ரயில் பஸ் பிரயாணத்தில் ஏற்ப்படும் ஏமாற்றம் குறித்தும் இன்னும் விரிவாக எழுத முடியும் இணையதளத்தில் சுவையாகவும், அதே சமயத்தில் விறுவிறுப்பாக இருக்க சிலவற்றை மட்டுமே தந்தோம். பொதுவாக இக்காலத்தில் பயணங்கள் அடிக்கடி ஏற்ப்படுகிறது, தனி நபர் பயணம் என்றாலோ, கணவன் மனைவி குடும்ப சகிதம் போக தனியார் சொகுசு பஸ்களை விட அரசு பஸ் மேலானது. காட்டுக்குள்ளோ ஊர் மெட்டுக்குள்ளோ அரசு பஸ் ரிப்பேர் ஆனால் உடனே அடுத்த பஸ் வந்துவிடும், ஆனால் தனியார் பஸ் என்றால் வேருபஸ் வருவது சாத்தியப் படாது, இதனால் நானும் சிலரும் அரசு பஸ்ஸை தேர்வுசெய்து பயணம் செய்வோம்.
புஷ் பேக் பஸ்ஸில் சீட்டிற்கு கீழ் பகுதி கவனம்:
புஷ் பேக் பஸ்ஸில் சீட்டிற்கு கீழ் பகுதியில் ஸ்ப்ரிங் வயர் கீழே போகும், நமது சீட்டில் இருந்தவாறு படுத்த நிலையில் பக்கத்து சீட்டின் கீழ் நமது காலை ஹாயாக நீட்டி சுகம் பெரும் அந்த வேளையில் நமது கால் அங்குள்ள ஸ்ப்ரிங் கம்பியில் மாட்டி அவதிக்குள்ளாவோம் இது தான் கவனக்குறைவினால் ஏற்ப்படும் கஷ்டம் அத்துடன் நமது காலுக்கு மருந்து போடுவதினால் ஏற்ப்படும் பண நஷ்டம். புரிந்து செயல்பட்டால் இப்படியான சிரமங்கள் யாருக்கும் ஏற்ப்படாமல் இருக்கவே பலர் அனுபவித்த பின்னர் கேட்டு உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
டிரைவர் சீட்டிற்கு பின்னால்:
டிரைவர் சீட்டிற்கு பின்னால் அமர்ந்திருப்பவர்கள் நடை பாதையுடன் சீட் இருக்கும் அந்த பகுதியில் இருப்பவர் தனது கால் மூட்டை வெளியே நடைபாதையில் சுகத்திற்க்காக வைக்கும் போது பிரயாணிகளுடைய பெட்டிகள் நமது கால் மூட்டை அடிக்கடி பதம் பார்க்கும். பஸ்ஸில் நடைபாதை கரை ஓரம் இருக்கும் இரு பகுதி பிரயாணிகளும் பஸ் புறப்பட்ட பின்னர் தமது கால் மூட்டை சுகத்திற்க்காக வெளியே வைக்க வேண்டும் இதனால் அடி படுவது குறைவாகும். பிரயாணிகள் ஏறும் அவசரத்தில் இப்படி நடப்பது உண்டு நமது கவன குறைவினால் நமது கால் மூட்டிற்கு கஷ்டமும் வேதனையும் ஏற்ப்படும். இதை கவனித்து பயணம் செய்தால் சுகமாகும். டிரைவர் அமர்ந்திருக்கும் பின் வரிசை இருக்கை அனைத்தும் வீதியின் ஓரமாக அமைந்திருக்கும்.
நீண்ட தூரம் பயணம் செயபோர் இந்த பகுதி சீட்டுகளை கூடியமட்டும் குறிப்பாக ஜன்னல் ஓரம் இருப்பதை தவிர்க்கவும். நள்ளிரவில் வேகமாக வரும் வாகனங்கள் மோதினால் முதலில் பதம்பார்ப்பது டிரைவர் பின்னால் இருக்கு ஜன்னல் பகுதி இருக்கைகள் அதிகம் சேதமாகும். ஏறும் படிக்கட்டு பக்கம் உள்ள அனைத்து சீட்டுகளுக்கும் அவ்வளவான ஆபத்து இல்லை. எனது பேருந்து பயனகாலத்தில் சென்னை செல்லும் போது ஆபத்து குறைவான இந்த பகுதி இருக்கையை தேர்வு செய்வேன். சிலர் ஜன்னல் பகுதியில் சாய்ந்தவாறு இரவு முழுவதும் பயணம் செய்கிறார்கள், பேருந்தின் வேகத்தால் காற்றின் குளுமைகள் காதின் வழியாக சென்று குளிர்ச்சியை தந்தாலும் காது சம்பந்த மான நோய்களை அது அதிகப்படுத்தும், இதனால் ஜன்னல் ஓரம் அமர்ந்து பிரயாணம் செய்பவர்கள் நள்ளிரவு ஆனதும் காதை மறைத்து டவல் அல்லது மப்ளர் கட்டிக்கொண்டால் நல்லது. நமதூரில் இருந்து ரயில் பஸ்ஸில் பயணமானாள் இருக்கையில் ரெக்சின் பிளாஸ்டிக் போடப்பட்டிருக்கும் அதிக நேரம் பிரயாணம் செய்தால் ஆசனத்தில் கொப்பளங்கள் ஏற்ப்பட வாய்ப்புண்டு அதனால் இதில் அமர்ந்து அதிக தூரம் பிரயாணம் செய்பவர்கள் கையுடன் பழைய பெட்ஷீட் மடித்து போட்டு அமர்ந்து சொகுஆக பிரயாணம் செய்யலாம்.
பண்டிகை கால மத்தாப்பு கண்பியின் பயன்:
பண்டிகை கால மத்தாப்பு கம்பியை தூக்கி எறிந்திடாமல் அதை 'S' வடிவில் வளைத்து ரயில் பஸ் பயணத்தின் போது கையுடன் கொண்டு செல்வேன். 'S' டைப்பு கொக்கியாக அதை மாட்டி வாட்டர் கூஜாக்களை பாதுகாப்பாக தொங்க விட்டி வைக்க உதவும். ரயில் பயணத்தை விட பஸ் பயணத்தில் செருப்பை மறந்து தரையில் வைத்தால் அது தனியாக பஸ்சின் ஓட்டத்தில் பயணம் செய்து எங்கோ போய் சேர்ந்துவிடும். அதற்காக நீண்ட கயிறாய் 'O' வடிவத்தில் கட்டி அதை செருப்பில் கட்டி பஸ்சின் ஒரு பகுதியில் தொங்கவிட்டு விடுவேன். இப்படி செய்தால் செருப்பு பாதுகாப்பாக தி இடத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் தேவைக்கு எடுத்து காலில் மாட்டிக்கொள்ளலாம் பின் அவ்வாறே செருப்பை தொங்கவிட்டுவிடலாம்.
100 மைல் பயணத்தில் பஸ் ஒரு பகுதியில் நிற்கும் போது நமது செருப்பை பாதுகாப்பாக எடுத்து காலில் அணிந்து இறங்கி விடலாம் பின்னர் பஸ்ஸில் வந்து அமரும்போது அதே போல் செருப்பை 'O' வடிவ கைற்றில் மீண்டும் கட்டி அதேபோல் தொங்க விடலாம் தூரப்பயணத்தில் இரவில் பஸ் நிற்கும் போது சாப்பிடுவதற்காக அருகாமையில் உள்ள ஹோடேலில் சாப்பிடுவோர் குறிப்பாக முஸ்லிம்கள் ஹலால் உணவு பரிமாறும் ஹோடெல்தான என்பதை முதலில் கவனித்து கொள்ள வேண்டும் ஒரு சமயம் எனது சென்னை பயணத்தில் இரவில் மதுரை அருகில் தாஜ் மகால் ஹோட்டல் என்று பெயரிட்டு இருந்தார்கள் உள்ளே சென்று பார்த்தல் மக்கா மதீனா படங்கள் கல்லா பொட்டியின் மேல்பகுதியில் மாற்றப்பட்டு இருந்தது இதை வைத்து இது முஸ்லிம்களின் ஹோட்டல் என எண்னும் எண்ணத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு இந்த ஹோட்டல் ஒரு முஸ்லீம்க்கு உரிமையானது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட சிரமத்தால் முஸ்லீம் அல்லாதவருக்கு இந்த ஹோட்டல் கை மாறி இருக்கின்றது ஹோட்டல் சர்வரிடம் கோழியை எப்படி அறுபபீர்கள் என்று கேட்ட போது கதவுக்கு இடையில் வைத்து கோழியை சாகடித்து விடுவோம் என்று சொன்னது வியப்பாக இருந்தது அடிக்கடி பள்ளிவாசல் பாயை அழைத்து வந்து கோழியை அறுப்பது சிரமமாக இருப்பது என்று எங்கள் முதலாளி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று சர்வர் சர்வ சாதாரணமாக கூறினார் எனக்கு அது வியப்பாக இருந்து அப்படியானால் ஹலால் என்ற போர்டை உள்ளேயும் வெளியையும் இருந்து நீக்கிவிடும்படி கூறினேன் பள்ளிவாசல் பாய் வந்து கோழி,கிடா இவைகளை அறுத்தால் அதன் கறிகள் விற்கப்படும் ஹோட்டல் ஹலால் ஹோட்டல் எனப்படுகிறது பஸ்களிலும் ரயில்களிலும் ஏன் விமான சர்விசிலும் கூட பேணிக்கைக்காக அங்கு மட்டன் உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை வாங்கி நாம் சாப்பிடலாம் இதனால் நமது ஈமானை பரிசுத்தமாக்கி கொள்ள முடியும் நான் சென்னைக்கு பிரயாணம் செய்துவந்த 50 வருடங்களில் இரவில் பஸ்ஸில் நிற்கும் போது இரவு உணவுக்காக சைவ உணவுகளை மட்டும் வாங்கி சாப்பிட்டு வருவேன் தாஜ் மகால் ஹோட்டல் சம்பவம் 30 வருகங்களுக்கு முன் நான் விசாரித்த செய்தி
அருகில் உள்ள ஊர்களுக்கு பஸ்ஸில் சென்றால் ....!
நம்மூரிலிருந்து நெல்லை தூத்துக்குடி நாகர்கோவில் பஸ்ஸில் சென்றால் குறைந்த லக்கேச் செல்வது நலம். ஒரே ஒரு பக அல்லது சூட்கேஸ் என்றால் உக்கார இடம் கிடைக்கவில்லை என்றாலும் நின்ற நிலையில் இரு கால்களுக்கு இடையில் அந்த உடமைகளை வைத்துகொள்வது பஸ் பயணத்தில் பாதுகாப்பானது. பஸ்ஸில் பயணம் செய்யும் சில பெண்கள் குறிப்பாக நமதூர் பெண்களுக்கு இரக்க சுபாவம் அதிகம் அதனாலேயே நின்று பயணம் செய்யும் குழந்தைகளை வைத்துகொண்டிருக்கும் அந்த தாயிடம் குழந்தையை வாங்கி தனது மடியில் வைப்பதற்கு முன்னர் குழந்தையின் கழுத்தில் காதில் இருக்கைகளில் அணிகலன்கள் (நகைகள்) அணிந்திருக்கிறதா அதில் ஒன்றிரண்டு விடுபட்டிருக்கிறதா என்று பார்த்த பின்னர் குழந்தையை வாங்குவது நல்லது. குறைந்திருப்பின் அந்த விபரத்தை தாய்க்கு சொல்லும் பொழுது பக்கத்தில் உள்ளவர்களுக்கு விளங்கும் அளவு அழுத்தமாக, சிறிது சப்தமாக சொல்லிய பின்னர் குழந்தையை வாங்கிக்கொள்ளலாம். இந்த விபரங்களை அறியாமல் குழந்தையை பெற்றுக்கொண்டால் பின்விளைவுகளை நாம் தாங்கிக்கொள்ளவேண்டும். இப்படி பல நிகழ்ச்சிகள் பஸ்ஸில் நடந்திருக்கிறது. உதவிக்கு போய் உபத்திரத்தில் மாட்டிக்கொள்ளவேண்டாம். பஸ்சிலும் சரி, ரயிலிலும் சரி உங்கள் செல் நம்பர்களை எதிர் திசைக்கு சொல்லும் போது. சிறிது சப்தம் குறைவாகவும் நாம் சொல்லும் நம்பரை அருகாமையில் உள்ளவர்கள் கவனிக்கிறார்களா என்பதையும் கவனித்து பின் உங்கள் செல் நம்பரை கூறுவது பெண்களாகிய உங்களுக்கு எப்போதும் நலமாக அமையும்.
சிட்டி பஸ்ஸில் நின்ற நிலையில் பயணம் செய்யும் தாய்மார்கள் கவனத்திற்கு.
சென்னை சிட்டி பஸ்ஸில் எனது பயணத்தின் வருடங்கள் 35க்கும் அதிகம். சிட்டி பஸ்களில் பெண்கள் குழந்தையோடு நின்று பிரயாணம் செய்யும்போது இடுப்பில் வைத்த குழந்தையின் ஒரு கை பின்பக்கனாக போட்டு தாயின் இடுப்பில் இருந்தவாறு அந்த குழந்தை பஸ்ஸில் பிரயாணம் செய்யும், இதேபோல் குழந்தையின் ஒரு காலும் பின்பக்கம் தொங்கிக்கொண்டு இருக்கும். சிட்டி பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருக்கும். பஸ்ஸை விட்டு குழந்தைவைத்துகொண்டு இறங்கும் போது குழந்தையின் ஒரு கையில் தங்க வளையலும் ஒரு காலின் கொலுசும் காணாமல் போய் இருக்கும். பஸ்ஸில் வந்த திருடர்களின் திருவிளையாடல் இதுவாகும். இதுபோல் ஆண்கள் மீது உரசி செல்லும் டிப்டாப் அழகிகள் மீது சில வாலிபர்கள் கவனம் செலுத்தாத அந்த வேளையில் வாலிபர்களின் பேன்ட் பின் பக்கெட்டில் வைக்கப்பட்ட மணிபர்சை உரசிய அந்த பெண் நைசாக பிக்பாக்கெட் செய்துவிடுவார்கள். சிட்டி பஸ்களில் பிட்பாக்கெட் செய்பவர்கள் ஏறுவதை பஸ் கண்டக்டர்கள் நாசூக்காக சொல்லும் வார்த்தை கூட்டம் நிறைந்த பஸ்சிலும், கூட்டம் இல்லாத சில பஸ்களிலும் பிட்பகட் அடிப்பவர்கள் ஏறி இருப்பதை கண்டதும் கண்டக்டர் சம்பந்தமில்லாமல், உள்ளே போங்கள் உள்ளே போங்கள் என்று சப்தமிடுவார் இது நமக்கு ஒரு செய்கை ஆகும்.
சென்னையில் ஆபீசுக்கு போகும் காலை 10 மணிக்குள் மாலை 5 மணிக்குமேல் இரவு 7 மணிவரை சிட்டி பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் பிட்பாகட், டிப்டாப் ஆசாமிகள் திருடி பெண்கள் அவர்களின் கூட்டம் பஸ்களில் அதிகமாக ஏறி கைவரிசை காட்ட ஆரம்பிப்பார்கள். மண்ணடியில் இருந்து வண்ணாரபேட்டை, தண்டையார் பேட்டை, ராயபுரம் போகும் பஸ்களில் திருடர்கள் கூட்டம் அதிகமாக பயனம்செயவார்கள். மற்ற சிட்டி இடங்களில் ஆபீஸ் போகும் நேரமும் ஆபீஸ் விடும் நேரமும் இந்த திருடர்கள் கூட்டம் அதிகமாக பயணம் செய்வார்கள். பொதுவாக ஏமாறுபவர் இருக்கும் வரை எமாத்துபவர் இருப்பார். உஷாராக இல்லாத அனைவரிடம் கைவரிசை காட்டும் உழைக்க தெரியாதவர்களால் மக்களின் பணங்கள் உடமைகள் பறிபோகிறது.
பிக்பாக்கெட் திருடனை கண்டேன்.
சென்னை அண்ணாச்சாலை வரை போகும் பகல்வேளை பஸ்ஸில் ஏறி பிரயாணம் செய்த போது சிட்டி பஸ்ஸில் டிரைவர் சீட்டிற்கு பக்கத்தில் நடைபாதை அருகில் உள்ள சீட்டில் அமர்ந்து புத்தகம் படித்துகொண்டிருக்கிறார், பார்வைக்கு அவர் ஒரு ஐயர் போல் எனக்கு தெரிந்தது. வெள்ளை ஷர்ட்டும் வெள்ளை வேஷ்டியும் அணிந்திருந்தார். நின்று பிரயாணம் செய்த ஒரு கும்பலில் ஒருவரின் தோளில் போட்டிருந்த டவல் படித்துக்கொண்டிருக்கும் ஐயரின் பைக்கட்டை மறைத்து அந்த டவல் விழுந்திருக்கிறது. இது எதாச்சையாக விழுவது போல் பஸ்ஸில் நின்று பயணம் செய்பவர் காட்டிக்கொள்கிறார் பக்கத்தில் நின்ற இன்னொரு பிட்பாக்கட் திருடன் படித்துக்கொண்டிருக்கும் ஐயரின் பாக்கட்டில் உள்ள 100 ரூபாய் நாளைய்ந்து முறை எடுத்து அடுத்தவரிடம் பாஸ் செய்கிறார் அது பயணம் செய்து பஸ் படிக்கட்டு வரை செல்கிறது இதை கண்ட நான் ஐயரிடம் சென்று பணத்தை எவ்வாறு பாதுகாப்பது என்ற நூலை வாங்கி பஸ்ஸில் படித்துக்கொண்டு செல்லுங்கள் என்று கூறிய போது டவல் போட்ட மற்ற ஒரு திருடன் வந்து பாய் உங்களுக்கு தேவை இல்லை ஏமாந்தவர்களையும் பணத்தை பாதுகாக்கத்தெரியாதவர்களையும் தேடி சென்று பணங்களை அடிப்போம் பாய் கீழே பாருங்கள் என்று வலது கையில் சிறிய பிளேடை விரல்களுக்கு இடையில் வைத்திருந்தான் அதை காட்டி பேசாமல் போய் விடுங்கள் இல்லையெனில் குடல் சரிந்து விடும் என்று மிரட்டினான் நான் பயந்து [pr &sons bus stopil] சம்பந்தம் இல்லாதவன் போல் இறங்கி விட்டேன் இறங்கியதும் அந்த ஐயரிடம் விவரங்களை சொல்ல வீதி பக்கமாக வந்த போது பிட்பாக்கெட் திருடன்களில் ஒருவன் ஜன்னல் பக்கமாக தலையை வெளியே நீட்டி இன்னும் கொஞ்சம் தான் இருக்குது அதையும் முடிச்சிருவோம் பாய் என்று சொல்லும்போது பஸ் புறப்படுகிறது பேருந்திலிருந்து இறங்கிய ஒரு டவல் போட்ட திருடன் எனதருகில் வந்து இதுவரை 1300 அடித்திருக்கிறோம் மீதியை பஸ்ஸில் இருப்பவர்கள் கவனித்து முடித்து விடுவார்கள் நீங்கள் எங்களது சகாக்கள் சொன்னதை வைத்து பயந்து இறங்கி விட்டீர்கள் என்று என்னிடம் கூறினான் அவனை நான் மண்ணடி பகுதியில் அடிக்கடி பாத்திருக்கின்றேன் இது போல நிறைய சம்பவங்கள் எழுதிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த இந்த இணையதளம் உதவிக்கரமாக நின்றதற்கு நன்றி,அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்... |