சைத்தானின் திருவிளையாடல்.. posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[10 August 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21167
பெற்றோர்கள் தான் தங்களின் குழந்தைகளை அறிவுரை கூறி தொழுக அனுப்பனும். குழந்தைகளின் அறியாமையால் அவர்களின் நன்மையையும் இழந்தது மற்றவர்களின் நன்மையையும் இழக்கும்படி ஆகிவிடுகிறது.
சில சகோதரர்கள் தங்களுடன் அழைத்து வரும் குழந்தைகளை கூட தன்னுடன் வைத்துக்கொள்ளாமல், "நீ... மேலே போயி தொழு.." என்று அனுப்பிவிடுகின்றார்கள். கொஞ்சம் கவனம் எடுங்க.. சின்ன சின்ன விசயத்தில் தான் சைத்தான் மிகவும் தீவிரமாக இறங்கி நம்முடைய அமல்களை வீணாக்கி விடுவான்.
சைத்தானால் நம்மை ஜும்மா தொழாமல் இருக்க வைக்க முடியாது. மற்ற தொழுகை தொழாதவர் கூட கண்டிப்பாக ஜும்மாஹ்விற்கு வந்து விடுவார்கள். சரி..எப்படி இவர்களின் தொழுகையை வீணடிப்பது.. அதற்க்கு தான் பல வழிகள் சைத்தான் வைத்துள்ளான். பசங்கள் கத்தனும், நாம் அவர்களை கண்டிக்கனும், அப்புறம் நம்முடைய ஜும்மாஹ் வீனாகனும். செம ஐடியாக்காரன்.
++++++++++++++++++++++++++++++
ஸஹீஹ் முஸ்லிம்:- ஹதீஸ் எண் : 419
“ஜும்ஆ தினத்தன்று இமாம் ‘குத்பா‘ ஓதிக் கொண்டிருக்கும் போது உம்முடன் இருப்பவரை வாய்ப்பொத்தி இரு(ம்)! என நீர் கூறினால் நிச்சயமாக (ஜும்ஆவை) வீணடித்து விட்டீர்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு
ஸஹீஹ் முஸ்லிம் : ஹதீஸ் எண் : 420
யார் குளித்துவிட்டு, அதன் பிறகு ஜும்ஆவிற்கு வந்து, (அல்லாஹ்வினால்) அவருக்கு ஏற்படுத்தப்பட்டதை தொழுதுவிட்டு, அவர் குத்பா பிரசங்கத்தை முடிக்கும்வரை வாய் பொத்தி இருந்து (விட்டு) அவரோடு தொழுதும் விட்டால், அவருக்கு அடுத்த ஜும்ஆவிற்கும் இடையில் (அதற்கு) மேலும் அதிகமாக மூன்று நாட்களுக்கும் (அவரில் ஏற்படும் சிறிய பாவங்கள்) அவருக்காக மன்னிக்கப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross