கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் மாடித்தோட்டம் சம்பந்தமான செய்திகள் மிகவும் பயன் தரக்கூடியது - அதிலே அடியேனுக்கு ஆர்வமும் உண்டு
மாடித்தோட்டம் என்பது மிகவும் எளிதானது , சிரமம் இல்லாதது - இதற்கு பணம் அதிகமில்லை , மனம்தான் வேண்டும்.
இதற்காக மனம் வைத்து , தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கினால் - சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால் , கைவலி, கால்வலி , இடுப்பு வலி போன்ற பல வலிகளும் மற்றும் மனச்சோர்வும் நீங்கி - புத்துணர்ச்சி பெறுவீர்கள் ( அனுபவம் சொல்லுதுங்கோ ).
---------------------------------------
வீட்டில் தோட்டம் / மாடியில் தோட்டம் வைத்து பராமரிப்பதால் பணம் சம்பாதிக்கலாம் என்பதல்ல அதன் பிரதான நோக்கம்.
அதில் கிடைக்கும் கீரைகளும், காய்கறிகளும் ஒவ்வொரு நாளும் புதியவையாக (FRESH) கிடைக்கிறது - கெமிகல் கலக்காத சுத்தமான , சுகாதாரமானவையாக இருக்கிறது என்பதால் கேன்சர் போன்ற பயங்கரமான நோய்களின் தாக்கத்திலிருந்தும் இன்ஷா அல்லாஹ்! காப்பற்றப்படுவோம் என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.
--------------------------------------
கருத்து எண் 9 இல் சகோதரர் செய்யது முஹம்மது அவர்கள் குறிப்பிட்டது போல் யாராவது இதற்காக ஓர் அமர்வை ஏற்படுத்தினால் இன்ஷா அல்லாஹ்! அடியேனும் அதில் கலந்து பயனடைய விருப்பம்.
பயிற்சிக்காக யார் ஏற்பாடு செய்தாலும் இன்ஷா அல்லாஹ்! அதில் அடியேன் கலந்து கொள்ளவும் தயார் - வீட்டு பெண்களை கலந்து கொள்ள செய்யவும் தயார்.
ஆகவே அப்படி ஓர் ஏற்பாடு செய்பவர்கள் மறக்காமல் எம்மையும் அதில் இணைத்துக்கொள்ளவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross