நடுதலும்,பிழுதலும் நாற்றுக்கு மட்டுமே...நமக்கில்லை...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ்மைந்தன். (????????????)[27 February 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 20940
கமெண்ட்ஸ் நம்பர் 10. சகோதரர் ஷஃபியுல்லாஹ் அருமையான கருத்தை தந்துள்ளார்.அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள்.அழகான கருத்து,சொல்லும் விதம்,எழுத்து நாகரீகம்,அனைத்தும் உள்ளது. இதை ஷஃபியுல்லாஹ் அவர்களேக் கூட செய்யலாம்.காரணம்,ஆங்கில கருத்துக்களை விட தமிழ் (தாய் மொழியில்) உள்ள கருத்துக்களையே பலரும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். எனவே தாம் தமிழில் டைப் செய்யும் வசதி இவ் வலைதளத்தில் தரப்பட்டுள்ளது.இந்த வசதி வந்த பின் கருத்தாளர்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்துள்ளது.
பொதுவாக, கருத்து என்பது எண்ணங்கள்,மற்றும் செயல்பாடுகளின் பிரதிபலிப்பே ஆகும். ஆயிரக் கணக்கானோர் படிக்கும் போது முகம் சுழிக்கும் வண்ணம் எழுதுவதை தவிர்த்தல் வேண்டும். கருத்து எழுதும் போது எழுத்தில் சில நாகரீகங்களைக் கடைபிடித்தல் அவசியம்.புல்லைப் பிடுங்குதல், பல்லைப் பிடுங்குதல் போன்ற வார்த்தைகளைக் கையாளக்கூடாது.
இதனால் சில தரமான கருத்து எழுத்தாளர்கள் கூட கடைசி பெஞ்சுக்குப் போய்விடுகின்ற நிலை தான் வருகின்றது.
குதர்க்கம்,குத்தல் போன்று எழுதுவது சிலரது வாடிக்கை.சில நேரங்களில் அது ரசிக்கும் படி இருக்கலாம்.அதற்காக அவைகளுக்கு விளக்கம்,மறு கருத்து என தொடரும் போது தான் பிரச்சனைகள்,மன உறுத்தல் என மாறிவிடுகின்றது.எனவே தயவு செய்து இனி நடுதல்,பிடுங்குதல்,களை பறித்தல் ஆகியவற்றைத் தவிர்ப்போமாக.
நான் காயல்பட்டணம் டாட் காமில் கருத்தெழுதித் தான் எத்தனையோ நபர்களின் நல்ல நட்பை பெற்றேன்.பெற்றுக் கொண்டும் வருகின்றேன்.ஓர் அழகான கருவி இவ் வலைதளம் அதை முறையாகப் பயன்படுத்தி பயனடைவோமாக!
குசும்பு:
அட்மின் அவர்களே! நான் அவ்வப்போது கருத்தின் இறுதியில் குசும்பு என்ற கொசுரு எழுதுவது வழக்கம். அதுலெ போய் புல்லைப் புடு....ஸாரி....ஸாரி.... கத்திரி,கித்திரி போட்டுறாதீங்க....
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross