Re:...வெள்ளைக்கஞ்சி யை மாற்றி மஞ்ச(இறைச்சி)க்கஞ்சி யாக போட்டு உடல் நலத்தையும் கெடுத்து தவாபிலும் கு posted byT,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852)[03 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21059
அஸ்ஸலாமு அலைக்கும்.!
மக்கள் தெரியாத்தனமாகவோ அல்லது பெருமைக்காகவோ வெள்ளைக்கஞ்சியை மாற்றி மஞ்ச(இறைச்சி)க்கஞ்சி யாக போட்டு உடல் நலத்தையும் கெடுத்து தவாபிலும் குறை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாயகம் (ஸல் )அவர்கள் ஓரிரு வேளை “ஹறீஸா “ எனும் இறச்சி கலந்த கஞ்சியை இஃப்தாறின் போது குடித்தார்கள் என மற்ஹூம் சாவன்னா ஆலிம் அவர்கள் ஒரு ஆதாரக்கித்தாபோடு வாசித்து எனக்குச் சொன்னர்கள்.
(அல்லாஹும்மங்ஃபிற்லஹூ வற்ஹம்ஹூ)
எனினும், 10-20 வருடங்களுக்கு முன் எல்லாப்பள்ளி களிலும் சாதா வெள்ளைக் கஞ்சி, மிளகு வெள்ளை கஞ்சி, காய்கறிக் கஞ்சி, பிரியானிக் கஞ்சி, என்று பிறை 6, 12,27 என விசேஷ தினங்களை மக்களுக்கு ஞாபக தினங்களாக அறிய மட்டும் தான் போடு வார்கள். இம்மாதிரி இஃப்தார் வேளைகளில் கட்டாயமாக கஞ்சி குடிக்கும் வழக்கம் நமது காயலர்கள் உலகில் எங்கெல்லாம் கால் வைத்தார்களோ அங்கெல்லாம் இம்முறைகளை அனுபவப்படுத்தி வருவதும் கண்கூடு, உதாரணமாக இலங்கை. சிங்கை, ஹாங்காங்,பேங்க் காக் மற்றும் சில நாடுகளைக் கூறலாம். 1975ல் கெய்ரோவில் ஒரு பள்ளியிலும் கஞ்சியுடன் கூடிய இஃப்தாரில் கலந்து கொண்ட .சந்தர்ப்பமும் எனக்குண்டு.
அதுமட்டுமல்ல நமது உடலின் தன்மைக்கு சுமார் 12 ல் இருந்து 14 மணி நேரம் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் பசியுடன் இருந்து அதன் பின் இஃப்தார் செய்யும்போது மென்மையான பதார்த்த்தின் மூலமாகவே உணவை ஆரம்பிக்க வெண்டும் என்று முதலில் பழவகை, அதிலும் விசேஷ ஸுன்னத்தாக பேரீத்தம் பழம் தண்ணீர் அதன்பின் மென்மையான உணவாக கஞ்சி வகைகள் சில (ஸா அத்) நிமிட நேரம் கழித்து திட உணவு அஃதில்லாமல் உடனடியாக கடின பதார்த்த மாகிய கரிகஞ்ச்சி அதுவும் காரத்துடன் குடித்தால் வயிற்றுக்கு உடனடியாக அதிக வீளை ஆவதுடன் ப்குடல் பல்ஹஈனம் ஏற்படுத்தும் என்று உடற்கூறு வல்லுனர்களும் கூறுகின்றனர். இப்படியாகத்தான் நம் உணவைக் கூட்ட வேண்டும். இதுதான் மாநபி(ஸல்)அவர்களின் உபதேஷமும் கூட. .
ஆனால் இதற்க்குமாற்ற மாகவே கடின உண வான கறிக்கஞ்சியே முதலில். அதும் காரத்துடன் உண்பதால் வயிற்றுக்கு பெரும் கேடு, உடலில் பல தாக்கம் ஹைப்பர்டென்ஷன்,இரத்த அழுத்தம் ,ஆயாஷம் போன்றவைகளால் அவதிப்படும் வழக்கம்.அது மட்டுமல்ல ஸுகர் பேஷண்டுக்கு தீவிர விரோதம். இஅவைகளெல்லாம் சில வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஸுகர் வியாதி தடுப்பு விழிப்புனர்வு கூட்டதிலும் ஒரு எம் டீ டாக்டரால் விவரிக்கப்பட்ட உண்மையும் கூட மருத்துவசெலவும் அதிக மாகும்..யோஷித்துப் பார்த்தால் நாம் பிடித்த நோன்பே பலனில்லாத அமலாக ஆவதுடன் நோன்பே பதுஆவும் செய்யலாம். . யோசித்து செயல் படுவோமாக.இன்னும் ஒன்று நோன்பு திறக்கும் ஒஜீஃபணம் 100% ஹலாலான பணத்தால் இருந்தால் மட்டுமே நோன்பு ஏற்கப்படும் என்று தலைசிறந்த தக்வா உடைய உலமாக்கள் கூறுகின்றார்கள். ஆனால் தலை திறந்த உலமாக்களின் கருத்து எப்படியோ.?
கண்மனியான நாயகம் (ஸல்) அவர்கள் சும்மவா இந்த நல்ல வழிமுரைகளை ஏற்படுத்தினார்கள்.? கடைசியாக ஒரு வேண்டுகோள்:- நோன்பு திறந்தபின் வழமைய்யாக நாம் ஓதி வரும் ”அல்லாஹும்ம லக்க ஸும்த்து “ என்ற துஆ வுடன் “ ZABAHAZZHAMAU WA BI THALLATHTHIL URUUQ, WA ஃTHABATHTHIL AJIR,,, INSHAA ALLAAH “ எனும் துஆ வையும் சேர்த்து ஓதிக்கொள்வதுடன் இந்த பாவியின் ஹக்கிலும் துஆ செய்யும்படி வேண்டுகிறேன்.மறந்து விடாதீர்கள். யா அஃகீயுல் கிறாம் லா தன்ஸாஅனீ............!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross