செய்தி: காயல்பட்டினத்தில் 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சுத்திகரிக்க Bio-Gas தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உதவி! இடம் கோரி நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நல்ல செய்தி posted bymackie noohuthambi (kayalpatnam)[09 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21149
நகர்மன்றதுக்கு என குப்பை கொட்டும் இடம் தனியாக இல்லை என்றால் பொதுமக்களின் யாரோ சிலருக்கு சொந்தமான இடத்தில குப்பை கொட்டுவதை எப்படி பொறுத்து கொண்டார்கள் என்று தெரியவில்லை அவர்களுக்கு விரிந்த மனசு.
இதேபோல் இப்போது குப்பை சுத்திகரிக்கும் தொழிற்சாலையே நமதூரில் ஏற்பட்டால் அதன்மூலம் குப்பைகள் மட்டுமா போகும் அங்கே தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.
நிலம் உள்ளவர்கள் அந்த காலத்தில் ஊர் நன்மைக்காக வாரி வழங்கியதால் அவர்கள் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்கள் பெயர்கள் காயல்பட்டினம் சரித்திரத்தில் இடம்பெற்று, சதகதுன் ஜாரியா எனும் மறைந்த பின்னும் நன்மை தரும் --- அவர்கள் பெயரில் நன்மைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
யுக முடிவு காலம் வரை அந்த நன்மை தொடர்ந்து அவர்கள் சொர்க்கம் செல்லவும் அது வழி வகுக்கும்.
இப்போதும் அவர்களைபோல் பரந்த மனம் படைத்தவர்கள் நிலம் உள்ளவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். தலைவி அவர்களும் மன்ற உறுப்பினர்களும் ஒரே குடையின் கீழ் அணிவகுத்து சென்று அவர்களை அணுகினால் நிச்சயமாக் அவர்கள் தருவார்கள். புனித ரமளானில் அதற்கான நன்மை பல மடங்காக அல்லாஹ் தர காத்திருக்கிறான்.
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அல்லாஹ் யாருக்காக கொடுத்தான் ஒருவருக்கா கொடுத்தான்,---- இல்லை ஊருக்காக கொடுத்தான். சிலர் வாழ வாழ பலர் மாள மாள ஒருபோதும் இறைவன் கொடுத்ததில்லை. புரட்சி தலைவிக்கும் நகரமன்ற தலைவிக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். சந்தர்பத்தை தவற விடாதீர்கள். CHANCE COMES, BUT ONCE. NOW OR NEVER.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross