எல்லா முறைகளிலும் (source of energy ) ஹை-டெக்னாலஜி நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் தான் இருக்கிறது posted byLebbai (Riyadh)[04 March 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20595
அன்பு நிறைந்த ஜாபர் காக்கா, தங்களின் கருத்துக்களை அடிக்கடி இந்த இணையதளத்தில் நான் பார்த்து ரசிப்பவன்.
சிரமங்களும் சிக்கலுமே நிறைந்ததை விட ஆபத்து நிறைந்த இலகுவானதையே தேர்ந்தெடுக்கிறோம், என்று அணு உலைக்கு ஆதரவாக தங்கள் கருத்து உள்ளது.
98 % மின்சார தயாரிப்பாளர்கள் ஏன் அணு சாராத மின் நிலையங்கள் பயன்படுத்தி மின் தயாரக்கிறார்கள்.
“அணு” வால் வெறும் இரு சதவித மின்சாரம் மட்டும் இன்று இந்த உலகம் பெற்று கொண்டு, ஏனைய 98 % மின்சாரம் மற்ற அணு சாராத மின் நிலையங்களில் இருந்து தானே இன்றைய நவீன உலகத்தில் அனுபவித்து கொண்டு இருக்கிறோம். அணுமின் தான் இன்றைய முக்கிய தேவை என்பதெல்லாம் வெறும் மாயை.
அணுமின் நிலையம் இல்லாமலேயே சவுதி போன்ற நாடுகளில் மின்சார தேவை பூர்த்தி செய்து தன்னிறைவு பெற்றுள்ளது ஊர்ஜிதம்.
சவுதி அரேபியாவில் வெகு தூரத்திலுள்ள பாலைவன கிராமங்களில், தயாரித்த மின்சாரத்தை அனுப்புவதில் சிரமம், சிக்கல் இருப்பதால் தற்காலிகமாக, தாங்கள் சொல்லுவதுபோல் சுய ஜெனரேட்டர் கொண்டு மின்சார தேவையை பூர்த்தி செய்கிறது அரசு. (In KSA, there are difficulties in transmitting the generated power to the remote villages due to non-availability of nearby sub-staions). தற்போது, அதுவும் படிப்படியாக அங்கங்கே பவர் பிளான்ட் அமைத்து நிவர்த்தி செய்கிறார்கள் (எல்லாம் அணு சாரா மின் உற்பத்தி தான்). நம் நாட்டில் எத்தனை வசதி இருந்தும் ஊழல் அரசியல் வாதி இருக்கும் வரை இந்த மின்சாரதடைக்கு ஒரு முடிவே வராது (அது கூடங்குளம் மின்நிலையம் வந்தாலும் சரியே).
அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே போகிறது. ஆம், நாம் அதன் வேகத்தில் ஒத்துத்தான் போகணும். போக்குவரத்து என்று எடுத்துகொண்டால், ஒரு காலத்தில் சைக்கிள் தான் சென்றோம், இப்பொது விமானத்தில் பறக்கிறோம், பயந்து கொண்டு இருந்தால் முடியுமா?
என் ஒரு நண்பர், நமக்கு தலைக்கு மேல் வீட்டில் மின்சாரம் ஓடுகிறது? வீட்டில் காஸ் உபயோகிக்கவிலையா? என்று வினா தொடுக்கிறார்.
விமானத்தில் போங்கள், அதே நேரம் "கடுமையான மேகமூட்டம்" உள்ள நேரத்தில் விமானிகள் யாரும் விமானத்தை இயக்க மாட்டார்கள். அது மிக பெரிய ரிஸ்க் (Unknown Risk ).
அதை தான் இங்கே சொல்லுகிறோம். விமானத்தில் / கப்பலில் எல்லோரும் பயணம் செய்வோம்; ஆனால் கடுமையான மேகமூட்டம், பேரலை சமயத்தில் தவிர்த்து விடுவோம். அது மிக பெரிய ரிஸ்க் (Unknown Risk ).
இந்த அறியப்படாத ரிஸ்க் அணு மின் உற்பத்தியில் தான் மிக மிக அதிகம். ஏனைய மின் உற்பத்தியில் இருந்தாலும், அதை ஒரு கட்டுக்குள் இலேசாக கொண்டு வர முடியும்.
நீராவி, புவிவெப்ப ஆற்றல், தாவரங்கள், எரிவாயு, காற்று, நீர், நிலக்கரி, புதைபடிவ எரிபொருள் போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம். எல்லா முறைகளிலும் (source of energy ) ஹை-டெக்னாலஜி நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. ஏன் அதை எல்லாம் விட்டு விட்டு, அணு சார்ந்த ஹை-டெக்னாலஜி தான் வேண்டும் என்று சொல்லணும்.
கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கு செலவழித்த பெரும் தொகையை நஷ்டத்திலிருந்து மீள, அரசு நினைத்தால் அதன் பயன்பாடு முறையை அணுவிலிருந்து மற்ற முறைக்கு மாற்றி பெரும் நஷ்டம் தவிர்க்க முடியும்.
இந்த அணுமின் நிலையமே, பிசினஸ் motive தான், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், நம் அரசியல்வாதிகளுக்கும்.
சுருங்க சொன்னால்,
மின்சாரம் வேண்டும்; விமானம் வேண்டுவதுபோல், அணுவால் உற்பத்தியாகும் மின்சாரம் முடிந்தவரை தவிர்ப்போம்; கடும் மேகமூட்டத்தில் விமானம் பயணம் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பது போல். (let's avoid unknown risks).
டாக்டர் அப்துல் கலாம், பல விஞ்ஞானிகள்,பொறியாளர்கள் இன்று இதன் தன்மை குறித்து சர்டிபிகேட் தரலாம். இன்னும் பல வருடம் கழித்து, இதன் செயல்பாடு, பராமரிப்பு என்று வரும்போது, சிறு தவறே பேரழிவு ஏற்படுத்த வாய்ப்புண்டு. மனித தவறு என்பது இயல்பு. அல்லாஹ் பாதுகாப்பான்.
சிந்தனைக்கு - நம் வீட்டு மின்சாதனங்கள் மின்அணுவால் தயாரித்த மின்சாரம் கொடுத்தால் தான் வேலை செய்வோம் என்று அடம் புடிக்காது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross