Re:மாடித்தோட்டம்... பயண அனுப... posted byALS mama (Kayalpatnam)[30 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20797
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாடித்தோட்டம்... பயண அனுபவங்கள்!
ஆசிரியர்: சாளை பஷீர் ஆரிஃப்
எழுத்தாளர் / சமூக பார்வையாளர் , எழுதிய பயண அனுபவங்கள் பயன் நிறைந்தது. நமதூரில் மொட்டை மாடி கேட்பாரற்று கிடக்கிறது. மொட்டை மாடியை விவசாய அமைப்பில் ஆலோசனை பெற்று அல்லது நமதூரில் விவசாய படிப்பு படித்து தெரிய மாணவர்களிடம் கேட்டு நமது மொட்டைமாடியை அழகான பூங்காவாக ஆக்க முடியும். இதனால் கீழ் பகுதியில் உள்ள அறைகள் AC வைத்ததுபோல் இக்கோடைகாலத்தில் குளுகுளு என்று இருக்கும்.
முதல் அரைமுதல் சமையல் அறைவரை சென்று வரும் இடத்தை பூங்காவாக மாடியில் முழுவதும் அமைத்தால் நடப்பதற்கு வெளியிடம் போக தேவை இல்லை. இதையே நடக்க பயன்படுத்தி கொள்ள முடியும். வீட்டிற்கு வரும் தோழிகளை, அல்லது விருந்தாளிகளை இந்த மொட்டைமாடி பூங்காவிற்கு அழைத்து வந்து காலை மாலை ஏன் இரவில் கூட அமர்ந்து பேசி மகிழலாம்.
நான்குபக்கமும் கண்ணுக்கு குளுர்ச்சியான செடி கொடிகள் பச்சைபசேலென காட்சிதரும், மனமும் அதைகண்டு பூத்துக் குலுங்கும். சென்னை மண்ணடி பகுதியில் யுள்ள எங்களது சொந்தமான மூன்றாம் அடுக்கு கட்டிடத்தின் நாகாவது மொட்டைமாடியில் எனது தம்பி மனைவி 'Z' அவர்கள் செடிகளையும், கொடிமலர்களையும், மருதாணி மரத்தினையும் வைத்து வளர்த்து வந்தார்கள். வீட்டிற்கு தேவையான ரம்பைஇலை ஐம்பதிற்கும் மேற்ப்பட்டு இருந்தது காலை மாலை அதில் தண்ணீர் விடும்போது பிரியாணி வாடை வரும். அக்கம் பக்கத்து வீட்டார்கள் பாய் வீட்டில் எப்போதும் பிரியாணி தான் என்று கூறிக்கொள்வார்கள்.
இதேபோல் நமதூரில் எனது பேத்தி ஆலிமா ஒருத்தி வீட்டு மாடியில் பப்பாளிகள் பல நான் வளர்த்து வந்தேன். அவள் அக்காவின் ஆலோசனைப்படி அத்தனை பப்பாளி செடியையும் பிடிங்கிவிடும்படி கூறியதால், பில்டிங் உடைந்துவிடும் என்று பயம்காட்டியதால் அவைகளை பிடுங்கி என் வீட்டு தோட்டத்தில் வைத்திருக்கிறேன். பூப்பூக்கும் பருவத்தில் அது இருக்கிறது.
புரியாத சில குடும்பதலைவிகள் எனது பேத்திகள் போல இருப்பார்கள். அவர்களுக்கு இந்த மாடி தோட்டம் அமைக்கும் செய்தியை படித்த பின்னராவது புரிந்துகொள்வார்கள். எனது வீட்டிற்கு மொட்டைமாடி வசதி இல்லை, இருந்தால் நான் மொட்டை மாடி தோட்டம் அமைத்து ஊர் மக்களுக்கு முதல் உதாரணமாக இருந்திருப்பேன் .
சிலர் வீட்டு தோட்டத்தை பார்க்க போவதில்லை, மரம்வைத்தால் அது பயன்தரும். சுகம்தரும்.மனசுக்கு இதம் தரும். குனிந்து மரம் செடி கொடி இவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவது ஓர் ஆரோக்கியம், அதன்பின் நமக்கு தேவையான காய் கனி கிடைக்கும். இதை புரிந்து வரும்காலத்தில் தோட்டத்தை மொட்டை மாடியை பயனுள்ளதாக ஆக்குங்கள்.
உங்கள் வீட்டு தோட்டங்களில் தேக்கு மரங்களை விவசாய பண்ணைகளில் வாங்கி வைத்து வளர்த்து வந்தால் இருபது வருடங்களுக்கு பின் உங்கள் பிள்ளைகள் தராத வருவாயை கோடிக்கணக்கில் அது தரும்( இன்ஷா அல்லா). தேக்கு மரங்களை பஞ்சாயத்து ரோடு பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. தேக்குக்கு தினமும் குறிப்பிட்ட காலம் வரை தண்ணீர் ஊற்றி வந்தால் போதும். அவை பின்னால் நல்ல பலனை தர இருக்கிறது.
வீட்டு தோட்டத்தில் விவசாயம் செய்துவரும் S.E ஹசன் ஹாஜி அவர்கள் (பஞ்சாயத்து ரோடு) செல் நம்பர் - 99652 19785, அவர்களை தொடர்புகொண்டு வீட்டு தோட்டத்தில் என்ன என்ன செடி வளர்ப்பது பற்றி கேட்கலாம் அல்லது பசுமை விகடன், உழவர் உலகம் போன்ற விவசாய சம்பந்தமான பத்திரிக்கைகளை நூலகங்களில் சென்று படித்து அறிந்து கொள்ளாம்.
எழுத்தாளர்,சமூக ஆர்வலர்,
ALS மாமா,
ஓவியர், கல்விவளர்ச்சி குழு ஆலோசகர் - ரஹ்மானியா பள்ளி,
காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross