Re:நான் எதிர்பார்க்கும் நகர்... posted byvsm ali (Kangxi , Jiangmen , China)[17 August 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 20868
சலாம் காக்கா
.
நான் ஏதாவது கருத்து சொன்னால் , நம்மில் பெரும்பான்மையோர் அதை பிரச்சினையாகவே எடுத்துக்கொள்ளும் இந்த வேளையில் , நீங்கள் என்னுடைய கருத்தை , சற்று புகழ்வதாக தோன்றுகிறது .
இருப்பினும் DCW விவகாரத்தில் , நீங்கள் சிரிப்பதை விட சற்று சிந்தித்து இருக்கலாம். தங்களின் முதல் வரியில் " உள்ளங்கை நெல்லிக்கனி " என்று கூறி , புற்று நோய்க்கு DCW தான் காரணம் என்று உறுதியாக சொல்கிறீர்கள். பிறகு DCW உம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்கிறீர்கள். இரண்டில் நான் எதை எடுத்துக்கொள்வது . " உள்ளங்கை நெல்லிக்கனி " என்று எடுத்துக்கொண்டால் , நம் ஊர் , மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள அத்தனை பேருக்கும் அல்லவா புற்று நோய் வர வேண்டும். தங்க ஊசியால் கண்ணை குத்த முடியாதுதான் , ஆனால் அந்த ஊசியைக்கொண்டு பிற பயன்களை அடையலாம். நீங்கள் என்னை புகழ்ந்த போது சற்று மகிழ்ச்சி அடைந்தது என்னவோ உண்மை . ஆனால் சிரித்தேன் என்று சொன்னபோதும் கூட அந்த மகிழ்ச்சி சற்றும் குறையவில்லை . ஏனெனில் நன்கு படித்த நீங்கள் சிரிக்கும்போது , அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் . படித்தவர்களை மதிப்பவன் நான், என்னுடைய ஒருசில கருத்துக்களை நீங்களும் ஏற்றுக்கொண்டுள்ளதற்கு நன்றி .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross