ஏமாறுவதில் எல்லோரும் ஒரே ரகம்தான்... posted byN.S.E. மஹ்மூது ( ????????????)[26 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20731
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர் இப்னு அப்பாஸ் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் நிறைய கருத்துக்கள் பொதிந்திருக்கிறது - சிந்திப்பவர்களுக்கு இதிலே பல படிப்பினைகள் உண்டு.
சகோதரர், பெண் வீட்டாரிடம் வீடு உட்பட எதையும் வாங்கவில்லை என்பதும் அது தங்கள் தாய் , தந்தையரின் கொள்கை என்பதையும் அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹ்! உங்கள் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.
---------------------------------------
மதி இருக்காது மனம் வராது :
வீடு கட்டும் விசயமாக தாங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனையும் சரியே!.
பல இலட்சக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டுபவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் செலவு செய்து தண்ணீர் பாய்ச்ச மதி இருக்காது அல்லது மனம் வராது.
அதே போல் குடும்பத்தில் உள்ள அல்லது யாராவது தெரிந்த ஒருவருக்கு மாதம் 3 - 4 ஆயிரம் கொடுத்து கட்டுமான வேலையை மேற்பார்வை பார்க்க சொன்னால் பல இலட்சங்களை சேமிக்கலாம் என்பது மட்டுமல்லாது கட்டிடமும் உறுதியானதாகவும், நீங்கள் விரும்பியபடியும் அமையும் - அப்படி செய்வதற்கும், முன்யோசனை இருக்காது அல்லது மனம் இருக்காது.
உபரியான பொருட்களை நல்ல வழியில் பயன் படுத்த மிகுதமானவர்களுக்கு மனம் வராது வீண் விரயம்தான் செய்வார்கள் - அப்படி செய்வதில்தான் அவர்களுக்கு ஆனந்தம்.
--------------------------------------
எண்ணினால் இந்த குறைபாடுகள் வருமா :
பொருட்கள் வாங்குவதிலே நம்மவர்கள் 90 % ஏமாற்றப்படுகிறார்கள் - காரணம் மேஸ்திரிகள் , ஆசாரிமார்கள் மேல் நம்மவர்கள் வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கைதான் - இதில் நடுத்தரவாதி, பணக்காரர், படித்தவர் , படிக்காதவர் என்றில்லை இப்படி ஏமாறுவதில் எல்லோரும் ஒரே ரகம்தான்.
எந்த பொருளை வாங்கினாலும் அதை எண்ணுவதோ, அளப்பதோ இல்லை - கட்டுமானத்தை பற்றிய கட்டுரை இன்ஷா அல்லாஹ்! எழுத வேண்டியதுள்ளதால் அதிகம் விவரிக்க விரும்பவில்லை.
இருப்பினும் சில உதாரணம் .......
செங்கல் லோடு வாங்குவார்கள் ஒரு லோடுக்கு 1500 செங்கல் என்றால் இங்கே வந்து சேருவது 1400 தான் சில சமயம் 1425 வரும். செங்கல் லோடு அனுப்ப செங்கல் சூளைக்கு மேஸ்திரி போன் செய்யும்போதே 1450 அனுப்பு என்று சொல்லிவிடுவார்.
சூளையிலிருந்து பில் 1500 க்கு போடப்பட்டு , செங்கல் 1450 ஏற்றபட்டிருக்கும் வரும் வழியில் கோவில் கட்ட என்று 25 செங்கல் குறிப்பிட்ட ரோட்டோரத்தில் இறக்கப்பட்டு விடும் ( இது ஆரம்பத்தில் 5 ஆக தொடங்கி இப்போது 25 செங்கலாக மாறிவிட்டது).
வீட்டு உரிமையாளர்களுக்கு வந்து சேருவது 1425 தான், சில சமயம் நல்ல டிரைவராக(?) இருந்தால் அவர் தனக்கு என்று 25 எடுத்துக்கொள்வார் எப்படியும் 1400 வந்து சேரும்.
அடுத்ததாக மண் வாங்கும்போது அதையும் அளந்து வாங்குவதில்லை - மண் கொண்டுவரும் லாரிக்காரர் மண்ணை 'கொட்டும் விதத்திலே' உங்கள் கண்ணை மறைத்து விடுவார் - பார்ப்பதற்கு நீங்கள் கேட்ட அளவிற்கு வந்திருப்பதாகத்தான் தெரியும் - ஆனால் நீங்கள் கேட்டதில் மூன்றில் இரண்டு பங்குதான் இருக்கும் - மற்ற ஒரு பங்கு வேறு எங்கோ கை மாறி இருக்கும்.
ஆகையால் மண் வாங்குபவர்கள் மண் கொண்டு வரும் லாரியை ஆறுமுகநேரியில் உள்ள எடை போடும் எந்திரத்தில் எடை போட்டு பார்த்து வாங்க வேண்டும் - அதற்காக இங்கிருந்து ஒருவரை ஆட்டோ பிடித்து அனுப்பினால் கூட 100 ரூபாய்தான் செலவாகும் - ஆனால் பல ஆயிரம் ரூபாய்கள் நஷ்டம் ஏற்படுவதை / ஏமாற்றப்படுவதை தடுக்கலாம்.
யாராவது வாங்குகிற செங்கல்லை எண்ணுகிறீர்களா? அப்படி எண்ணினால் இந்த குறைபாடுகள் வருமா ? - யாராவது மண்ணை எடைபோட்டு வாங்குகிறீர்களா ? அப்படி எடைபோட்டு வாங்கினால் இந்த நஷ்டமோ / ஏமாற்றமோ ஏற்படுமா ? சிந்தித்து பாருங்கள்.
இதற்குத்தான் மாத சம்பளத்திற்கு என்று ஓர் ஆளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது.
-----------------------------------------
இன்று 98 % மோசக்காரர்கள் :
நம்ம ஊரை பொறுத்த வரை கட்டிடம் கட்டுவதற்கு நெடுங்காலமாக மாற்றுமத சகோதரர்கள்தான் இருந்து வருகிறார்கள் - 30 வருடத்திற்கு முன்பு இருந்தவர்கள் 98 % மிகவும் நேர்மையானவர்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். 2 % சந்தேகப்பட வேண்டியவர்கள் - முழுமையாக அவர்களை மோசக்காரர்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால் இன்று 98 % மோசக்காரர்கள், 2 % தான் நம்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எனவே மக்கள் விழிப்புணர்வு பெற்றால் உங்கள் கட்டிடம் பலம் வாய்ந்ததாக, பாதுகாப்பாக இருக்கும் - உங்கள் பணமும் வீணாகாமல் , ஏமாறாமல் பாதுகாக்கப்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross