காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் இன்றைய (ஆகஸ்ட் 23) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 41.05 அடி (41.25 அடி) நீர்வரத்து (Inflow): 324 Cusecs (369 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): 405 Cusecs (407 Cusecs)
1. Re:... posted byVilack SMA (kayalpatnam)[23 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21436
அணையில் ஓரளவு நீர் இருக்கத்தானே செய்கிறது ! வாரம் ஒருமுறைதான் நகரில் குடிநீர் விநியோகம் .
பெருநாளன்று குடிநீர் வந்தது . எனது வீட்டு குழாயில் மிகச்சரியாக 5 நிமிடம் வந்தது , பிறகு இல்லை . விசாரித்ததில் ஈவு இரக்கம் அறவே இல்லாத நம் சுற்றுப்புறத்தவர்கள்தான் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுகிறார்கலாம் . இரண்டு நாட்களுக்கு முன்புதான் 27 ஆம் இரவில் விடிய விடிய தொழுதார்கள் . செய்த பாவங்களுக்கு மன்னிப்பும் , இனிமேல் பாவமே செய்ய மாட்டேன் என்று உறுதிமொழியும் எடுத்தார்கள் . அன்று இரவே எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள் ஒருவேளை எல்லாவற்றையும் மன்னிக்கும் இறைவன் இதையும் மன்னித்துவிடுவான் , ஆகையால் அடுத்த 27 வது நோன்பில் தவ்பா செய்துவிடலாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்
பலமுறை இதைப்பற்றி இந்த இணையதளத்தில் கருத்துக்கள் பதிந்து விட்டேன் . ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இந்த தண்ணீர் திருடர்களுக்கு பாடம் புகட்ட ஒரே வழி , நகர்மன்றம் மின்சார வாரியத்துடன் இணைந்து செயல்படுவது . ஆம் , தண்ணீர் வரும்போது மின்தடை . இது ஒன்றே வழி . இதையும் மீறி generater வைத்து உறிஞ்சினால் , அந்த திருடர்களை கையும் களவுமாக பிடித்து அவர்கள் வீட்டு குடிநீர் , மின் இணைப்பை நிரந்தரமாக துண்டிக்க வேண்டும் .
நான் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேனே என்று யாரும் தவறாக என்ன வேண்டாம் . அந்த அளவுக்கு மனம் நொந்து விட்டேன் . இப்போது என் வீட்டில் குடிப்பதற்கு கூட குடிநீர் தட்டுப்பாடு . இருக்கும் நீரையும் ஏதோ மருந்து சாப்பிடுவதைப்போல் சொட்டுச்சொட்டாக குடிக்கிறோம் .
சென்ற நகர்மன்றம் எவ்வளவோ பரவாயில்லை . அவர்களும் வாரம் ஒருமுறைதான் தண்ணீர் விட்டார்கள் . ஆனால் தண்ணீர் தாராளமாக வந்தது .
நகரமன்ற தலைவி , தங்கை ஆபிதாவுக்கு ஒரு வேண்டுகோள் , உங்கள் கவனத்தை , இந்த தண்ணீர் விநியோகத்தில் காட்டுங்கள்.
2. மழை வேண்டி பிராத்தனை செய்யுங்கள்..... posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[23 August 2012] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21446
சகோதரரே, கடந்த சில வாரங்களுக்கு முன்தான் நகரில் மோட்டார் வேட்டை நடைபெற்றது, ஆடோக்களில் ஒலிபெருக்கி பொருத்தி நகர்முளுவதும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதன் விளைவாக பலர் மோட்டார் இணைப்பை துண்டித்துவிட்டார்கள்.
அதற்க்கு பின்னரும் மோட்டார் பொருத்தி நீர் ஏற்றினால் யாரால் என்ன செய்ய முடியும்? மேலும் “விசாரித்ததில் ஈவு இரக்கம் அறவே இல்லாத நம் சுற்றுப்புறத்தவர்கள்தான் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுகிறார்கலாம்” என்று கூறும் சகோதரரே அவ்வாறு தங்கள் கண்முன்னே நடைபெறும் அநியாயத்தை ஏன் உரியவரிடம் புகார் அளிக்க கூடாது?
எடுப்பதும், கொடுப்பதும் படைத்தவன் கையில், அவனிடம் அருள் மழை வேண்டி இருகரம் ஏந்தி பிராத்தனை செய்யுங்கள்...... சீரான மழை இல்லை என்றால், நர்கர்மன்றம் இல்லை சட்டமன்றமும் நாடாளுமன்றமும் ஒன்னும் செய்ய முடியாது.
3. Re:... posted byVilack SMA (kayalpatnam)[24 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21450
சகோதரர் MSS ,
நகராட்சியின் இப்போதைய அவசர நடவடிக்கை , மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வது. தண்ணீர் விடும் நேரத்தில் மின்தடை. இது ஒன்றுதான் சிறந்த வழி . எங்கள் பகுதி பெண்கள் சொல்வது , " காலை நேரத்தில் தற்போது உள்ள மின்தடை , தண்ணீர் வரும் நேரத்தில் இருக்காது பாருங்கள் " என்கிறார்கள் .
-- தங்கள் கண்முன்னே நடைபெறும் அநியாயத்தை ஏன் உரியவரிடம் புகார் அளிக்க கூடாது? >-- MSS
இந்த அநியாயத்தை நான் நேரில் பார்க்க நேரிட்டால் , அது என் உறவினராக இருந்தாலும் புகார் கொடுப்பேன் . ஏனெனில் பெருநாள் காலையில் தண்ணீர் எடுப்பதில் அந்த அளவுக்கு சிரமப்பட்டேன் . 5 நிமிடம் மட்டுமே தண்ணீர் வந்தது . இந்த 5 நிமிடம் பெற்ற தண்ணீரைத்தான் இன்றுவரை , ஏதோ மருந்து சாப்பிடுவதைப்போல் சொட்டு சொட்டாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம் . நொந்து noodles ஆகிக்கொண்டிருக்கிறோம் .
இருக்கும் தண்ணீரை அனைவரும் சமமாக பகிர்ந்தாலே போதும் , சிரமமின்றி இருக்கலாம் . இங்கே என்னவென்றால் தண்ணீர் திருடுபவர்கள் வீட்டில் நல்ல தண்ணீர் , வாய் செத்தவன் வீட்டில் குடிப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரை அடுத்தவர் வீட்டில் கையேந்தும் நிலை . சகோதரர் MSS நீங்கள் ஊர் வரும்போது இதை நேரில் தெரிந்து கொள்வீர்கள் .
மொத்தத்தில் இந்த நகர்மன்றம் ஒரு செயல் இழந்த நகர்மன்றம் .
4. தண்ணீர் வரும் நேரத்தில் மின்தடை என்பது பரவலாக அனைவரின் கருத்துதான் posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[24 August 2012] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21457
தண்ணீர் வரும் நேரத்தில் மின்தடை என்பது பரவலாக அனைவரின் கருத்துதான். ஆனால் இது எந்த வகையில் சாத்தியம் என்பது தெரியவில்லை, ஏன் என்றால் இதில் மின்சாரம் மற்றும் குடிநீர் வாரியம் இரண்டும் ஒத்துபோகவேண்டும்.
“இந்த அநியாயத்தை நான் நேரில் பார்க்க நேரிட்டால் , அது என் உறவினராக இருந்தாலும் புகார் கொடுப்பேன் “ என்று கூறும் தாங்கள் தான் “விசாரித்ததில் ஈவு இரக்கம் அறவே இல்லாத நம் சுற்றுப்புறத்தவர்கள்தான் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுகிறார்கலாம்” என்று காணாத ஒன்றை கண்டது போல் பதித்துள்ளது ஃபாசாது இல்லையா?
பாபநாசம் அணையின் நீர் நிலைக்கும், இந்த நகராட்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஒருவேளை பாபநாசம் அணையை இந்த நகராட்சி குத்தகைக்கு எடுத்துள்ளதோ?
5. Re:... posted byVilack SMA (kayalpatnam)[24 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21473
திரு .MSS அவர்களுக்கு ,
இங்கே நான் பசாது பண்ணவில்லை . சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுகிறார்கள் என்று சொன்னேன் . உண்மையே . ஆனால் குறிப்பாக யார் இந்த வேலையை செய்கிறார்கள் என்று தெரியவில்லை .அப்படி தெரிந்தால் கண்டிப்பாக அவர்களை காட்டிக்கொடுப்பேன் .
குழாயில் தண்ணீர் வரும் வேகத்தை பார்த்து , அடுத்தவர் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுகிரார்களா இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம் . ஆனால் இதை செய்பவர் யார் என்பதை பொதுஜனமாகிய நானும் நீங்களும் கண்டுபிடிக்க முடியாது .அடுத்தவர் வீட்டில் நுழைய நமக்கு அனுமதி இல்லை . அதனால்தான் சொல்கிறேன் , நகர்மன்றம் மின்சார வாரியத்துடன் இணைந்து செயல்படவேண்டும் .
பாபநாசம் அணைக்கும் , நகர்மன்றத்திற்கும் தொடர்பில்லைதான் . ஆனால் இந்த செய்தி வரும்போது இதற்கு முன் , பின் நீர்நிலை பற்றிய வேறு எந்த செய்தியும் இல்லை . அதனால்தான் நகரில் குடிநீர் விநியோகம் பற்றிய எனது கருத்தை இங்கே பதிந்தேன் . தவறே இல்லை . வெளிநாட்டில் இருந்துகொண்டு சுலபமாக கருத்துக்களை பதியலாம்தான் . ஊருக்கு வந்தபின்தான் தெரிகிறது ஊரின் அவலநிலை .
6. அருள் மழை வேண்டி இருகரம் ஏந்தி பிராத்தனை செய்யுங்கள்...... posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[24 August 2012] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21474
சகோதரரே, தாங்கள் பொதுவாக நகரில் மோட்டார் உபயோகிக்கின்றனர் என்று கூறியிருந்தால் அது சரியானதாகும், ஆனால் குறிப்பாக தங்களின் “சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்” என்று கூறுவது தவறு.
இதே வலைதளத்தில், இது சம்பந்தமான செய்திகள் 11/07/2012 முதல் வெளிவருவதை, “Pabanasam Dam” என்ற TAG-ஐ அழுத்தி பார்த்துகொள்ளுங்கள்...
பாபநாசம் அணையின் இன்றைய (ஆகஸ்ட் 24) நிலவரம்! (24/8/2012)
பாபநாசம் அணையின் இன்றைய (ஆகஸ்ட் 23) நிலவரம்! (23/8/2012)
பாபநாசம் அணையின் இன்றைய (ஆகஸ்ட் 22) நிலவரம்! (22/8/2012)
பாபநாசம் அணையின் இன்றைய (ஆகஸ்ட் 21) நிலவரம்! (21/8/2012)
பாபநாசம் அணையின் நீர்மட்டம் சென்ற ஆண்டு அளவை எட்டியது! (20/8/2012)
பாபநாசம் அணையில் தொடர்ந்து மூன்று நாட்களாக நீர்மட்டம் உயர்வு! (18/8/2012)
காயல்பட்டினத்திற்கு தினசரி வழங்கப்படும் தண்ணீர் 11 லட்ச லிட்டர் என குறைக்கப்பட்டது! பாபநாசம் அணையில் இன்று 1 மில்லிமீட்டர் மழை பதிவு!! (13/8/2012)
தென் மேற்கு பருவமழை தோல்வி: தீவிரம் அடையும் காயல்பட்டின குடிநீர் பிரச்சனை! (7/8/2012)
தென்மேற்கு பருவ மழை துவங்க காலதாமதமாவதால் காயல்பட்டினத்திற்கு குறைந்தளவு குடிநீர் விநியோகம்! (11/7/2012)
எடுப்பதும், கொடுப்பதும் படைத்தவன் கையில், அவனிடம் அருள் மழை வேண்டி இருகரம் ஏந்தி பிராத்தனை செய்யுங்கள்......
கடந்த MAY/JUNE/JULY மாதங்களில் நானும் நகரில் தான் இருந்தேன் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross