தமிழ்நாட்டில் 20.08.2012 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் மஸ்ஜிதுல் உஸ்ஃபூர் - குருவித்துறைப் பள்ளியில் அன்று காலை 09.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
பள்ளியின் எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் தொழுகையை வழிநடத்த, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
இத்தொழுகையில், பள்ளியின் துணைத்தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர், இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன், தேமுதிக மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் உட்பட, அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவில் பொதுமக்கள் ஊர் வந்திருந்ததால், பள்ளிவாசல் நிரம்பி காணப்பட்டது. நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர், அனைவரும் கட்டித் தழுவி, கைலாகு செய்து, வாழ்த்துக் கூறியவர்களாக தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்..
|