தமிழ்நாட்டில் 20.08.2012 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
காயல்பட்டினத்தில், நோன்புப் பெருநாள் - ஹஜ் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களுக்கு முந்திய இரவுகளில் நகரின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் திக்ர் மஜ்லிஸ் நடத்தப்படுவது வழமை. அந்த அடிப்படையில், காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் பெருநாளுக்கு முன்தினமான 19.08.2012 அன்று இரவு 10.30 மணிக்கு ராத்திபத்துல் காதிரிய்யா - திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பெருநாளான 20.08.2012 அன்று காலை 09.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. குத்பா பேருரையை மவ்லவீ எம்.இசட்.முஹம்மத் அப்துல் காதிர் மஸ்லஹீ நிகழ்த்தினார்.
இத்தொழுகையில், காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், பள்ளி நிர்வாகி எம்.ஏ.மஹ்மூத் நெய்னா, ஹாஜி எம்.ஏ.கிழுறு முஹம்மத் உட்பட அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவில் பொதுமக்கள் ஊர் வந்திருந்ததால், பள்ளிவாசல்கள் நிரம்பி காணப்பட்டன.
தகவல் & படங்கள்:
சாளை முஹம்மத் அப்துல் காதிர் (ஹாங்காங்)
[கூடுதல் விபரம் இணைக்கப்பட்டுள்ளது @ 19:21/22.08.2012] |