செய்தி: காயல்பட்டினத்தில் 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சுத்திகரிக்க Bio-Gas தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உதவி! இடம் கோரி நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முன் வர வேண்டும் நன் மக்கள்...!!! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[09 August 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21153
காயலின் கண்மணிகளின் கருணையினால் துணை மின் நிலயத்திற்காக எவ்வாறு நிலம் வாங்கப்பட்டதோ? அது போன்று இத் திட்டம் முழுமை பெற அனைத்து நல்ல உள்ளங்களும் முன் வர வேண்டும். குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் நம் நகரில் பிறக்கும் குழந்தைகள் முதல் முதியோர்கள்வரைத் தாக்கும் பல நோய்களின் வீரியமும், விபரீதமும் சொல்லி மாளாது. தற்போது குப்பைகளின் கூடாரமாக மாறிவிட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த ஓர் நகரம், தனவந்தர்களும், கொடை வள்ளல்களும் நிறைந்த ஊர், நம் சகோதரர்கள் வாழும் கீழக்கரையில் டெங்கு, மலேரியா, போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்து மக்கள் அல்லோலப் பட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். எனவே, கருணை மிக்க கனவான்கள் முன் வந்து நிலம் தந்து நம் மக்களை பாதுகாக்கும் மகத்தான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சகோதரர் ஜனாப்-மக்கி நூஹுத் தம்பி அவர்கள் கூறியதைப் போன்று நம் முன்னோர்கள் செய்த அளப்பரிய தியாக சிந்தனையின் உதவியால் இன்றளவும் நாம் பயனடைந்து வரும் ஏராளமான விஷயங்கள் ஏராளம். காலா காலத்திற்கும் பெயர் சொல்லும் இது போன்ற நற் செயல்கள் இம்மையில் மட்டுமின்றி நாளை மறுமையிலும் பலனளிக்க வல்லது. இன்ஷா அல்லாஹ் இத் திட்டத்திற்கு நிலம் வாங்கப்பட்ட நற் செய்தி விரைவில் நம் காயல்பட்டினம் டாட் காமில் வெளி வர வல்லோனை வேண்டுகின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross