ஆதங்கம் , வேதனை - எமக்கும் ஏற்படுகிறது. posted byN.S.E. மஹ்மூது (????????????)[11 March 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20623
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
" சாதனையா? சோதனையா? " சிந்திக்க வைக்கிறது சகோதரர் இப்னு அப்பாஸ் அவர்களின் இந்த கட்டுரை.
பாதுகாத்து வைக்க வேண்டிய, பிறர் பயனடைய வேண்டிய நல்ல நூல்களை குப்பைகளிலும், பழைய பேப்பர் கடைகளிலும் போடும் நமது மக்களை பற்றிய அவர்களின் ஆதங்கம் , வேதனை - எமக்கும் ஏற்படுகிறது.
நீங்கள் என்னதான், எவ்வளவுதான் செய்திகளையும், சரித்திரங்களையும், கல்வியையும் இன்றைய விஞ்ஞான கண்டு பிடிப்புகள் மூலமாக கம்பியூட்டர் , மொபைல் இன்னும் பல வழிகளிலும் படித்தாலும் புத்தகத்தின் மூலம் படித்ததற்கு ஈடாகாது.
புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால் அது வாழ்வில் நல்ல பல முன்னேற்றங்களை , பொறுமையை , சகிப்புத் தன்மையை கொடுக்கும் என்பதை உணரலாம்.
----------------------------------------------
வேண்டுகோள் :
தயவு செய்து யாரிடமாவது பழைய நூல்கள் , வரலாறுகள் இருந்தால் அவைகளை குப்பைகளில் வீச வேண்டாம் - பழைய பேப்பர் கடைகளிலும் போடவேண்டாம் நூல் நிலையங்களுக்கு கொடுத்து உதவுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross