இந்தியா - தமிழ்நாட்டில் 20.08.2012 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அன்று காலை 09.00 மணியளவில் சென்னை - மண்ணடி அங்கப்பன் தெருவிலுள்ள பழம்பெரும் பள்ளிவாசலான மஸ்ஜிதுல் மஃமூரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், நகரப் பிரமுகர்களும் - பொதுநல அமைப்புகளைச் சார்ந்தோருமான ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி எஸ்.எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி டைமண்ட் செய்யித் அஹ்மத் உட்பட நூற்றுக்கணக்கான காயலர்கள் உட்பட திரளான முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். அப்பள்ளியின் இமாம் மவ்லவீ முஹம்மத் இல்யாஸ் காஸிமீ தொழுகையை வழிநடத்தினார்.
பெருநாள் தொழுகை நிறைவுற்றதும், பள்ளி வளாகத்திலும் - வெளியிலும் சந்தித்துக்கொண்ட காயலர்கள் ஆங்காங்கே ஒன்றுகூடி, “ஈத் முபாரக்” என்று பெருநாள் வாழ்த்து தெரிவித்தவர்களாக, கட்டியணைத்து - கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
சென்னை காயலர்களின் ஒன்றுகூடல் காட்சிகள் பின்வருமாறு:-
தகவல் & படங்கள்:
இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத் |