Re:... posted byKader K.M (Dubai)[15 August 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21272
அன்பு சகோதரியே! நீங்கள் குறிப்பிட்டுள்ள இவர்கள் மட்டும் தானா தமிழக சுதந்திர தியாகிகள்? ஏன் ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும்?
நமது தாய்த்திருநாட்டை வெள்ளையர்களிடம் காட்டி கொடுத்தவர்களுக்கு வெள்ளையர்கள் கொடுத்தப்பட்டம் 'சர்' , வெள்ளையர்களை எதிர்த்து நின்று போர் தொடுத்து தன் உயிரையும் தியாகம் செய்த முஸ்லிம்களுக்கு இந்திய ஆட்சியாளர்கள் கொடுத்தப்பட்டம் தீவிரவாதிகள்!
அன்பு சகோதரியே! தன் உடல், பொருள்,உயிர் அனைத்தையும் இந்த தாய் திருநாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் 'இப்பி பக்கீர்கள்' என்ற தமிழக முஸ்லிம் சுதந்திர போராட்ட தியாகிகள்! மற்றும்
தூக்குமேடை பஞ்சுமெத்தை என்று வாய் கிழிய பேசும் நம் நாட்டில், எங்கள் தாய் திரு நாட்டில் உள்ளவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வெள்ளையர்களால் பலமுறை தூக்கிலிடப்பட்டு தனது சுவாசத்தை இந்திய தாய் திரு நாட்டிற்காக அர்பணித்தவர் எங்கள் 'சஹீத்' மருதநாயகம் என்ற கான்சாஹிப் அவர்கள்!
இவர்களைப்போன்று இன்னும் எண்ணிலடங்கா பல தமிழக முஸ்லிம் சுதந்திர போராட்ட தியாகிகள், நம் தாய் திருநாட்டின் சுதந்திரத்திற்காக அல்லும், பகலும் தன்னையே அர்பணித்துள்ளார்கள்! காரணம் தன் தாய் திரு நாட்டை நேசிப்பது ஈமானில் ஒரு பகுதி என்று எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கற்று தந்துள்ளார்கள்!
இதெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை!
கைபர்,போலான் கணவாய் வழியாக வந்தவர்கள் எல்லாம்
நம் தாய் திருநாட்டை ஆட்சி செய்ய எண்ணும்போது நாம் ஏன் முயற்சி செய்வதில்லை?
800 வருடகாலம் நம் தாய் திருநாட்டை ஆட்சி செய்த அனுபவம் நமக்கு உண்டு! அக் காலகட்டம் நம் தாய் திரு நாட்டிற்கு பொற்காலமே !
தன் வரலாறு தெரியாத எவனும் சரித்திரம் படைப்பதில்லை! வா சகோதரா! மறைத்து வைக்கப்பட்டுள்ள நமது சுதந்திர வரலாற்றை வெளியே கொண்டு வருவோம்!
இந்திய விடுதலைக்காக பாடு பட்டவர்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்!
வேற்றுமையை மறப்போம்! ஒன்றுபடுவோம்! அல்லாஹ் நாடினால் புதிய வரலாறு படைப்போம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross