Re:ஒரு வழி பாதைக்கு மனச் சுவ... posted byOMER ANAS (DOHA QATAR.)[29 February 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20954
இப்போதோ, பின்னரோ அடுத்தவர் மனம் வருந்தும் விதமாக எந்த செயலையும் செய்வது முறையல்ல. தவறுகள் பின்னர் திருந்தினாலும் அல்லது திருத்தப்பட்டாலும் கூட, அந்த தவறுகளால் ஏற்பட்ட காயங்கள், தங்க தாம்பாளத்தில் விழுந்த கீறலாக நிரந்தரமான தழும்புகளை ஏற்படுத்தி விடும். எனவே, நன்கு சிந்தித்து, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
மனைச் சுவர்களை மண்ணோடு மண்ணாக்கி இடிப்பதைப் போன்று, இந்த மனச் சுவர்களையும் - நமது பாசத்தால், பண்பால், பழகும் நேசத்தால் இடித்தால், முன் போலவே ஊனாகி, உணர்வாகி உறவில் கலந்து, உயர்வது எப்படி என்று யோசியுங்கள்... மகிழ்ச்சி ஊற்று மறுபடியும் நமக்குள் பொங்கி வழிவது நிச்சயம்...
மறப்போம்.
மன்னிப்போம்.
மறுபடியும் இணைவதற்கு படைத்தவனிடம் பரிகாரம் தேடுவோமாக...
சகோதரா உனது கருத்துக்கு என் பாராட்டுக்கள்!
உன் கருத்துக்கள் ஆணித்தரமாக மக்கள் மனதில் பதியவேண்டும்!நீ என்றும் பாதிக்கப்படுவோருடன் இருக்கவேண்டும்! உன் கருத்து போல் உன் செயலும் நிச்சயம் நல்லதாகவே இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross