திட்டமிட்டக் கல்வி பயின்றால் ...தித்திக்கும். posted byM.N.L.முஹம்மது ரபீக். (????? ?????.)[06 June 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20802
பள்ளிப் பருவத்திலேயே பட்டப் படிப்பிற்கான முன் யோசனைகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களது வருங்காலத்திற்கு வழிகாட்டச் செய்யும் இக் கட்டுரை ஓர் அரிய வாய்ப்பினையும், நல்ல படிப்பினையையும் தருகின்றது. கட்டுரை ஆசிரியர் கூறும் வழிமுறைகளைக் கடை பிடித்து தம் பிள்ளைகளின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஓர் உன்னத பொறுப்பு எல்லாப் பெற்றோர்களுக்கும் உண்டு. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பது போல் என் போன்றோர் மேற்(கொண்டு) படிப்பு படிக்காமல், என்னதான் நல்ல அனுபவம் இருந்தும் இன்று வரையில் ஒரு வட்டத்திற்குள்ளேயே முடங்கிக் கிடந்து முன்னேற முடியாமல் தவிக்கின்றோம். அதன் வலியும், வாட்டமும் எங்களுக்குத் தான் தெரியும்...!
நன்ணீர் புகட்டி நல்லுரமேகி நாட்பட வளரும் கொடி தமக்கு பின்னிப் பிணைந்து முன்னுக்குயற நாட்டுதல் வேண்டும் ஓர்க் கழியை. கழியின்றிக் கொடி படர வழியில்லை! கல்வியும் ஓர் கொடியன்றோ? எனக் கருதிடுவீர். திட்டமெனும் கழிதனை நட்டி வைத்து கல்விக் கொடி படர்ந்து நம் குடியுறச் செய்திடுவீர்.
-ஹிஜாஸ் மைந்தன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross