Re:நான் எதிர்பார்க்கும் நகர்... posted byvsm ali (kangxi, Jiangmen , China)[15 August 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 20859
உங்களது அனைவரது கட்டுரைகளும் படிப்பதற்கு நன்றாக உள்ளது . அனைவருமே , அவர் வந்தால் நன்றாக இருக்கும், இவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள் . எவர் வந்தாலும் , மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே , சிறந்த நகராட்சியாக செயல்பட முடியும் . இப்போது இருக்கும் நகராட்சியின் சட்டங்களை , மக்கள் மதித்தாலே போதும் , நகராட்சி நன்றாக செயல்பட முடியும் . அல்லது நகராட்சி கடுமையான சட்டங்களை இயற்றி , பார பட்சமின்றி செயல் படுத்தினாலும் , நன்றாக செயல்பட வாய்ப்பு உண்டு
.
அடுத்து , ஒரு கட்டுரையாளர் DCW பற்றி கடுமையாக சாடி இருக்கிறார் . புற்று நோய்க்கு அது ஒன்றுதான் காரணமாம். தற்போதைய பத்திரிகை செய்தியில் , நம் நாட்டின் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு பெண்மணிக்கு புற்று நோய் , வெளிநாட்டில் சிகிச்சை என்று . அந்த அம்மையார் நம் DCW வை ஒரு முறை கூட எட்டிப்பார்த்தது இல்லை , பின், அவருக்கு எப்படி புற்று நோய் வந்தது ? நம்முடைய உணவுப்பழக்கமும் கூட புற்று நோய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் . DCW வை பற்றி இவ்வளவு பேசுகிறோமே , சமீபத்தில் நடந்த இஸ்லாமிய இலக்கிய மாநாட்டு மலரில் , DCW இல் பணத்தை வாங்கிக்கொண்டு , அவர்களுடைய விளம்பரத்தையும் போட்டு இருக்கிறார்கள். இது என்ன logic என்று தெருயவில்லை
.
அடுத்து ஆட்டோ காரர்களின் கட்டண முறை பற்றி ஒரு கட்டுரையில் வருகிறது . கட்டணம் அதிகம்தான் . ஆனால் அதற்க்கு காரணம் ஆட்டோகாரர் மட்டும் அல்ல , அந்த ஆட்டோவின் உண்மையான முதலாளியும்தான். நகரில் பெரும்பான்மையான ஆட்டோகாரர்கள் , ஆட்டோவை வாடகைக்கு எடுத்துதான் ஓட்டுகின்றனர். ஆட்டோ ஓடினாலும் , ஓடாவிட்டாலும் அவர்களின் முதலாளிக்கு தினமும் கப்பம் கட்டி விட வேண்டும் . முதலாளிமார்களும் , ஆட்டோ ஓடாவிட்டாலும் கூட , அவர்களுடைய வருவாயை மிகவும் கறாராக கறந்து விடுகின்றனர் . பின், ஆட்டோகாரர் என்ன செய்வார் ? பயணிகளிடம்தான் வசூலிக்க வேண்டிய கட்டாயம்.
அடுத்து , தண்ணீர் உறிஞ்சுதல் , லஞ்சம் , பற்றியெல்லாம் கட்டுரையில் வருகிறது . இதற்கு , ஒன்று மக்கள் தாங்களாக , அல்லாஹுக்கு பயந்து , திருந்த வேண்டும் , அல்லது நகராட்சி , தவறு செய்பவர்களை முகதாட்சண்யம் பாராமல் , கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டும்.
பார பட்சமின்றி , நேர்மையாக நடக்கும் உறுப்பினர்களையும் , தலைவரையும் தேர்ந்தேடுப்போமோக , அல்லது இருக்கும் உறுப்பினர்கள் , தலைவரை நீடிக்க செய்து , நாம் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போமாக .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross