Re:கவனக் குறைவால் ஏற்படும் க... posted byMohamed Adam Sultan (kayalpatnam)[14 April 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 20722
ALS காக்கா அவர்களே, வீதிக்கு சென்று வீணாகும் நீரைபற்றி நெஞ்சு பொறுக்காமல் எழுதி இருக்கிறீர்கள்.
இதைவிட கொடுமை,கிட்டத்தட்ட பெரும்பாலும் ஜிம்மா பிரசங்கத்தில் பிரதானமாக சொல்லிகொண்டிருந்தாலும்,ஒரு ஹராமான காரியம் அநேக வீடுகளில் அரங்கேறிகொண்டிருக்கிறது.அது என்ன தெரியுமா?
வாரத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ வரும் குடிக்கும் நல்லதண்ணீரை மோட்டரின் மூலமாக உறிஞ்சி எடுக்கிறார்கள். அந்த நேரத்தில் அடிபைப்பின் மூலம் முதுகெலும்பு முறிய அடித்தாலும் அந்தி நேர தென்றல் காற்றையும் மிஞ்சும் அளவிற்கு அருமையான காற்றுதான் வரும். தண்ணீர் ஊகும்.............???
இதை நான்வேண்டும் என்றோ இட்டுகட்டியோ எழுதவில்லை. என்னால் நிரூபிக்க முடியும். மின்தடை ஏற்ப்படும் நாளில் அடிபைப்பில் அழகாகவரும் நீர், மின்சாரமுள்ள நாளில் மாயமாக மறைவதின் மர்மம் என்ன?
இதயம் உள்ளவர்களே இதுக்கு நீங்கள் தான் வழி சொல்லுங்கள்?.அவ்வழி நல்ல வழி என்றால் அதை அமுல் படுத்துவதில் ஏற்படும் எந்த எதிர்ப்பையும் இறைவன் துணையோடு எதிர் கொள்ள இந்த ஆதம் சுல்தான் முதல்ஆளாக முன்வருவேன் என்பதை ஆணித்தரமாக
இவ் இணயதளத்தின் மூலம் உறுதியளிக்கிறேன்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!. .
.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross