Re:...இரத்தக்ண்ணீருடன் வருந்தி நம் சமூகத்குதிற்காக்க (குறிப்பாக காயலர் களுக்காக) posted byT,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852)[05 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21068
அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்று அநேகமான கட்டுரை, கமன்ஸ் குறிப்புகளில் இஸ்லாமிய பண்பாட்டில் பெரிய பெரிய ஓட்டை மற்றும் சரீஅத்துக்கு மாற்றமான செய்திகளெல்லாம் நம் நடைமுறைகளில் வந்ததைப் பார்த்து நாங்கள் அதிஷயப்படவில்லை. ஆனால் இரத்தக்ண்ணீருடன் வருந்தி நம் சமூகத்குதிற்காக்க (குறிப்பாக காயலர் களுக்காக) அனுதினமும் அழுது தொழுது துஆ கேட்ட வண்ணமாக இருந்து வரும் எங்களுக்கு இந்த கட்டுரையாளரின் படைப்பு ஒரு ஆறுதல் தரத்தான் செய்கிறது. அல்லாஹ் அவருக்கு மேலான நற்கூலியை தருவானாக!
ஆதிகாலம் தொட்டு முழுமையான (கட்டுரையில் கண்ட குர் ஆன் 33-59 ஆயத்தின் படி ) புர்கா எனும் முழு ஹிஜாப் வழிமுறை களை கெடுத்தது நமது பெண் மக்கள் வெளியூருக்கு செல்லும் பழக்க வழக்கம் வந்து அந்த கலாசாரத்தை பின்பற்றி வாழ்ந்தது மற்றும் நமதூரில் பெண்கள் பாடசாலைகள் திறந்தது, அதில் வெளியூர் காஃபிற்,மார்களும் முஸ்லிம் டீச்சர்களுடனும் சகவாசம் ஏற்ப்பட்டு அதற்க்கு “அம்மா பிடவை” என பேர்சூட்டி அந்த ஹிஜாபற்ற கலாசாரத்தைக் கடைபிடித்து முழு ஹிஜாபும் துறந்து வந்த காலத்தில் தான் 1983=1403 ல் உருவான எங்கள்,தீவுத்தெரு அறூஸுல் ஜன்னஹ் எனும் பெண்கள் மத்றஸாவின் மூலம் வேறு வடிவில் முழு புக்காவை அறிமுகப் படுத்தினோம் அதற்க்கு இப்போது “போறா புற்க்கா ” எனப் பெயரும் கூறப்படுகிறது. சிலர் “போறா போடு “ என்றே .கொச்சை மொழியில் கூறுகின்றனர்.
இதற்கு மத்தியில் 1950 ல் இருந்து 1980 வரை நமது மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் தீவிர பிரச்சாத்தால் புற்க்காவின் ஃபேஷன் மாறி அலங்காரம் செய்து உடுத்த ஆடைகளுடன் மேற் போர்வையாக ஒரு வெல்லை பிடவையை உடுத்து வரும் வழக்கம் இருந்து வந்தது, இன்றும் ஒரு சிலரிடம் காணலாம். இதுவும் ஹால்ஃப் புர்க்கா தான்.இந்த புர்க்கா அணிய கட்டாயப்படுத்தி பீரங்கி முழக்கம் செய்த மற்ஹூம் செய்யிது இப்றாஹீம் ஆலிமவர்கள், மற்ஹூம் எம் கே ஈ அபுல்ஹசன் ஆலிம் அவர்கள்.மி.அபுல் ஹஸன் ஆலிம் அவர்கள் ஆகியோர்கள் மிக முக்கிய மானவர்கள்.
ஆல்லாஹும்மங்ஃபிற் லஹூம் வற் ஹம் ஹும்.
என்ன செய்வது நம்ம ஊரின் தலை நஸீபு இந்த புற்கா கலாச்சாரத்தையே (குற் ஆன் கூறிய 33-59ன் ஆயாத் படி ) இல்லாமலாக்க செய்தது போல 1980 க்குப்பின் வந்த புது இஸ்லாமிய இயக்கங்கள் கூட அதரவு அளிப்பதை பார்த்தால் மொத்தத்தில் ஈமான் பலஹீனம் என்றே கூறலாம். பே ஷக்கு. அல்லாஹும்ம இன்னா நவூது பிக மின் ஃபிதனத்தின் நிஸாஉ. வ அதாபில் கப்று எனும் துஆ வை தினம் தினம் ஓதி வருவோமாக , இதை தவிர வேறு வழி தெரிய இல்லை அல்லாஹ் உதவி செய்வானாக.ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross