இது ஓர் கொள்கைத் தாக்குதல் அல்ல! நிதர்சனம்...! உண்மை..!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக், ஹிஜாஸ் மைந்தன். (????????????.)[11 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20718
பொதுவாக நம்தூரில் பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், குர்ஆன் வகுப்புக்கள் எனப் பல்வேறு இடங்களில் வைபவங்கள் நடக்காத நாட்களே இல்லை எனலாம். யார் கொடுத்த யோசனையோ? தென் கோடியில் ஓர் பள்ளியில் விழா என்றால் அதன் உபநியாசம் சம்பந்தமே இல்லாத வட கோடிவரைக் கேட்கும் வண்ணம் தெருவுக்குத் தெரு குழாய்களை நிரந்தரமாகவே வைத்துள்ளனர்.
வாரந்தோறும்,மாதந்தோறும் பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒலிபெருக்கி மூலம் ஊர் முழுக்கக் கேட்கும் விதம் வீட்டு ஜன்னலுக்கருகில் மின் கம்பத்தில் நிரந்தரக் குழாய்களைக் கட்டி வைத்து காது ஜவ்வு அறுந்து போகும் அளவிற்கு ஒலிபரப்பப் படுவது எவ்விதத்தில் நியாயம்?
இணையதளங்களில் இது செய்தியாக கட்டுரையாக வந்த பின் குழாய்கள் அவிழ்க்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்குப் பரீட்சை நடக்கும் நேரம் என்பதற்காவா? அல்லது உண்மையிலேயே அவர்களுக்கு உதிப்பு ஏற்பட்டு விட்டதாலா? எப்படியோ? தற்போது வீடுகளும்,வீதிகளும் அமைதியாக உள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லப் புகழும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross