும்முரமாக இருப்பார்கள்.

பிள்ளைகளின் கண்களோ ஆவலாய் அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருக்கும். டி.வி.யில் பார்க்கும் விளம்பரப் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கும்.

இதனால் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் 'கிட்ஸ் ட்ராலி' என்று குழந்தைகளுக்குத் தனியாக ட்ராலி வைத்திருக்கிறார்கள்.

ஷாப்பிங் மட்டுமல்ல. விடுமுறை தினங்களில் எங்கே 'பிக்னிக்' எனும் சிற்றுலா செல்லவேண்டும் என்று இப்பொழுதெல்லாம் தீர்மானிப்பது குழந்தைகள்தான்.

கிஷ்கிந்தாவோ, எம்.ஜி.எம்.மோ, அதிசயமோ, பிளாக் தண்டரோ… எல்லாம் குழந்தைகள் கையில்!

அத்தோடு இன்று டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்கள்.

குழந்தைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சோப்புகள், மருந்துகள், ஏன், வங்கிகள், செல்போன்கள் விளம்பரங்களிலும் குழந்தைகள்தான் முக்கிய கதாபாத்திரங்கள்.

பால் வடியும் குழந்தைகளின் முகங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அத்தோடு குழந்தைகளும் அந்த விளம்பரங்களை விரும்பிப் பார்க்கின்றன. ஆதலால் விளம்பரத்தில் இப்படியொரு தந்திரத்தைக் கையாளுகின்றனர்.

ஒரு குழந்தை ஒரு விளம்பரத்தை விரும்பிப் பார்க்கிறது என்றால் அதற்கு அடுத்த கட்டம் என்பது அந்தப் பொருள் தன் வீட்டில் இருக்க வேண்டும் என்று அது விரும்புவததான். உடனே பெற்றோர்களை அது நச்சரிக்க ஆரம்பித்து விடுகிறது.

இப்படி அந்தப் பொருளின் விற்பனை அதிகரிக்கின்றது. இதற்காகத்தான் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகளைக் குறி வைத்து வெளிவருகின்றன.

அதிகமாக ​தொ​லைக்காட்சி​யைப் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகளில் சிலவற்​றைத்தான்​ மே​லே கண்​டோம்.

​தொடர்ந்து ​தொ​லைக்காட்சி​யைப் பார்க்கும் குழந்​தைகளுக்கு ஒருமுகத்திறன் (Concentration Power) படு​வேகமாகக் கு​றைகிறது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அந்தக் குழந்​தைகளால் வகுப்புகளில் ​தொடர்ந்து பாடங்க​ளைக் கவனிக்க முடியவில்​லை.

​குழந்​தைகள் அவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன் படங்க​ளைப் பார்ப்பதில் தவறில்​லை. ஆனால் ஒரு நா​ளைக்கு குறிப்பிட்ட மணித்துளிகள்தான் ​தொ​லைக்காட்சி​யைப் பார்க்க​ குழந்​தைக​ளை அனுமதிக்க​வேண்டும். இதில் ​​பெற்​றோர்கள் எப்​பொழுதும் மிகக் கண்டிப்பாக இருக்க ​வேண்டும்.

​பொது அறி​வை வளர்க்கக் கூடிய ​சேனல்க​ளையும், அறிவியல் ​சேனல்க​ளையும் பார்க்க குழந்​தைகளுக்கு ஆர்வம் ஊட்ட ​வேண்டும். கார்ட்டூன் க​தைக​ளை ​தொ​லைக்காட்சியில் பார்ப்ப​தை விட புத்தகமாகப் படிக்கக் ​கொடுத்தால் இன்னும் நல்லது. இது குழந்​தைகளின் வாசிப்புப் பழக்க​த்​தை அதிகரிக்கும்.

​தொ​லைக்காட்சி​யை அதிகமாகப் பார்க்கும் குழந்​தைகள் அதி​லே​யே மும்முரமாக ஒன்றிப்​ ​போய் விடுவ​தைப் பார்க்கி​றோம். அந்தச் சமயத்தில் ​வெளியிலிருந்து யாரும் வீட்டுக்கு வந்தாலும் குழந்​தைகள் அவர்களிடம் முகம்​​கொடுத்துப்​ பேசுவதில்​லை. ​வைத்த கண் வாங்காமல்​ தொ​லைக்காட்சி​யை​யே பார்த்துக்​ ​கொண்டிருக்கும்.

இப்படி பிறரிடம் முகம் ​கொடுத்துப் ​பேசாமல் வளரும் குழந்​தைகள் கூச்ச சுபாவம் உ​டையவர்களாகவும், தன்னம்பிக்​கை கு​றைந்தவர்களாகவும் பிற்காலத்தில் இருப்பார்கள் என்று கண்டறிந்துள்ளார்கள்.

இவர்களால் ஒரு கூட்டத்தி​லோ​ மே​டையி​லோ​ பேச​வே முடியாது. திருமணம் ​போன்ற மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் ஒதுங்கி​யே இருப்பார்கள். வி​ரைவில் அந்த இடத்​தை விட்டு அகல​வே முயல்வார்கள். எந்தக் காரியத்​தைச் ​செய்ய எண்ணினாலும் அவர்களுக்கு முதலில் வருவது தயக்கம்! இது தன்னம்பிக்​கைக் கு​றைவினால் ஏற்படுவது.

பிற்காலத்தில் குழந்​தைகள் இப்படி பாதிப்ப​டையாமல் இருக்க நாம் இப்​​பொழு​தே கவனமாக இருக்க ​வேண்டும். வீட்டுக்கு விருந்தாளி​க​ளோ​ தெரிந்தவர்க​ளோ வந்தால் அவ்வமயம் குழந்​தைகள்​ தொ​லைக்காட்சி​யைப் பார்த்துக் கொண்டிருந்தால் உட​னே நாம் ​செய்ய ​வேண்டியது - அத​​னை அ​ணைப்பதுதான்!

அத்​தோடு வீட்டுக்கு வந்தவர்களிடம் குழந்​தைக​ளை அ​ழைத்து அறிமுகப்படுத்த ​வேண்டும். அப்படி அறிமுகப்படுத்தும் ​பொழுது குழந்​தைக​ளிடம் உள்ள நல்ல குணங்க​ளையும், அவர்கள் ​செய்த நல்ல காரியங்க​ளையும் ​சொல்லிக் காட்ட ​வேண்டும்.

வீட்டுக்கு வந்த விருந்தாளிகளின் ​நேரத்தில் சிறி​தை இப்படி குழந்​தைகளுக்காகவும் நாம் எடுத்துக்​ ​கொள்ள​ வேண்டும். இது குழந்​தைகளுக்கு உள்ளூற தன்னம்பிக்​கை​யை ஏற்படுத்தும். அத்​தோடு குழந்​தைகள் அந்நியர்களுடன் அளவளாவும் ​பொழுது அவர்களது கூச்ச சுபாவமும் ​மெல்ல​ மெல்ல ம​றையும்.

இந்தப் பழக்கம் குழந்​தைகளின் எதிர்காலத்​தை ஒளி மிக்கதாக ஆக்கும்!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தேவையான ஆழமான கருத்துகள்...
posted by: Mohamed Buhary (Chennai) on 22 February 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20549

மதிப்பிற்குரிய சகோதரர் MSAH அவர்களின் “குழந்தைகளைக் குறிவைக்கும் விளம்பரங்களும், விபரீதங்களும்” காலத்தின் தேவை கருதி வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் ஆண்டுத் தேர்வு தொடங்கப்படவுள்ளது. குழந்தைகளிடம் பெற்றோர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான குறிப்புகள் உள்ளன. பெற்றோர் உரியமுறையில் கண்காணித்து இவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அண்மையில் நாம் எல்லோரும் அதிர்ச்சியடைந்த ஒரு செய்தி:

சென்னையில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தன் வகுப்பாசிரியரையே கத்தியால் குத்தி கொன்றான். சரியாகப் படிக்கவில்லை என ஆசிரியர் கண்டித்து பெற்றோரை வரவழைத்ததே இதற்கான காரணம் என வாக்குமூலத்தில் கூறியுள்ளான். இவ்வாறு அவனைத் தூண்டியது தொலைக்காட்சியும், அதில் வரும் தவறான காட்சிகளும்தான். அவனது பெற்றோர் அவனைத் தாராளமாக விட்டுவிட்டனர். கேட்டதை வாங்கிக் கொடுத்து கெடுத்துவிட்டனர். இப்போது வெட்கிக் குறுகி வேதனைப்படுகின்றனர்.

எனவே, ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளைக் கண்காணித்தே ஆக வேண்டும்.

சகோதரர், அப்துல் ஹமீத் இதுபோன்ற விழிப்புணர்வு கருத்துகளை இத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அல்லாஹ் அவருக்கு அதற்கான ஆற்றல்களை அளிப்பானாக...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில். (?????????????) on 22 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20550

குழந்​தைக​ளைக் குறி ​வைக்கும் விளம்பரங்களும், விபரீதங்களும்! கட்டுரை மிக தெளிவாக உள்ளது... இந்த கட்டுரையை படிக்கும் பெற்றோர்கள் (நான் உட்பட) இதில் படிப்பினை பெற வேண்டும்... இன்று விளம்பரத்தால் குழந்தைகள் பாதிக்க படுவது உண்மை நாம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்..

எனது பள்ளி பருவ கால நண்பர் சகோதரர் எம்.எஸ்.அப்துல் ஹமீது அவர்கள் இந்த கட்டுரையை எழுதியமைக்காக நான் பெருமை படுகிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: palappa muhiyyadhdheen abdhul kaathar (chennai) on 22 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20551

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹித்த ஆலா வ பரகாத்தஹு.

சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய குழந்தைகள் பற்றிய கட்டுரை இன்றைய பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறைக்கு ஒரு சிறந்த அறிவுரையாக மட்டுமல்லாமல் தொலைக் காட்சி எந்த அளவு தொல்லைக் காட்சியாக அமைகின்றது என்பதை பெற்றோர்கள் மனதில் நிறுத்தி செயல்பட்டால் பெற்றோர்களின் சுமை குறைவதொடல்லாமல் பிள்ளைகளுக்கம் ஒரு சிறந்த எதிர் காலத்தை அமைத்து கொடுக்கலாம்.இதன்படி செயல்பட வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை புரிவானாகவும் ஆமீன்! எனப் பிரார்த்தித்தவனாக எனது விமர்சனத்தை நிறைவு செய்கின்றேன்.

வஸ்ஸலாம்!
இவண்
பாலப்பா அ.கா.முஹிய்யத்தீன் அப்துல் காதர்,
த/பெ பாலப்பா செ.மு.பு.அபுல் காசிம் ,
45/93,சொளுக்கார் தெரு,
காயல் பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: s.l shahul hameed (calicut) on 22 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20553

அஸ்ஸலாமு அழைக்கும் உன்னுடைய இக்கட்டுரை வாசித்து அளவில்லா சந்தோசம் மேலும் மேலும் இது போல் கட்டுரை எழுத இறைவன் அருள்புரிவானாஹா ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 23 February 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20556

விளம்பரங்களை கண்டு மோகிப்பது குழந்தைகளுக்கு மட்டும் உரியதொன்றல்ல. இதன் ஆதர்ச வழிகாட்டியே பெரியவர்கள்தான். குழந்தைகள் எதையுமே எளிதில் உள்வாங்கி கொள்பவர்கள். ஆனால் பெரியவர்களுக்கு என்ன கேடு...?ஒரு பொருளோடு இலவசமாக தரப்படும் இன்னொரு பொருளுக்காகவே தேவையில்லாமல் அந்த பொருளை வாங்கும் பெரியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த இலவச இணைப்பு இல்லை எனில் தேவை இருந்தாலும் கூட அந்த பொருளை வாங்காமல் செல்லும் பெரியவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

ஆக இங்கு தேவை பொருள் அல்ல இலவசம்தான். அந்த காலத்தில் "ஈயம் பித்தாளை. பேரீச்சம் பழம்..கார சேவுக்கு பழைய புடவை என கூறி வருவான். நம் தாய்மார்கள் உடுத்து கிழிந்த சேலைகளை அவனிடம் போட்டு காரசேவு வாங்கி தின்பார்கள். இதன் அடிப்படை என்ன...?ஒரு அரைக்கிலோ காரசேவு வாங்கி தின்ன வழி இல்லாததாலா..?ஒரு போதும் அது காரணம் இல்லை. காசு கொடுக்காமல் இலவசமாக ஒரு பொருள் கிடைத்தால் அதில் ஒரு அற்ப சந்தோசம் நமக்கு. இது ஒரு விதமான மனோவியல். இதை சரியாக பயன் படுத்திக்கொண்டுதான் நமது அரசியல்வாதிகள் இலவசம் கொடுத்து நம் கையிலிருந்து வாக்குசீட்டை பிடுங்குகிறார்கள்.

வியாபாரிகள் தனக்கு வியாபாரமாக எல்லாவித கண்கட்டு வித்தைகளையும் காட்டுவார்கள். அதில் ஒரு கண்கட்டு வித்தைதான் இந்த இலவசம்.

பெரியவர்களே மதிமயங்கி நிற்கும் போது பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: aysha mahmood (bahrain) on 23 February 2012
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 20557

நல்ல கட்டுரை படித்து விட்டு அப்படியே விட்டு விடாமல் இதிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற வழி செய்ய வேண்டும். குழந்தைகளை TV லேர்ந்து காப்பற்ற மிகவும் சிரம பட வேண்டியுள்ளது சேனல்களில் வரும் சீரியல் படங்கள் விளம்பரங்களிலிருந்து காப்பாற்றி கார்டூனயவது பாக்கலாம் என்றல் அதிலேயும் இப்படி பட்ட விளம்பரங்கள் என்னதான் செய்வது .நாம் எவ்வளவு சிரமபட்டலும் சரி குழந்தைகளை நல்வழி படுத்துவது நமது கடமை எனவே அவர்ஹளை எப்பொழுதும் புச்ச்யஹவே வைத்துகொள்ள வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: H.M. SHAFIULLAH (Chennai-40) on 23 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20559

The essay is mandatory to read by all. This is written by MSAH on a right time. The information’s given in this essay practically true and everyone should feel the same what the author's mind set. This is practicing by me out of my offsprings. Though TV is an essential part of our life, there is a fifty-fifty chance to good and evil. Human psychology will accept easily two things: firstly “majority” and secondly “bad things”.

If we are not capable of handling this media on right direction, we should avoid fifty percent well too on the other hand. I want to emphasis here to educate our children about the danger of those attractive advertisements.

This type of essays should be circulated on Fridays through bit notices that will reach nook and corner since not more than 5% of the peoples accessed net in rural side.

I wish MSAH to continue his journey in terms of well-beings of society.

Hats off to MSAH.

Regards
SHAFIULLAH
9710008200


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: SULAIMAN SAIT (Kumbakonam) on 27 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20565

இதற்க்கு மாற்று வழி என்ன என்பதையும் டிஷ்கஷனுக்கு விட்டு ஒரு நல்ல முடிவுக்கு வாங்க பிரதர் .நாங்களும் தெருஞ்சுக்குவோம்ல .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: S.L Kadijath (mom) and family (Calicut) on 27 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20566

அஸ்ஸலாமு அலைக்கும் . மாஷா அல்லாஹ் ! உன்னுடைய கட்டுரையை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தோம் . கட்டுரையின் கருத்துக்கள் அனைத்தும் மிக அருமை . நன்மைகள் தரும் விஷயங்கள் பல, சமுதாயதிற்கு தந்ததற்கும், இன்னும் ஷய்தானின் மாய வலைகளில் சிக்கிக்கொண்டிருக்கும் சிறார்களை விடுவிக்க உனது கட்டுரைகள் உதவும் . இன்ஷா அல்லாஹ் . அல்லாஹ் உனக்கு ஆரோக்யத்தையும் நீண்ட ஆயுளையும் தந்தருல்வானாஹா ! ஆமீன் !

- : தாயார், தங்கை,தம்பி & குடும்பத்தார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: ஒ..நூருல் அமீன் (??????) on 28 February 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20567

காலத்தின் தேவைக்கேற்ற அருமையான கட்டுரை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: HARUN ABDULKADAR (madurai ) on 29 February 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20571

இந்த மாதிரியான கருத்துகள் என் மனதிலும் அதிகமாக இருந்தாலும் அதனை செயல் வடிவத்திற்கு கொண்டு வந்திருகிறீர்கள் அல்லாஹ உங்களுக்கு மறுமையில் நற்கூலி தருவனாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: Ashiq (Dubai) on 08 March 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20619

நீங்கள் சொல்லியது அனைத்தும் உண்மை. இதனை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வது நம் கடமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:குழந்​தைக​ளைக் குறி ​வைக்...
posted by: mubharak (dubai) on 12 July 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20827

அஸ்ஸலாமு அழைக்கும்...எனக்கு மிகவும் விருப்பமான சகோதரரே உங்கள் அணைத்து எழுத்துகளையும் விருப்பும் ரசிகன் ...எழுதுகள் தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved