Re:கூடங்குளமும், காயல்பட்டின... posted byஅமீர் சுல்தான் (????? ???????)[02 March 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20581
அணுஉலை கூடாது என்ற போராட்டம் தேவையற்றது; கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் செயல்பட வேண்டும் - இ.யூ. முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன். இந்த அறிக்கையை பத்திரிகையில் பார்த்தபோது சற்று அதிர்ச்சிதான். இருந்தாலும் மக்களின்மீது அக்கறை கொள்ளாத சாதாரண அரசியல்வாதிதானே அவரும் என்ற மனநிலையே ஏற்பட்டது. அது போன்றே இந்த லீக்கினர் காயலிலும் விவாதிக்க இருக்கும் நிலையில் அணுஉலை பற்றிய புள்ளி விபரங்களோடு எழுதப்பட்ட சகோதரர் பசீர் அவர்களின் கட்டுரை மிக்க தேவையானதே.
இது தொடர்பான கருத்தை பதிவுசெய்த சகோதரர் ஹபீப் ரஹ்மான் அணு உலையின் விபரீதங்கள் பற்றி அறியவில்லையோ என்ற சந்தேகம்தான் எழுகின்றது.
அனல் மின் நிலையத்தை அணு உலையோடு ஒப்பீடு செய்யும் போது அணு உலையின் விபரீதம் மிகக் கொடுரமானது. அலைஉலையின் கழிவுகள் 48 ஆயிரம் ஆண்டுகள் வீரியமிக்கது. அதனை அழிக்க முடியாது. கழிவுகளை கையாளும் விதம்பற்றியும் இன்னும் தெளிவில்லை. கான்கீரீட் அடைப்புக்குள் வைத்து கடலில் தாக்கப்போவதாகவும் பரவலான செய்திகள்.இருப்பினும் அதன் கதிரியக்கத்தை கட்டுப்படுத்த முடியாது.(DCW வினால் அவ்வப்போது நமது கடல் செங்கடலாகும் ..அதைவிட பல ஆயிரம் இல்லை இல்லை கோடி மடங்கு அபாயமானது அணு உலை கழிவுகள்..)
30 , 40 ஆண்டுகள் பயன்படுத்திய பின் அதனைஉலைகளை சாதரணமாக மூடிவிட்டு சென்றவிட முடியாது அதனை பல ஆண்டுகள் பல கோடி செலவிலே பாதுகாக்க வேண்டும். இந்த உலை நம்மையும் அழிக்கும் நம்முடைய சந்ததிக்கும் உலை வைக்கும்.
இன்றைய மின்வெட்டு இது செயல்படாததால் அல்ல...இது மத்திய மாநில அரசுகளின் சதி. மேலும் ஒருவேளை இன்று முதல் செயல்பட ஆரம்பித்தாலும் இதிலிருந்து மின்சாரம் கிடைக்க இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும்.
அதுபோன்று அப்பாவியாய் ஒரு கேள்வியையும் தொடுத்திருக்கின்றார் சகோ.ஹபீப் ரஹ்மான் அவர்கள். 25 ஆண்டுக்கு முன் ஏன் எதிர்க்கவில்லை என்று..
அன்றே ஒவ்வொருவரும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கத்தான் செய்தனர். ஆனால் அந்தப் போராட்டங்கள் ஒருங்கினணக்கப்படவில்லை. அணுஉலையின் விபரீதமும் அந்த மக்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இடிந்தகரை ஒரு கிராமம்.
மேலும் இது அங்குள்ள மக்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளும் நில மதிப்பு உயர்தல் போன்ற தற்காலிக நன்மைகள் பின்வரும் விளைவுகளை மறைத்திருக்கக் கூடும்.
புகுஷிமா அணுஉலையின் விபத்திற்குபின் அதன் பேரழிவு பரவலாக பேசப்பட்டது. அணுஉலை பற்றிய விழிப்புணர்வும் எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டது, அதனால் அதனை எதிர்கின்றனர்.
௧.இந்தியாவில் பலகோடி செலவில் ஆரம்பிக்கப்பட்ட சேது சமுத்திர திட்டம் போலி மத நம்பிக்கை அடிப்படையில் கைவிடப்பட்டதே! இது நமனைவரும் அறிந்ததே.
௨. பல இலட்சம் கோடிகள் 2 ஜி யில் கொள்ளையடிக்கப்பட்டதே அந்தப்பணத்தை கொண்டு இதுவரை எந்த முயற்ச்சிகளும் எடுக்கப்படவில்லையே
௩.அடுத்தடுத்த விசாரணைகளில் உள்ள பல கோடி கொள்ளை, கருப்பு பணம், நில மோசடி, வரிபாக்கி இப்படி ஏராளம் கோடிகள் விரயமாகிக் கொண்டுதானே இருக்கின்றது.... அது போன்று சந்ததிகளை கொல்லும் திட்டத்தை தடுப்பதில் ஏற்பட்ட கோடிகள் ஒன்றும் இழப்பாக தெரியவில்லை.
கல்வியாளர்களும் பணமுதலைகளும் நிறைந்த காயல் பதியில் DCW அணுதித்துள்ளோமே...அதனால் கேன்சரும் கொடிய நோய்களும் ஏற்படும்போது இப்போது எதிர்கின்றோமே இதுபற்றிய தங்களது கருத்து...
DCW க்கு எதிராக தொடரான. பரவலானதொரு போராட்டத்தை தாங்களும் ஆரம்பியுங்கள் மகஇக கூடங்குளத்தில் மட்டுமல்ல கல்பாக்கத்திலே தங்களுக்காக நிதி திரட்டி தருவார்கள். . போராட்டம் வீரியமடையும் போது ஒரு உதயகுமாரல்ல பல உதயகுமார்கள் வருவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross