சிறப்புக் கட்டுரைகள்:கூடங்குளம் – அணு எதிர்ப்புப் போராட்டம் தொடரக் காரணம் அந்நியச் சதியா? அரசின் மௌனமா? [ஆக்கம் - காயல் மகபூப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கூடங்குளம் – அணு எதிர்ப்... posted byShameemul Islam SKS (Chennai)[06 March 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 20966
மிக அருமையான விளக்கம்.
காலத்தால் மிக அவசியமான கட்டுரை.
ஆனால் சில கேள்விகளுக்கு விளக்கம் தரப்படவில்லை.
2.5% க்கும் குறைவான அளவில் கிடைக்கும் அணு மின்சாரத்தில் இவ்வளவு அச்சுறுத்தல் இருந்தும் அதில் போதிய பாதுகாப்பு குறித்து விளக்கம் இல்லை என்றே கூறவேண்டும்.
ஜப்பானில் ஏற்ப்பட்ட சுனாமியால் அணுமின் நிலைய பாதிப்பில் சிக்குண்டு மீள முடியாமல் தவிக்கின்றனர் அந்நாட்டு விஞ்ஞானிகள். அங்கே மக்களோ பதை பதைத்து நிற்கின்றனர். அதனைத்தொடர்ந்து இதர அணு மின் நிலையங்கள் உலகெங்கிலும் மூடப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் பல அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருவதற்கும் ஜப்பானில் நடந்த இயற்கை சீற்றமே காரணமாகும்.
ஒரு வல்லரசு தன்மை கொண்டு பொருளாதாரத்தில் கோலோச்சி நிற்கும் ஜப்பானுக்கே இந்த நிலை என்றால் நம் நாட்டில் குறிப்பாக அணுமின் நிலைய பகுதிகளில் இயற்கை சீற்றம் நடந்தால் என்ன பாதுகாப்பு. நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் துறையால் ஒரு SPACE SCIENTIST. NUCLEAR SCIENTIST அல்ல. ஆனால் இந்நாள் முன்னாள் அணு விஞ்ஞானிகள் பலர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றார்கள், ஏன்.
அமெரிக்கா எப்போதும் பிற நாட்டு வளர்ச்சியில் மூக்கை நுழைத்து வெறியாட்டம் ஆடுவது மறுப்பதற்கில்லை.
ஆனால் பாதுகாப்பில் இன்னும் தெளிவில்லாமல் நிற்கும் ஏராளமான கேள்விகளுக்கு பதில் அழித்து அப்பகுதி மக்களின் நம்பிக்கையை உறுதி செய்த பின் தேவை எனில் இம் மின்சார உற்பத்தியில் இறங்குவதே அறிவான செயலாக இருக்கும்.
கட்டுரையை இலகுவான வார்த்தைகளால் ஆக்கி எளிதில் விளங்க வைத்த பாசமுள்ள மகபூப் காக்காவிற்கு நன்றிகள்.
தொடர்ந்து மக்கள் நலன் கொண்ட பல கட்டுரையை தாருங்களேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross