Re:... posted byVilack SMA (kayalpatnam)[23 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21436
அணையில் ஓரளவு நீர் இருக்கத்தானே செய்கிறது ! வாரம் ஒருமுறைதான் நகரில் குடிநீர் விநியோகம் .
பெருநாளன்று குடிநீர் வந்தது . எனது வீட்டு குழாயில் மிகச்சரியாக 5 நிமிடம் வந்தது , பிறகு இல்லை . விசாரித்ததில் ஈவு இரக்கம் அறவே இல்லாத நம் சுற்றுப்புறத்தவர்கள்தான் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுகிறார்கலாம் . இரண்டு நாட்களுக்கு முன்புதான் 27 ஆம் இரவில் விடிய விடிய தொழுதார்கள் . செய்த பாவங்களுக்கு மன்னிப்பும் , இனிமேல் பாவமே செய்ய மாட்டேன் என்று உறுதிமொழியும் எடுத்தார்கள் . அன்று இரவே எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள் ஒருவேளை எல்லாவற்றையும் மன்னிக்கும் இறைவன் இதையும் மன்னித்துவிடுவான் , ஆகையால் அடுத்த 27 வது நோன்பில் தவ்பா செய்துவிடலாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்
பலமுறை இதைப்பற்றி இந்த இணையதளத்தில் கருத்துக்கள் பதிந்து விட்டேன் . ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இந்த தண்ணீர் திருடர்களுக்கு பாடம் புகட்ட ஒரே வழி , நகர்மன்றம் மின்சார வாரியத்துடன் இணைந்து செயல்படுவது . ஆம் , தண்ணீர் வரும்போது மின்தடை . இது ஒன்றே வழி . இதையும் மீறி generater வைத்து உறிஞ்சினால் , அந்த திருடர்களை கையும் களவுமாக பிடித்து அவர்கள் வீட்டு குடிநீர் , மின் இணைப்பை நிரந்தரமாக துண்டிக்க வேண்டும் .
நான் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனே என்று யாரும் தவறாக என்ன வேண்டாம் . அந்த அளவுக்கு மனம் நொந்து விட்டேன் . இப்போது என் வீட்டில் குடிப்பதற்கு கூட குடிநீர் தட்டுப்பாடு . இருக்கும் நீரையும் ஏதோ மருந்து சாப்பிடுவதைப்போல் சொட்டுச்சொட்டாக குடிக்கிறோம் .
சென்ற நகர்மன்றம் எவ்வளவோ பரவாயில்லை . அவர்களும் வாரம் ஒருமுறைதான் தண்ணீர் விட்டார்கள் . ஆனால் தண்ணீர் தாராளமாக வந்தது .
நகரமன்ற தலைவி , தங்கை ஆபிதாவுக்கு ஒரு வேண்டுகோள் , உங்கள் கவனத்தை , இந்த தண்ணீர் விநியோகத்தில் காட்டுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross