இக்கட்டுரையில் எனக்கு மிகப் பிடித்தது................ posted byShameemul Islam SKS (Chennai)[27 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20943
இக்கட்டுரையில் எனக்கு மிகப் பிடித்தது YUF பற்றிய செய்தியில் புகாரி மாமா அவர்களை நினைவு கூர்ந்ததுதான்.
ஒரு மாணவர், பருவ வயதில் நல்ல சிந்தனையோடு இருப்பதற்கும் தவறான பாதையில் சிந்திக்காமலும் செயல்படாமலும் இருப்பதற்கும் அந்த மாணவனது அறிவுக்கண்ணைத் திறப்பது தான் மிக அவசியம் என்பதை அறிந்த அன்னார்
"பிச்சைப் புகினும் கற்கை நன்றே"
என்னும் பழமொழிக்கேற்ப
"திருட்டே செய்தும் (அறிவுத்)திறனை வளர்"
என்னும் புது மொழிக்கு அர்த்தம் கொடுத்தார்கள்.
ஆம் மறைந்த என்னருமைத் தந்தை SKS (SK மாமா) உடன் இவர்களும் சேர்ந்து வீட்டில் உள்ள பழைய ஜன்னல்களையும் கதவுகளையும் வீட்டின் அனுமதி பெறாமலேயே எடுத்து வந்து நூலகத்தை உருவாக்கி வீட்டில் செம அடியும் பெற்ற கதை பிறர் சொல்ல நான் கேட்ட என் வாழ்வில் மறக்க முடியாத வரலாறு.
இன்று காயல் மாநகர் செல்லும் போதெல்லாம் கிழக்கோரம் அமைந்துள்ள YUF சங்கத்தை கடந்து செல்லும் போது அதிகமான மாணவர்கள் பத்திரிக்கைகளைப் படிப்பதைப் பார்க்கும் போது அது ஒரு கண் கொள்ளா காட்சியாகவே அமைகின்றது.
இத்தருணத்தில் என் கல்லூரியின் alumni -யான ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி முஹம்மத் அலி அவர்கள் மறைந்த புகாரி அவர்களை நினைவு கூர்ந்தமை நன்றி பாராட்டத்தக்கது.
இன்னொரு முக்கிய தகவல் மர்ஹூம் புகாரி அவர்கள் என் அருமை மச்சான் அப்துல் ரஷீத் (அவ்லியா) அவர்களின் மூத்த சகோதரர் ஆவார்கள்.
என் மச்சானின் சகோதரர் பாசத்திற்குரிய சகோதரர் முஹம்மத் அலி ஹாஃபிழ் அவர்கள் குருவித்துறைப் பள்ளியின் இமாம் என்று தான் பலருக்கும் தெரிந்திருக்கும்.
தற்போது அரபியில் M.Phil முடித்து P.hd செய்வதற்கான முயற்சியில் அவர்கள் இருந்து வருவது தந்தையின் அறிவுத்தேடலை அடிதொடர்ந்து தாமும் பின்பற்றுவதைக் காட்டுகிறது.
மற்றுமொரு தகவல் பாசத்திற்குரிய ஆலிம் பெருந்தகைகள் பாதுல் அஸ்ஹாப் மற்றும் ஹாமித் பக்ரி ஆகியோரின் மாமனார் தான் மர்ஹூம் புகாரி அவர்கள்.
மேலோன் அல்லாஹ் அன்னாரின் மண்ணறையைப் பிரகாசமாக்கி மறுமையில் மேலான சுவனபதியை அன்னாருக்குத் தந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross