Re:மேல்நிலை படிப்பு - வாழ்க்... posted bySalai.Mohamed Mohideen (USA)[08 June 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 20810
சகோதரர் ரபீக் அவர்கள் குறிப்பிட்டது போன்ற தவிப்பு நம்மில் பலருக்கும் உண்டு. நமது நாட்டில் தொலை தூர (Distance education) அல்லது ஆன்லைன் டிகிரி (ex : IGNOU அழகப்பா பல்கலை கழகங்கள் இவைகளை வழங்குகின்றன) - மூலம் இத்தவிப்பை போக்கி கொள்ளலாம். மேலை நாடுகளில் போன்று 'எப்பருவத்திலும்' ஏதோ சூழ்நிலையால்
அப்பருவத்தில் படிக்க தவறிய கல்லூரி / மேற்படிப்பை part / full time – மாக, கல்லூரியிலேயே சென்று படிக்கும் வாய்ப்பு கூட நமது நாட்டில் வருங்காலத்தில் வரலாம்.
பள்ளி நிர்வாகம் வணிகவியல் எடுத்து படிக்க சொன்னது ஆச்சர்யமும் வேதனையுமாக உள்ளது. இது போன்ற சூழலில் (முடிந்தால்) பொறியியல் கனவை நனவாக்கும் பாடப்பிரிவை வழங்கும் வேறு பள்ளிகூடத்தை நோக்கி பயணிப்பது நல்லது.
சகோதரர் Vilack SMA - அவர்கள் கவுன்சலிங் யோசனையயை தந்ததோடு நில்லாமல் தானும் அதுசமயம் ஊரில் இருந்தால் இவைகளை நாம் எல்லோரும் இணைந்து பணியாற்றலாம் என்று தனது இமெயிலில் குறிப்பிட்டு இருந்தார். இன்சா அல்லாஹ் முயற்சிப்போம்.
நமது மாணவர்கள் /பிள்ளைகள் KOTW வை விட பேஷ்புக் - கில் பிஸியாக இருப்பார்கள். KOTW - வையும் பேஷ் புக் ட்வீட்டர் - க்கு எடுத்து செல்லலாம். விடலை பருவத்தில் பிள்ளைகள் பொடுபோக்காக இருப்பது சகஜம். நமது பெற்றோர்கள் செய்ய தவறிய விழிப்புணர்வை நாமும் (நமது பிள்ளைகளுக்கு) செய்ய தவறக்கூடாது என்று என்னும் பெற்றோர்கள் இது போன்ற விசயங்களை (எந்த ஊடகத்தில் கண்டாலும்) தன் பிள்ளைகளுக்கு எடுத்து செல்ல வேண்டியதும், பிள்ளைகளை இவைகளில் ஆர்வமூட்டுவதும் பெற்றோர்களின் தார்மீக கடமையாக உள்ளது. பெற்றோர்கள் அலட்சியமாக இருந்தால் பிள்ளைகளும் அலட்சியமாகவே இருப்பார்கள்.
சகோதரர் பல்லாக் சுலைமான் போன்றோர்களின் சீரிய முயற்சியில் களம் கண்டுள்ள KCGC - யின் அருமையான கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் “ஏதேனும் ஒரு மாணவராவது சரியான வழிகாட்டுதலால் பயன் கிடைத்தால் மகிழிச்சியே” என்று என்னும் Deen (Hkg) போன்ற சமூக ஆர்வலர்களின் உதவிகளும் (அதாவது both intellectual/guidance & பினன்சியால் சப்போர்ட்) கிடைத்தும் கூட… அதனை முறையாக பயன்படுத்தி நமது பிள்ளைகளுக்கு முன்னேற தெரியவில்லை யென்றால் அதற்க்கு முழுக்க முழுக்க காரணம் பிள்ளைகளும் அவர்களை பெற்றவர்களுமாகத்தான் இருக்க முடியும்.
இதோ 443 மாணவர்கள் +2 வில் பாஸாகி இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் கல்லூரி அல்லது எது சம்பந்தமான படிப்புகளை படிக்கின்றார்கள் என்ற டேட்டா பேஸை தயார் படுத்துங்கள். நமதூரை கல்வியில் ஒரு தலை சிறந்த ஊராக மாற்றவேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தன் கடமையுணர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross