Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச... posted byALS mama (Kayalpatnam)[05 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20699
அஸ்ஸலாமு அழைக்கும்,
சப்த அலையின்(டெசிபெல்) குறித்து உங்களின் 130 வரி தொடர் கண்டேன் மிக சிறப்பாக காதில் ரீங்கரமிட்டது. இந்த ஒலிமாசு தொல்லைகளை தினந்தோறும் அனுபவிப்பவர்கள் KTM தெரு, சின்ன நெசவு தெரு மற்றும் பஜாரில் குடி இருப்பவர்கள் இரு வழி பாதையாக இருக்கும் போது கடுமையான கஷ்டத்தை அனுபவித்து வந்தோம்.
இது போல் ஒரு கட்டுரையை நான் எழுதி வெளி இட ஆசை பட்டேன் அதனால் அரசு நூலகம் சென்று இது சமந்தமான நூலை
தேடி படிக்க ஆர்வம் காட்டி வந்தேன். இதற்கு இடையில் தம்பி S K ஸாலிஹ் அன்பு தொல்லையால் சாதனையா சோதனையா இன்ற கட்டுரை எழுத மாறி சென்று விட்டேன் எனது தொடர் மூன்றும் மார்ச் 11 - 16 - 27 இல் வெளியானது அனைத்தும் உண்மை சம்பவங்கள்.
இணைய வாசகர்களின் இதயங்களின் இடம் பிடிக்க நாம்(எழுத்தாளர்கள்) புதிய யுக்திகளை சிறப்பான செய்திகளை ஆதாரங்களோடு தேடி வைக்கும் போது அந்த கட்டுரை சிறப்படைகிறது. இந்த வித்தைகளை எனது பேனா முனை ஓரளவு வயதால் தெரிந்து இருக்கிறது.
ஓலி மாசு கட்டுரையின் பிரதியை நமது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பார்வைக்கும் நமது காவல்துறை ஐயா பார்த்திபன் அவர்களின் பார்வைக்கும் நமது நகராச்சி தலைவி ஆபிதா அவர்கள் பார்வைக்கும் இந்த கட்டுரையின் சாராம்சம் அவசியம் கொண்டுசெல்ல வேண்டும் ஏன் என்றால் தெற்கே செல்லும் பேருந்துகள் நர்கிச்பானு மருத்துவமனை ஷிபா மருத்துவமனை மற்றும் KMT மருத்துவமனை தாண்டி செல்லும் போது நோயாளிகள் ஒலிமாசு(டெசிபெல்) அதிகமாக இருப்பதால் பாதிக்க படுகிறார்கள்.
வாகன ஓட்டிகள் மக்களின் நலன்களை கவனிப்பது இல்லை ஊருக்குள் ஏர்ஹாரன் அடிப்பது கூடாது வாகனகளில் எழுதி இருந்தும் வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு பயபடுவது இல்லை. இதன் காரணமாக நமது காதின் செவிப்பறைகள் தினம் தினம் ஓலி மசுவால் சேத படுவதை கட்டுரையாளர் N S E மகமூது காக்கா தெளிவாக எழுதி இருகிறார்கள்.
இஸ்லாம் என்றால் என்ன?
எந்த வகையிலும் எந்த மனிதர்களுக்கும் எப்போதும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற உன்னத கோட்பாடு நிறைந்த மார்க்கமே இஸ்லாம். ஆனால், நாம் எல்லோரும் இஸ்லாம் என்று கூறிக்கொள்கின்றோம். ஒரு முஸ்லீமை கண்டதும் சலாம் கூறிக்கொள்கின்றோம், இதுவும் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட ஒரு செயலாகும்.
மக்களையும், குழந்தைகளையும், நோயாளிகளையும் பாதிக்கும் அளவு ஒலிமாசு எனப்படும் (டெசிபெல்) முறை அதிகமாக உள்ள ஸ்பீக்கர்களை உபந்நியாசம் என்ற பெயரால் மக்கள் நல்வழிபடவேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமிய கருத்துகள் காற்றில் மிதந்துவருகிறது. நல்ல கருத்துகளை கேட்கவேண்டும், அதற்காக காது கிளியும் அளவு சப்த அலைகள் தேவைதானா?
எங்கோ காட்டில் நடக்கும் சிறு நிகழ்சிகள் ஊரின் எல்லா தெருக்களிலும் அது காதை கிழிக்கும் அளவு நடப்பதை கேட்கின்றோம். இது இன்று கூடி வருவதை காணுகின்றோம். இம்முறைகளில் மார்க்க அறிஞர்கள் ஒன்றுகூடி அவர்களின் கருத்துகள், கூட்டங்கள் எல்லாம் அப்பாகுதியில் மட்டுமே கேட்கும் அளவு செய்யலாமே!
(நான் ஆலிம்களையும், ஊர் தலைவர்களையும், ஊர் அமைப்புகளையும் கட்டளை இடுவதாக என்ன வேண்டாம். நான் வயதில் சிறியவன், அறிவிலும் ஆற்றலிலும் அறியாதவன் என்பதால் இதை எழுத அச்சப்பட்டேன்).
மனிதனுக்கு கண் எவ்வளவு முக்கியமோ, அது போல் காது முக்கியம். செவிப்பறை பழுதடைந்தால் நம் அருகில் யார் பேசினாலும் கேட்க முடியாது. அல்லாஹுவின் உதவியால் உடலின் அனைத்து பாகங்களிலும் ஒரு குறைபாடு இல்லாமல் வல்ல அல்லா நம் அனைவரையும் பாதுகாப்பானாக, ஆமீன்.
கட்டுரை எழுதியதை விட பதில் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது கட்டுரையாளர் மன்னிக்க வேண்டுகிறேன்.
எழுத்தாளர், சமூக ஆர்வலர்,
ALS மாமா,
பாலம் பத்திரிகை முன்னாள் ஆசிரியர்,
காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross