Re:விண்ணை முட்டும் செயற்கை ந... posted byVilack SMA (Hong Shen , Siacun)[16 March 2012] IP: 218.*.*.* China | Comment Reference Number: 20635
தம்பி MAC அவர்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு நம்ம ஊர் " நிலம் " பற்றி எழுதி இருக்கிறார் . தம்பி , நீங்க சொல்வது அத்தனையும் உண்மைதான் .
உங்களது அடுத்த கட்டுரை என்னவாக இருக்கும் என்பதை இப்போதே ஓரளவு கணித்து விட்டேன் . நம்ம ஊர் கோழி மார்க்கெட் , மீன் மார்க்கெட் பற்றிதானே எழுதப்போறீங்க ? ஒருமுறை லீவில் ஊர் வந்தபோது , காலை நேரத்தில் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் கோழி மார்க்கெட் பக்கம் கொஞ்சம் எட்டி பார்த்தேன் . ஒரு கோழிக்குஞ்சின் விலையை கேட்டதும் மயக்கமே வந்துட்டுது . என்னப்பா வாங்குறியா என்றதும் , இல்லேப்பா , சும்மா விசாரிச்சேன் என்று சொல்லி மெதுவா நடையை கட்டிட்டேன் .
என் உறவினர் ஒருவர் சொன்னது , ஒருமுறை சவூதி லீவில் வந்தவர் ஒருவர் , இரு கையிலும் கோழியுடன் வரும்போது , உறவினர் அவரிடம் , கோழி என்ன விலைக்கு வாங்கினாய் என்று கேட்க , அவரோ ஒரு விலையை சொல்ல , என் உறவினர் , விலை ரொம்ப அதிகமாச்சே என்று சொல்ல , அதற்க்கு அவரோ , " இப்படி விலையை விசாரிச்சொம்னா என்னோட ரெண்டு மாச லீவும் பாழாகி விடும் , உங்க வேலையை பாருங்க " ன்னு சொன்னாராம் . எப்படி இருக்கு பாத்தியளா ?
என்ன விலை கொடுத்தாலும் வாங்கியே ஆகணும்னு இருக்கும்போது , நீங்க எதுக்கு தம்பி கவலை படுறீங்க ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross