கனவு அல்ல நிஜம் (சரித்திரம் படைக்கும் காயல் நகர்மன்றம் 2011) posted bysalih (Bangkok)[14 August 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 20851
அனைத்துக்கட்டுரைகளும் மிகவும் அருமையாகவும் அற்புதமாகவும் இருந்தது.அனைவருக்கும் எனது ஸலாத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழர் கவிமகன் காதர் அவர்களின் கட்டுரை காயல்பட்டணம்.காமில் முதலாவதாகவும் என்னுடயை பார்வைக்கு முதலிடமாகவும் அமைந்திருக்கிறது.அதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிடவில்லை.
கடந்த கால நம் காயல் நகர்மன்ற வரலாற்றை மனக்கண் முன் கண்ணாடி போல் படம்பிடித்துக்காட்டியுள்ளார்.
அதனால்தான் என்னவோ முன்னமே அவர்கள் வீட்டிற்கு
கண்ணாடி ஆலிம் வீடு
என்று பெயை வந்ததோ என்று எண்ணத்தோன்றுகிறது.
நம் மக்கள், நம் சமுதாயம், நம் ஊர், நம் நகர்மன்றம் மற்றும் அனைத்து மக்களும் பயன்பெறவேண்டும் ,ஒற்றுமையுடன் வாழவேண்டுமென்று அவருடைய மனது ஊரைப்பற்றியே ஒவ்வொரு நொடியும் சிந்தித்து தம் வேலைப்பளுவிற்கு மத்தியிலும் ஊர் நலனில் அக்கறை கொண்டு கனவு காணாமல் நிஜமாகவே நகர்மன்றத்தில் பலவருடங்கள் அனுபவப்பற்றவரைப்போன்று, முதிர்ந்த அனுபவசாலியாக வைரவரிகளாக பதித்து இருக்கிறார்,
இந்த சிந்தனை ஒவ்வொரு காயல் குடிமகனுக்கும் வரவேண்டும்.
ஆகமொத்தத்தில் தற்போதைய நகர்மன்றம் , ஒரு சிறந்த மனிதரின் தலைமையில் இயங்கும் எந்த சிறப்பும் இல்லாத நிர்வாகம் என்பதை பதிவு செய்ய எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என்பதுதான் உண்மையிலும் உண்மை.
மனதில் படுபவை :
நல்லவர்,மார்க்கம் கற்றவர்,ஒழுக்கம் பேணுபவர்,இளைஞர் இப்படி ஏதேதோ எழுதுகின்றீரே? அப்படி யாராவது ஒருசிலரை உம்மால் அடையாளம் காட்ட முடியுமா என்று என்னிடமே திருப்பிக் கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை கேட்டுவிட்டால்? அதற்கும் பதில் இருக்கிறது.
பெயர்களை அடையாளம் காட்டாமல் தவிர்த்திருந்தால் கட்டுரைக்கு மேலும் வலுசேர்த்திருக்கும்.
ஒவ்வொரு காயல் குடிமகனும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை.காயல்பட்டணம்.காம் பார்க்காத நமக்கு தெரிந்த நம் காயல் நண்பர்களுக்கு இந்த கட்டுரையை இமெயில் செய்யுமாறு வேண்டிகிறேன்.
வருகின்ற நகர்மன்ற தேர்தலில் கவிமகன் எதிர்பார்க்கும் கொள்கை, பகுதி என்ற பேதமின்றி ஒன்றுபட்ட உயர்வான காயலை உருவாக்குவோம்! இன்ஷா அல்லாஹ்!
தோழர் காதரின் சமுதாய எழுத்துப்பணி தொடர மனமார வாழ்த்தி
துஆ செய்யும்
என்றும் அன்புடன் மு.ஹ. செய்யது முஹம்மது சாலிஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross