அன்பு நெஞ்சங்களே! . posted bykavimagan (dubai)[17 August 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20869
அன்பு சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!
எனது இந்தக் கட்டுரையை, நான் எழுதியவாறே பிரசுரித்த
நமது வலைதள நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
பாராட்டியும்,தவறுகளை சுட்டிக்காட்டியும்,வலைத்தளத்திலும்
தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் செய்தும் என்னை
ஊக்குவிக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
சகோதரர் சொளுக்கு அவர்கள் உடைய பதிவில் மதிப்புமிகு
பாவலர் அவர்களுடைய பெயரை சொல்வதற்கு மனமில்லையா?
என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.நகர்மன்ற
வரலாற்றை சுருக்கமாக சொல்லவேண்டும் என்ற காரணத்தால்,
பாவலர் அப்பா அவர்கள் பெயரை மாத்திரமல்ல,இன்னும் நல்ல
பல தலைவர்கள் பெயரையும் குறிப்பிடவில்லை. அதனால்தான்,
பொதுவாக நூறாண்டு கால நகர்மன்ற வரலாற்றில் தலைவர்கள்
அனைவரும் கண்ணியமாகவும்,பொறுப்புணர்வோடும் தத்தம்
கடமைகளை சிறப்பாக செய்தனர் என்று சுருக்கமாக எழுதி
இருந்தேன். நகரின் ஒற்றுமையை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு
எழுதிய எனது கட்டுரைக்கு,தயவுசெய்து உள்ளர்த்தம் கற்பித்து
அதுவே ஒற்றுமைக்கு பங்கமாகிவிட நண்பர்கள் யாரும் காரணமாகி
விடவேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.
எல்லோரும்,எல்லாக் காலங்களிலும் நல்லவர்களும் அல்ல,கெட்டவர்களும்
அல்ல.அதுபோல எல்லோரும் ,எல்லோருக்கும் நல்லவராகவும் இருந்து
விட முடியாது. இது எனக்கு மாத்திரமல்ல! எல்லோருக்கும் உடன்பாடான
கருத்துதான். எனது இந்தக் கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்த
அல்லது சிலரை உயர்த்தி பிறரை தாழ்த்துவதற்காக எழுதப்பட்டதும்
அல்ல.அப்படி யாருடைய மனதையாவது எனது எழுத்துக்கள் காயப்படுத்தி
இருந்தால், அதற்காக வருந்துகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்.
எனது மற்றும் நமது ஒரே ஆசை நல்ல மனதுடைய,,திறமையும் கொண்ட
நேர்மையானவர்கள் நகர்மன்றம் சென்றால், சிறப்பான திட்டங்கள் அனைத்தும்
தானாகவே நிறைவேறும் என்பதுதான். பதிவு செய்யப்பட்ட அனைத்து
கட்டுரைகளும் சிறப்பாகவும்,சிந்திக்க வேண்டியதாகவும் இருக்கிறது.
அனைத்து கட்டுரையாளர்களுக்கும் இதயம் நிறைந்த பாராட்டுக்கள்!
மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்! பாவலர் அவர்கள் பெயரை
குறிப்பிடாதது மனது இல்லாத காரணத்தால் அல்ல! இந்தக்
கட்டுரையை எழுதும்போது எனக்குத் தோன்றாத காரணத்தால்
மட்டுமே! தயவுசெய்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross