பல இக்கால பெற்றோர்களே பொறுப்பு ... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (kayal patnam)[24 May 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 20779
பெரிசு ஏதோ பொலம்புதுடா என்று சிறுசுகள் இக்கட்டுரையை பார்த்து கிண்டலடிக்கவும் தயங்கமாட்டார்கள்.அந்த அளவிற்கு அப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்துகொண்டு வருகிறார்கள்.
பாரம்பரிய பெருமையும்,உண்மையான உடற்பயிற்சியும் கொண்ட பழங்கால விளையாட்டைப்பற்றி இக்கால பெற்றோர்கள் 90% சதவிதத்தினருக்கு மேல் தெரியவே இல்லை.அப்படிப்பட்ட விளையாட்டுகளை ஏளனமாக நினைக்கும் பெற்றோர்கள் தான் ஏராளம்!
என் பிள்ளை பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் டியூசனுக்கு சென்றுவிடுவான் அல்லது கம்ப்யூட்டரில் உட்கார்ந்து என்னம்மா புதுசு புதுசான விசியத்தைஎல்லாம் கண்டுபிடிக்கிறான் தெரியுமா? என்று பெருமையை பறைசாற்றும் பெற்றோர்கள்
தன் பிள்ளைகளை என்ன செய்கிறார்கள் தெரியுமா? படிப்பு படிப்பு என்று படிப்பென்ற மூட்டைக்குள்ளேயே மூச்சிதினரும் அளவிற்கு திணித்து மூட்டையை கட்டிபோட்டுவிடுகிரார்கள்.
ஒரு சில வருடங்கள் கழித்து அம்மூட்டையை திறக்கும்பொழுது அதிலிருந்து பண மழையாய் கொட்டும்போழுது பூரித்துபொகிறார்கள் பேராசை பிடித்த பெற்றோர்கள்.
ஒருவேளை பிள்ளைகள் பிரியபட்டு இதுபோன்று விளையாட்டை விளையாட முன்வந்தாலும்,சீ சீ இந்தவிளையட்டெல்லாம் நம் குடும்ப தகுதிக்கு விளையாட கூடாது.அதெல்லாம் அந்த குப்பத்து காரங்க விளையாடுகிறது என்று இளம்பிஞ்சு மனதில் ஏற்றத்தாழ்வு விதையை விளைப்பதே இந்த பெற்றோர்கள்தான்!
இப்படிபட்ட பாரம்பரிய விளையாட்டுகள் மெல்ல மெல்ல மறைந்ததற்கு முக்கிய காரணம் இக்கால பேராசைபிடித்த பெரும்பாலான பெற்றோர்களே என்பதை நான் ஆணித்தரமாக சொல்வேன். இச்செய்கையினால் தன் பிள்ளைகள் வாலிப வயதாகும்பொழுது பல்வேறு உடல்பாதிபுக்குள்ளாகிறது என்ற மருத்துவர்களின் ஆலோசனைகள் எல்லாம் அமெரிக்க டாலருக்கு முன்னாள் ஜுஜிபி!
ஜிம்மாதொளுகைக்கு விடமாட்டேன்கர பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்காதீர்கள் என்று எல்லா ஜிம்மா பேருருரையில் தொண்டை கிழிய திரும்ப திரும்ப சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகதான் அப்பள்ளியில் சேர்த்த பெற்றோர்கள் நினைகிறார்களே தவிர கிஞ்சித்தும் அவர்கள் கவனத்திற்கு எடுக்கவே மாட்டேன்கிறார்கள்.
பகட்டான வாழ்க்கைக்கு முன்னால் மார்க்கமாவது இன்னொன்னாவது!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்1
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross