Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச... posted byrilwan (Jubail, K.S.A.)[17 May 2012] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20771
எவ்வித முன்முடிவுகளுமின்றி சிந்தனை உழைப்பு மற்றும் அதிர்ச்சி தரும் நடைமுறை புள்ளிவிபரங்கள் துணையுடன் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை கானல் நீரா? அல்லது மினரல் வாட்டரா? என்பதை தீர்மானிப்பது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நடத்தும் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களின் பரந்த/குறுகிய கண்ணோட்டத்தில், புரிதலில், ஒத்துழைப்பில், முயற்சியில்தான் இருக்கிறது.
தனது சிந்தனை ஓட்டங்களை ஒவ்வொரு பதிவிலும் தெளிவாக எழுதிவரும் கட்டுரையாளர், வழமைக்கு மாற்றமாக இக்கட்டுரையின் சில இடங்களில் கவனக்குறைவுக்கு இடம் கொடுத்திருப்பது வியப்பளிக்கிறது. அது கட்டுரையின் கருவை சிதைத்துவிடாது என்றாலும் ஆசிரியர் சொல்ல வரும் செய்தியை வாசகர்கள் தவறாக புரிந்துகொள்ள முகாந்திரம் இருப்பதால் அதனை உரிமையோடு விமர்சிப்பதை, இல்லையில்லை, எடுத்து விளக்குவதை கடமையாகவும் கருதுகிறேன்.
அதாவது, கட்டுரையிலிருந்து....
<>நம் ஊரிலே வழமையாக ஒவ்வொரு வருடமும் ஒலிபெருக்கி வைத்து அதிகமான சத்தத்துடன் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளை நினைவில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள் தெரியும். அங்கே குறிப்பிடப்பட்ட சில ஏரியாக்களிலே பிறக்கக்கூடிய குழந்தைகள் மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளாக இருப்பார்கள்<>
[அந்த ஏரியாக்களிலே பிறக்கக்கூடிய ‘சில’ குழந்தைகள் என்று சொல்ல வருவதை சரியான வார்த்தை உபயோகம் செய்து தெளிவுபடுத்தியிருக்கலாம்.]
<>இன்று நம் ஊரிலே இதய நோய் பாதிப்புகள் உள்ள மக்கள் வசிக்கும் வீடுகளை அல்லது அவர்கள் பணி புரியும் இடங்களை உற்று நோக்குங்கள் கண்டிப்பாக அங்கே " ஒலிமாசு " அடைந்திருக்கும். அவ்விடங்கள் ஒலிபெருக்கியின் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய இடங்களாகவே இருக்கும். இதனால்தானோ என்னவோ இன்று பைபாஸ் சர்ஜரி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது<>
[ஒலிபெருக்கியின் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய இடங்களில் வசிக்கும் / பணிபுரியும் மக்களுக்கு மட்டுமே இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் என்கிற அர்த்தத்தில் புரிந்துகொள்ள முகாந்திரம் இருக்கிறது. ஆனால் அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பதால் கட்டுரையாளர் சற்று தெளிவாக அவ்வாக்கியங்களை அமைத்திருக்கலாம்.]
<>சிலர் கூறுவர் சிட்டுக்குருவிகள் அழிவதற்கு காரணம் " மொபைல் டவர் " என்று, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் இருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் மூன்று வருடங்களுக்கு முன்பு நாங்கள் சவுதி அரேபியாவில் இருக்கும் காலத்தில் எங்கள் வீட்டை சுற்றிலும் பல மொபைல் டவர்கள் இருந்த போதிலும் சிட்டுக்குருவிகள் நூற்றுக்கணக்கில் எங்கள் வீட்டு காம்பௌண்டுக்குள் நிற்கும் - புறாக்களும் கணிசமான அளவில் வந்து செல்லும் ஆகவே மொபைல் டவர் மட்டும்தான் சிட்டுக்குருவியின் அழிவுக்கு காரணமில்லை<>
[சிட்டுக்குருவிகள் அழிவதற்கு " மொபைல் டவர் " மட்டும் காரணம் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாததற்கு கட்டுரையாளர் எடுத்துக்காட்டும் மேற்படி உதாரணம் பொருத்தமற்றதாக இருப்பதால் அதனை தவிர்த்துவிட்டு வேறேதும் உதாரணத்தை பதிவு செய்திருக்கலாம்.]
குறிப்பு: எதுவா ஈந்தாலும் பேசி தீர்த்திக்கலாமேடா... வூட்டுக்கு வா, ஒனக்கு வச்சிகிர்ரேன். அப்டீன்னு நீங்க நெனைக்க மாட்டியோண்டு தெரியும் வாப்பா….
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross