செய்தி: ரமழான் 1433: நோன்புப் பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் - அரிமா சங்கம் இணைந்து ஏழைப் பெண்களுக்கு இலவச உதவி! 1000 முஸ்லிம் பெண்கள் பயன்பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஏழை பெண்களுக்கு உதவி posted bymackie noohuthambi (kayalpatnam)[18 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21297
நிகழ்ச்சியை பார்க்க நானும் சென்றிருந்தேன். சில சந்தேகங்கள் மனதில் ஏற்பட்டன.
1 . அரிமா சங்கத்துடன் இணைந்துதான் இதை நடத்த வேண்டுமா ஊரிலுள்ள முஸ்லிம்கள் மட்டும் சேர்ந்து இந்த நல திட்டங்களை அளிக்க முடியாதா?
2 . அரிமா சங்கம் இனைந்து நடத்தும் நிகழ்ச்சியில் அரிமா தலைவர் டி எ எஸ் அபூபக்கர் பெயர் போட்டிருக்கிறதே, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லையே ஏன் ?
3 . மேடையில் உவைஸ் ஹாஜி ராவன்னா அபுல் ஹசன் ஹாஜி எல்லோரும் இருக்க தஸ்தகிர் ஹாஜி கலாமி ஹாஜி போன்றோர்கள் இல்லையே அவர்களும் பொது நல ஆர்வலர்கள்தானே, அவர்களுக்கு அழைப்பில்லையா அல்லது அபூபக்கர் அவர்களை போல் இவர்களும் ஆர்வம் காட்டவில்லையா?
இந்த 3 கேள்விகளுடன் ஹாஜி காக்கா அவர்களை சந்தித்து விளக்கம் கேட்டேன். அவர்கள்தான் மெனக்கெட்டு எல்லா வேலையும் தலையில் எடுத்துபோட்டு செய்துகொண்டிருந்தார்கள். அவர்களும் மனம்கோணாமல் நல்ல விளக்கம் தந்தார்கள். எல்லாம் நியாயமாக தெரிந்தாலும் எங்கோ ஒரு இடத்தில சில மன அழுத்தங்கள், சில மன வருத்தங்கள் தெரிகிறது. அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யும் இந்த உதவி தனிப்பட்ட" ஈகோ" க்களால் அல்லாஹ்வின் அருளைபெறமுடியாமல் ஆக்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பொதுமக்கள் இதற்காக் தந்திருக்கிறார்கள். உவைஸ் ஹாஜி, அபுல்ஹசன் காக்கா, அபூபக்கர் காக்கா சகோதரி வஹீதா ஹாஜி காக்கா போன்றவர்கள் இதில் ஈடுபட்டுள்ளதால் இது சிறப்பாக நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கைதான் காரணம். இந்த நல்லெண்ணத்துக்கு ஊறு ஏற்படும்படி நடக்கும் எந்த நிகழ்ச்சியையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அன்பு தடிப்பமாக இருந்தால் குறைகள் மெல்லியதாகி விடும். குறைகள் தடிப்பமாக இடம் கொடுத்தால் அன்பு மெல்லியதாகி வலு இழந்து விடும்.
இது கணினி உலகம். உங்கள் மடிக்கணினியை திறந்து பாருங்கள். கீ போர்டை உற்று நோக்குங்கள். U என்ற எழுத்தும் I என்ற எழுத்தும் அருகருகே இருக்கின்றன. நீயும் நானும் இணைந்து இருந்தால்தான் கணினியே இயங்கும். அருகில் உள்ளது Y ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற மனமாச்சரியங்களுக்கு முற்றுபுள்ளி வைத்து இணைந்து செயல்படுங்கள்.மக்கள் உங்கள் பணிகளை உற்று நோக்கிகொண்டிருக்கிரார்கள் இந்த இணையதளம் அதற்கு வழி வகுத்து கொடுத்திருக்கிறது.
அல்லாஹ் உங்கள் சேவையை ஏற்றுக்கொண்டு அதற்கான முழு கூலியையும் உங்களுக்கும் தருவான் இதற்காக உதவி செய்தவர்களுக்கும் தருவான்..
LET US THINK IN TERMS OF "WE" RATHER THAN "ME"
நான் என்று சொல்வதை நாம் என்று சொல்வதால் இந்த சமுதாயம் நாளெல்லாம் சிறப்புற்று வாழும்.ஈத் முபாரக்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross