பெருநாள் வாழ்த்து! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu)[18 August 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21320
புனித ரமலான் புறப்பட்டு விட்டது!
புண்ணியமும், புனிதமும் பூச்சொரிந்து புகழ் மணக்க,
புகழுக்குறியவனின் புண்ணியத்தையும் கண்ணியத்தையும் கலந்தனுபவியுங்கள் என்று எங்கள் இபாதத்து இதயங்களைஎல்லாம் எல்லையில்லா மகிழ்ச்சி பூங்காவில் புகுத்திவிட்டு தன் புனித ரமலான் மாதத்தை முடித்துகொண்டது!
இணைதுனையற்ற உன்னை இரவுமுழுவதும் தொழுததின் பயனை எங்களுக்கு துணை நிற்க செய்வாயாக தூயவனே!
எங்களையறியாமல் செய்த எந்த தவறுகளையும் இம்மாத புனிதத்தின் பொருட்டால் பொருத்து மன்னித்துவிடு மகுத்துவம் நிறைந்தவனே!
முப்பது நாளும் நோன்பிருக்கும் சமயம் எவரும் எம்மை பார்க்கவில்லை என்றாலும் இமியளவுவும் எந்தபானதையோ,பொருளையோ பருகாமல்
ஐம்புலன்களையும் அடக்கி அச்சம் கொள்வது யாருக்காக?
எல்லாவற்றையும் நீ பார்த்துகொண்டிருக்கிறாய்,உன்னிடம் இருந்து மறைவதற்கு இடம்தான் எது?
என்று எங்கள் மனசாட்ச்சியுடனும் ,மனபயமிகுந்த பக்தியுடனும் நோன்பிருந்த எங்களை அந்த புனித நோன்பின் பொருட்டால் எங்கள் பாவங்களை போக்கிடு யா அல்லாஹ்!
எங்கள்குடும்பம்,உற்றார்,உறவினர்,தெருவலியார்,
ஜமாத்தார்,ஊரார் அனைவர்களையும் காப்பாற்றி
நாங்கள் அனைவரும் ஒருவர் மற்றோருவருவரின் உண்மை உள்ளங்களை புரிந்து ஒற்றுமை உணர்வால் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாய் வாழ விரும்பியவர்களாக, இப்புனித மாதத்திலிருந்து புதிய புண்ணிய பாதையில் பயணத்தை மேற்கொள்ள செய்து எங்களை மேன்மைபடுத்தி வைப்பாயாக யா அல்லாஹ்!
இனிவரும் காலங்களில் நமதூரின் மார்க்கத்தின் மகிமை மிகைதோங்கவும்,நம் இறையாண்மை இமியளவும் ஏளனத்துகுள்ளாகாமலும், ஊரில் அன்பும்,அமைதியும் நிலவிடவும்,அக்கம்பக்கதிலுள்லோரின் அன்பை அனுசரிக்கும் அகம் மகிழும் மாசற்ற மத நல்லிணக்க மாண்புடைய மக்களாக நாம் மலர, மறையளித்த இறைவன் நமக்கு எப்பொழுதும் துணை நிற்ப்பானாக ஆமீன்!
இதோ மலரப்போகும் இதயம் குளிரும் "ஈத் பெருநாளை" என்அன்பொழுகும் அகத்துடன் வரவேற்று,
அனைத்து அன்புள்ளங்களுக்கும் இந்த ஈகை திருநாளின்
என் இதயம் குளிரும் நல்வாழ்த்துக்களை உங்கள் கரங்களில் எனதன்பு காணிக்கையாக்குகிறேன்!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
வாழ்த்துக்களுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும் கலவா அபூபக்கர் அவர்களின் "காயல்ஹௌஸ்" இல்லங்களில் வசிக்கும் அனைத்து காயல் சகோதரர்கள். யான்போ & ராபிக் சௌதி அரேபியா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross