Re:கூடங்குளமும், காயல்பட்டின... posted byhabeeb rahman (abu dhabi)[06 March 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20614
நண்பர் பஷீர் அவர்களின் கட்டுரையை படிக்கும்போது ஒரு சந்தேகம் எழுகின்றது! கட்டுரையாளரின் நோக்கம் அணு உலையை ஓய்பதா? இல்லை முஸ்லிம்லீக்கை ஒழித்து கட்டுவதா?நாம் ஒரு கட்டுரையை எழுதும்போது செயல் பாட்டின் மீது கவனம் இருந்தால் நடு நிலை இருக்கும்!செய்தவர்கள் மீது இருந்தாலோ? இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம்.... ப்ளீஸ்!
அவரின் கணக்குகள் கேற்பதுக்கு provoking ஆகத்தான் இருக்கின்றது. ஆனால் இந்த கணக்குகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதும், அது மற்ற கணக்குகளுடன் ஒப்பிட்டு கூட்டிகழித்து பார்க்க பட்டதா என்பதும் சந்தேகமே! நமக்கு தேவை இங்கு Provoking mentality அல்ல,மாறாக நாலையும் சேர்த்து பார்த்து நடை முறை சத்தியங்களை உணர்ந்து செயல்படும் maturity தான்! பஷீர் பல கணக்குகளை காட்டி கூடம்குளத்தில் எடுக்கும் மின்சாரம் ஜுஜுபி என்கிறார். கம்மென்ட் பகுதியில், லெப்பை வேறு சில கணக்குகளை காட்டி அது பூதம் என்கிறார். எதை நம்புவது? (லெப்பை அவர்களே, நீங்கள் எல்லா கமெண்ட்ஸ் சேர்த்து ஒன்றாகவே சொல்லலாம், பிட்டு பிட்டாக பிரிக்க தேவை இல்லை)
நம் நாட்டில் விடுங்கள்! மனித உரிமைகளை தலையில் தூக்கி நடக்கும் பிரான்ஸ் ஜேர்மனி நாடுகளில் இன்று வரை ஏன் அணு உலையை கொண்டு அதிக மின்சாரம் தயாரிகின்றார்கள்? புகொசிமா சம்பவத்திற்கு பின் இழுத்து மூடியிருக்கலமே? ஏன் அது முடியும் வரை காத்திருக்க வேண்டும்? நேற்று இன்கிர்ந்து வெளியாகும் பத்திரிகையில் ஒரு கட்டுரையை படித்தேன். சொடுக் என்றது! பெட்ரோல் எரிப்பதைகாட்டிலும் பல மடங்கு கார்பன்கள் வெளியாவது நிலக்கரியை எரிப்பதினால்தான். சுருங்க சொல்லின் பல்லாயிரம் ஊர்திகளில்றுந்து வரும் புகையை விட மோசமானது சில அனல் மின் நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகளிருந்து வரும் புகைதான்!
ப்ரோவோகிங் முடிவுக்கு போகும் முன் நாலையும் கேளுங்க!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross