நோன்புப் பெருநாள் விடுமுறையையொட்டி, தான்ஸானியாவில் வசிக்கும் காயலர்கள், இன்பச் சிற்றுலா சென்று வந்தனர்.
பெருநாளுக்கு மறுநாளான 20.08.2012 அன்று காலையில், தான்ஸானியா நாட்டிலுள்ள ZANZIBAR தீவுக்கு சிற்றுலா சென்ற அவர்கள், அங்குள்ள கடற்பரப்பை படகில் சென்றும், காட்டுப் பகுதியை நடந்து சென்றும் கண்டு களித்தனர்.
கையோடு தயாரித்து எடுத்துச் சென்றிருந்த உணவுப் பதார்த்தங்களை, தீவின் ஒரு பகுதியில் அமர்ந்து இணைந்துண்டனர்.
மறக்கவியலா நினைவுகளுடன் மாலையில் இல்லம் திரும்பினர்.
தகவல் & படங்கள்:
M.N.ரிஃபாய் |