Re:கவனக்குறைவால் ஏற்படும் கஷ... posted bySalai.Mohamed Mohideen (USA)[13 July 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 20829
'கவனக்குறைவால் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங்களும்' அனைத்து பாகங்களும் அருமை. ஒரு மூத்த எழுத்தாளர் மற்றும் பழுத்த அனுபவக்காரரின் வல்லமை வாய்ந்த வரிகள் அனுபவங்கள்... மேலோட்டமாக பார்த்தால் இவைகள் ஒரு சாதாரணமாக விசயமாக தோன்றினாலும் உண்மையிலேயே
'வருமுன் காப்போம் (prevention is better than cure)' என்று எச்சரிக்கையாக செயல்பட நினைக்கும் அனைவருக்கும் இக்களஞ்சியங்கள் ஒரு வரப்பிரசாதம். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு!!
கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளதை போல எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம். சென்னைக்கோ அல்லது பெங்களூருக்கோ பஸ்ஸில் இரவு பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். இரவு உணவுக்காக ஏதோ ஒரு இடத்தில் இறக்கினார்கள். உணவகத்துக்கு வெளியே 'ஹலால்' என்று போர்டு தொங்கியது. உள்ளே சென்று பார்த்தால் வழக்கம் போல் மக்கா மதீனா படங்கள் கல்லாவுக்கு அருகில். இன்னொரு பக்கத்தில் ஒரு பெரிய மேஜையில் சில சாமி படங்கள் ஊதுவர்த்தி பூஜை சாமான்களுடன் கடவுள் ரேஞ்சுக்கு ஜெயலலிதா அவர்களின் பெரிய சைஸ் போட்டோ பிரேம் சமாச்சாரங்கள். பொதுவாக இரவுப் பயண உணவகங்களில் மற்றும் முன் பின் உறுதியாக தெரியாத இடங்களில் இறைச்சி உணவைத் தவிர்ப்பதை வழமையாக கொண்டிருந்தாலும் இவர்கள் கூறும் 'ஹலாலை' எப்படி நம்புவது என்று அன்றும் வெஜ்ஜியையே சாப்பிட்டேன்.
நமது கவனக்குறைவால் இழப்பு ஒருபக்கம் என்றால் பிறருடைய கவனக்குறைவால் நமக்கு ஏற்படும் இழப்பு மிகப் பெரிய வருத்தத்தை தரும். அப்படிதான் இங்கே வந்த புதிதில் நண்பன் ஒருவன் இந்தியன் டிரைவிங் லைசன்ஸ் வைத்து வாடகைக்கு கார் எடுத்து வெளியே கூட்டிட்டு போனான். அவனுடைய அதீத டிரைவிங் தன்னம்பிக்கை மற்றும் கவனக்குறைவால்... சிக்னல் அல்லாத இடது திருப்பத்தில்
வரும் வண்டியை கவனிக்காது ஆக்சிடன்ட் பண்ணிவிட்டான். அச்சம்பவம் நடக்கும் சில நொடிகளுக்கு முன் நினைத்தேன், அநேகமாக இதுதான் இறுதிப்பயணமாக
இருக்கும் என்று... ஏனென்றால் இரண்டு வண்டிகளின் ஸ்பீட் குறைந்தது 100 kmph. இறைவன் அருளால் ஒரு சில காயங்களுடன் தப்பித்தோம். அன்றைய கவனக்குறைவின் near death experience (NDE) வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது. அன்று முதல் பிறருடைய வண்டியில் பயணம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் கவனமாக இருக்கிறார்களோ இல்லையோ நான் கொஞ்சம் கவனமாக ட்ராபிக்கை பார்த்துக் கொள்வேன்.
கவனக்குறைவால் ஒரு சிறிய அல்லது பெரிய இழப்போ நமக்கு ஏற்பட்டால் ஒரு சில மணிநேரங்கள் அல்லது நாட்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருந்து விட்டு அதனை மறந்து விடுவோம் மற்றதொரு கவனக்குறைவு இழப்புகள் வரும்வரை.
கண்ணை மூடிக்கொண்டு நமது வாழ்வில் இதுவரை கவனக்குறைவால் நாம் இழந்ததை சில மணித்துளிகள் சிந்தித்து பாருங்கள்... அப்பொழுது தான் கவனக்குறைவின் முக்கியத்துவத்தை இக்கட்டுரையின் வலிமையை அவசியத்தை உணர முடியும். அலைபேசியில் பேசிக்கொண்டு பஸ்ஸை ஒட்டி எல்லோரையும் கொல்ல பார்த்த சமீபத்திய சென்னை சம்பவத்தை சிந்தித்து பாருங்கள். எவ்வளவு பெரிய கவனக்குறைவு / அஜாக்கிரதை.
கவனக்குறைவு என்பது தனி மனிதனின் செயல்களுக்கு மட்டுமன்றி நம்பகத்தன்மைக்கும் பொருந்தும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. “Whoever is careless with the truth in small matters cannot be trusted with important matters.”
பொதுவாக இவ்வயதிலும் தளராது சமுதாயத்துக்காக எழுத்து, ஒவிய பயிற்சி மற்றும் சமுதாய பணிகள் மூலம் சேவை செய்து வரும் இவரை போன்றவர்கள்... நாற்பது ஐம்பது வயதிலேயே தளர்ந்து சோர்ந்து ஒதுங்கி வாழ்பவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு மட்டுமன்றி இளைய சமுதாயத்தினருக்கும் ஒரு இன்ஷ்பிரேஷன்!!
இவருடைய ஒத்த வயதுடையவர்களை அடிக்கடி உடற்பயிற்சி நிலையம் (ஜிம்) மற்றும் சமுதாய பணிகளில் இங்கே காணும்போது பலமுறை நான் இதனை நினைத்ததுன்று... இவ்வயது வரை ஹயாத்தை இறைவன் நமக்கு தந்தாலும், இவர்களை போன்று நாமும் மிகவும் சுறுசுறுப்பாக (energetic) சமூக அக்கறையுடன் இருப்போமா என்று.
மனதில் வலிமையையும் ஆர்வமும் இருக்கும் வரை, வயதென்பது எதற்க்குமே தடையில்லை (குறிப்பாக எழுத்து & சமுதாய சேவைக்கும்) என்பதற்க்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துகாட்டு. தொடரட்டும் உங்கள் எழுத்து மற்றும் சமூக பணிகள்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross