உலகளாவிய வாழும் இணையதள நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். மூன்றாம் பாகம் சற்று கால தாமதம் ஆவதற்கு காரணம் பொறுப்பற்ற நிலையல்ல, விமான பயணத்தில் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து வெளிநாட்டு பயணங்களை தொடர்கின்றவர்களிடம் தகவல் கேட்டேன், இதுவரை ஊரில் யாரும் தரவில்லை. அவர்களின் நேரமின்மையால் எனது கட்டுரை சுனங்கி எழுத வேண்டியதாகிவிட்டது. இத்தொடரில் புகைரதம்(ரயில்), பேருந்து(பஸ்), வாகனம்(2 முதல் நான்கு சக்கரவண்டி), பறவக்கப்பல்(விமானம்) குறித்து எழுதி காட்ட முன்வந்துள்ளேன்.
புகைரதம் (ரயில்) பயணம்:
நான் சென்னைக்கு பயணம் செய்து 2007 வரை 50 வருடங்கள் பூர்த்தியானது. அதிகநாள் ரயில் பயணம், அடுத்து அரசு பேருந்தில் பயணம் தொடர்ந்திருக்கிறேன். ரயில் பயணம் சுகமானது, ஆனால் பலதரப்பட்ட ஊர்மக்கள் பலகுனம் படைத்தவர்கள். டிப்டாப் கில்லாடிகள் பயணம் செய்வார்கள். பேச்சில் இனிமை இருக்கும் ஏமாந்தால், நாம் கொண்டுசெல்லும் உடமைகள் காணாமல் போய்விடும். திட்டமிட்டு திருட வருபவர்களை காண்பது அரிது. ரயில் பயணத்தில் நம்மை சுற்றி ஐந்து பேர் அமர்ந்து இருப்பார்கள்,ஒவ்வொருவரும், ஒவ்வொரு துறை சார்ந்தவர்களாக பல்வேறு தொழில் வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். வலியவந்து பேச்சு கொடுத்தால் அவரை புரிந்துகொண்டு பேச்சை கட்பன்னுவது புத்திசாலித்தனம். ரயிலில் தனித்து பயணம் செய்தால் நமது பெட்டிகளுக்கு நீண்ட சங்கிலி போட்டு பூட்டி வைக்கனும். மேல்நாட்டு நல்ல பூட்டாக இருக்கனும். நம் நாட்டு பூட்டுகளுக்கு கள்ளசாவி தயாரித்து வைத்து ரயிலில் பயணம் செய்யும் கும்பல் நிறைந்து காலம். சமீபத்தில் ஒரு ஒரு பள்ளி மாணவனை போலீசார் சந்தேகத்தில் பிடித்து இசாரித்தால் அந்த பையன் பூட்டுகளுக்கு பலவித கம்பிகள் மூலம் பூட்டை திறக்கும் மாஸ்டர் பைக், கார், வீடுகளில் தொங்கும் பூட்டு பீரோ என்று பலவித சாவி கிடையாது சாதாரண கம்பியை வைத்து திருகி பூட்டை திறக்கும் திறமைசாலி இப்படி பட்டவனும் தமிழ் நாட்டில் கள்ளர்களுடன் தொடர்பு வைத்ததாக தெரிகிறது. இவன் வீட்டிற்கு அடங்காமல் காணாமல் போன சிறுவன் தானாம்.
ரயிலிலோ,....... பஸ்ஸிலோ கவனம்:
ரயிலிலோ....பஸ்ஸிலோ பிஸ்கட், மிகஷர், ஜூஸ் தந்தால் அன்போடு வாங்கி சாப்பிட்ட காலம் மலை ஏறிவிட்டது. ரயில் பயண அன்பு - வம்பில் மாட்டிவைக்கிறது. ரயிலில் பாசத்தோடு தந்த பிஸ்கட் தூக்கத்தில் போட்டு உடமை பறிகொடுத்து கடைசியில் துக்கத்தில் தள்ளிவிடுகிறது. ரயிலில் உள்ள அறிவிப்புகளில்- பயணம் செய்பவர்களுக்கு பிஸ்கட் கொடுக்காதீர்கள் நீங்களும் யார்தந்தாலும் வாங்கி சாப்பிடாதீர்கள் என்று போடு எழுதி உள்ளது. ரயிலில் சக பயணிகளுக்கு உதவி செய்தோமா அத்துடன் நிறுத்திகொள்ளுங்கள். அவர்களை முழுமையாக நம்பிவிட்டால் - அதேகதிதான். லட்சத்தில் ஒரு நபர் நல்லவராக இருக்கலாம். ரயில் பயணத்தில் இக்காலத்தில் யாருடனும் பேசாமல் பிரயாணம் செய்வதே சாலச்சிறந்தது. ஒரு நல்ல நூலை கொண்டு போங்க அதை படித்துக்கொண்டே உலகத்தை அறியலாம் அல்லது தமிழில் திருக்குர்ஆன் தர்ஜுமா படித்து தெரிந்துகொள்ளாம். அதேசமயம் உடமைகளில் கவனம் இருப்பது நல்லது, நமது கவம் சிதறும் போது திருடன் உஷார் ஆகிவிடுவான்.
நடைமேடை (பிளாட்பாரம்) ஓர் கவனம்:
திருசெந்தூரில் இருந்து நமதூர் மார்க்கமாக சென்னை செல்லும் ரயில் பலகாலம் மீட்டர் கேஜ் (சின்ன இருப்புபாதை) ஆகா இருந்தது. சமீபகாலமாக பிராட் கேஜ் பாதைக்கு மாறி உள்ளதால் ரயில் நிற்கும் போது ரயிலில் ஏறும் போது ரயிலின் நுழைவு வாயிலுக்கும் பிளாட் பாரத்திற்கும் இடையில் அரை அடி இடைவெளி பள்ளமாக உள்ளது. இதை கவனத்து காலை கொஞ்சம் பார்த்து அகலமாக வைக்கனும். ரயிலில் பயணம் செய்யும் புதிய நபர் இந்த இடைவெளி பள்ளத்தில் தெரியாமல் காலை விட்டு அவதிப்பட்ட பெரியவர்களும் உண்டு. மக்கள் சவுகரியத்திற்காக ரயில்வே அதிகாரிகள் எதையும் செய்யாமல் கண்டுகொள்வதில்லை. அரசு இந்த குறையை தீர்க்க மக்களுக்கு நன்மை செய்ய அல்லது ரயில் பயணிகளுக்கு உதவிட பலகோடி முதலீட தயாராக இல்லை. ரயில்வே சங்கங்களுக்கு எடுத்து வைத்தால் - போராட்டம் நடத்தினால், நடத்தியவனுக்கும் ஆதரவு கிடைக்காது. நன்மை செய்ய போய் திண்மையில் மாட்டி கொள்ள வேண்டுமா என்று ஒதுங்கி விடும் நபர்களை அன்றாடம் காணுகின்றோம். மீட்டர் கேஜ் பாதையில் பிராட் கேஜ் ரயில் தண்டவாளம் அமைக்கும் போது ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பிளாட்பாரத்தை உயரத்தில் படிக்கட்டு பக்கம் நெருக்கமாக்கி இருந்தால் மக்கள் இந்த அவதிக்கு தினமும் ஆகமாட்டார்கள்.
ரயில் பயணத்தில் நள்ளிரவில்:
ரயில் பயணத்தின்போது நள்ளிரவில் தனியாக எந்த பெண்ணும் ஆண் துணை இல்லாமல் பாத் ரூம் செல்லக் கூடாது. ஆண் துணையோடு நள்ளிரவில் பெண்கள் பாத் ரூம் போகும் போது வெளியே ஆண்களை நிற்கவைத்து செல்ல வேண்டும். பெங்களூர் லேடி டாக்டரை நள்ளிரவில் ரயிலில் பாத் ரூம் அருகில் கற்பழிக்க முயன்றபோது அவள் போட்ட கூச்சலால் பிரயாணிகள் விளித்து ஓடிவர - கதவை திறந்து கயவன் நள்ளிரவில் ஓடும் ரயிலில் இருந்து ஓடிமறைந்து விட்டான். ரயில்வே பாதுகாவலன் கூட சிலசமையம் நள்ளிரவில் தனியாக பாத் ரூம் செல்லும் பெண்களிடம் தவறாக நடந்து இருப்பதாக பத்திரிகை குறிப்பில் கண்டோம்.
பதட்டமான பயணத்தில்:
எப்போது ரிசர்வு செய்து சுகமாக பயணம் செய்பவர்கள் கூட திடீர் பயணத்தால் சீட்கிடைக்காமல் அல்லல்படும் நேரம் டிக்கட் தூர பயணத்திற்காக வாங்கியாகிவிட்டது பெர்த் கிடைக்கலே என்று திகைக்கும் பதட்டமான வேளையில் ஒருவர் எதோ ஒரு டிக்கட்டை தந்து நான் இன்று பயணம் செய்யலே பெர்த் உள்ளது கேன்சல் செய்ய நேரமில்லை நீங்கள் பாதி காசு தந்தால் போதும். இதை பிடியுங்கள் பயணம் செய்யுங்கள் என்று பாதி ரூபாயை மீதிவாங்காமல் ரயிலில் ஏற்றிவிட்டு போய்விடுவார் பெர்த் கிடைத்த உற்சாகம் அப்பாடா எதோ கிடைச்சது என்று திருப்தியோடு ஓடும் ரயிலில் சீட்டின் அமர்ந்த சில நிமிடத்தில் ஓர் பேர் இடி சார் இதே தேதி போனமாச டிக்கட் எனக்கு கட்ட வேண்டிய தொகையை கட்டிவிட்டு போங்க என்று சொன்ன டி டி ஆர் உம உண்டு. அவசரத்தை பயன்படுத்தி ஏமாற்றும் எத்தர்கள் கூட்டம் நம் நாட்டில் அதிகம். உழைக்காமல் சம்பாதிக்கணும், யாரையாவது எமற்றனும் எப்படியோ பணம் வந்துவிடணும் என்ற ஒரு குறுகிய ஆசைகொண்ட கயவர்கள் நிறையவே உண்டு.
பெட்டியை மாற்றும் கும்பல்:
ரயில் பயணத்திலும் சரி, பஸ் பயணத்திலும் சரி பெட்டியை மாற்றி எடுத்துபோகும் களவானி கும்பல் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் கீழக்கரையை சார்ந்த ஒருவர் பிறை 28 ரமளானில் ஊர் புறப்பட்டு போக பஸ் ஏறினார் பின்தொடர்ந்து கண்காணித்து வந்த கும்பல் அவரை பின்தொடர்ந்து போய் அவர்வைத்த அதே பகுதியில்(தனியார் பஸ்ஸில்) திருடும் கும்பல் பெட்டியை வைத்து அவரை அங்கும் இங்கும் நகரவிடாமல் அவரின் பெட்டியை மாற்றி அபேஸ் செய்து மறைந்துவிட்டார்கள். ஊரில் உள்ள ஏழைகளுக்கு கொடுக்க பண கவர்கள் 45000 அதில் இருந்திருக்கிறது. பஸ் புறப்பட்டு சிறிது நேரத்தில் பெட்டி மாறி இருப்பதை உணர்ந்து டிரைவரிடம் ரிபோர்ட் செய்தபின் பஸ் நிறுத்தப்படுகிறது. போன பெட்டி போனது தான் இழந்த ரூபாய் இழந்தது தான். திறமைசாலியான கீழக்கரை நபருக்கே இப்படி ஆனதை கேட்கும் போது டிப்டாப் களவாடி கும்பலை காண்பது கஷ்டம் என்கிறார்கள். பஸ் ரயில் பயணத்தில் பிளாட் பாரத்தில் வியாபாரியிடம் மீதி பணத்தை பெற்றி உரிய பொருள்களை வாங்கிய பின் நம் பணம் கொக்க இல்லாவிட்டால் வெளியில் நின்ற வியாபாரி ரயில் பஸ் புறப்படும் வரை பொருளையும் தராமல் பணத்தையும் தரமாட்டான். ரயிலோ பஸ்ஸோ புறப்படும் சமயம், ஓடிவந்து தருவதுபோல நடிப்பான், நமது பணம் இழந்துவிட்டதை நினைப்போம்.
ரயிலில் விற்பனை வியாபாரிகள்:
ரயிலில் கொண்டுவந்து விற்பனை செய்யும் பெட்ஷீட், புடவைகள் ஏற்க்கனவே உபயோகித்ததாக இருக்கும், அல்லது பெரிய லாட்ஜில் போடப்பட்ட பெட்ஷீடாக புதுசு போலா இருக்க செய்து லேபில் ஒட்டி ஏலம் இடும் முறை நடத்துவார்கள். 25 ரூபாய்க்கும் பிரோஜனப்படாத பல்லாண்டு பழையது பார்க்க புதிதாக தெரியும் 100 ரூபாயில் ஆரம்பித்து ரயில் பயணத்திலேயே ஏலம் விடுவான். ஏலம் கேட்பவருக்கு ஒரு சீப்பு அடையாளமாக தருவான் ஏலம் கேக்கும் அனைவரும் அவனின் ஆட்கள்தான் வெளியாள் போல காட்டி கொள்வார்கள், பயந்தவன் பாதி விலை கேட்டமாதிரி போல 250 ருபாய் கேட்டபின் யாரும் கேட்கவில்லை சார் எடுங்க உங்க அதிர்ஷ்டம் பாம்பே டையிங் துணி 650 ருபாய் போகும் நீங்க கொடுத்து வைத்தவங்க என்று நம் தலையில் கட்டி பணத்தை எண்ணி வாங்கிட்டு போடுவார்கள். வீடு சென்று பார்த்தல் பல இடத்தில் டேமேஜ் புரியும் அது லாட்ஜில் படுத்த விபரம் பின்னால் தெரிய வரும். சோதித்து பார்த்தால் எங்கோ ஓர் இடத்தில் வண்ணன் குறி தலையை காட்டும். ரயில் பஸ்ஸில் தங்க சயின்போட்டு கொண்டு ஜன்னல் அருகே அது வெளியே தெரிகிற மாதிரி இருந்தால் ரயில் பஸ் புறப்படும் சமயம் சில களவாடி பயல்கள் தங்க செயினை இழுத்து அறுத்து ஓடி மறைவார்கள். ரயில் பஸ் புறப்படும் சமயம் ஓர் கும்பல் ஏறி மறைந்து நிற்கும் மற்றவர் பெட்டிகளை கடத்துவதில் ஈடு படுவார்கள் இதில் நமது கவனம் அதிகம் தேவையாக இருக்க வேண்டும். அனுபவசாலியை கூட ஏமாற்றும் கும்பல் உண்டு.
(இன்ஷா அல்லாஹ் வளரும்)
ரயிலிலோ ..........பஸ்சிலோ............. தலைப்பின் கீழ் மூணாவது வரியில் பிஸ்கட் துக்கத்தில் என்பதற்கு பதிலாக "தூ"க்கத்தில் (அதாவது து பதிலாக தூ இருக்க வேண்டும்).
ஐந்தாவது வரியில் ரயிலில் உள்ள அறிவிப்பு பதிலாக அரிப்பு என்று இருக்கிறது, இந்த இரு வரிகளில் உள்ள பிழைகளை திருத்தி வாசகர்களுக்கு தர விரும்புகின்றோம்.
ALS மாமா.
|