வட அமெரிக்காவில் கடந்த ஞாயிறன்று (19.08.2012) நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள 'ப்ளேனோ' பள்ளியில் மூன்று தடவையாக / வேளையாக நடைபெற்ற பெருநாள் தொழுகையில் சுமார் ஏழாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அது போல ப்ளேனோ-வுக்கு அருகிலுள்ள காயலர்கள் வாழும் மற்றொரு பகுதியாகிய இர்விங் (Irving) பள்ளியில், சுமார் ஐந்தாயிரம் பேர் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னர், தமிழக முஸ்லிம்கள் ஒன்று கூடி தமக்கிடையில் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அதன் பின்னர் காயலர்கள் அனைவரும் ஷாம் ஜவ்சகீ வீட்டில் ஒன்று கூடினர்.
சுமார் பத்து வருடங்களாக இப்பகுதிகளில் வாழும் தமிழக முஸ்லிம்களை ஒன்றிணைத்து சமூக சேவைகளாற்றி வரும் ’டி.எஃப்.டபிள்யு. (DFW) நண்பர்கள்' அமைப்பின் சார்பில் அன்றிரவு 'கஸ்ரா' பாரசீக உணவகத்தில் நடைபெற்ற பெருநாள் விருந்தில், இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இப்பகுதிகளில் காயல்பட்டினம், அதிராம்பட்டினம், கிழக்கரை, நாகர்கோவில், சென்னை மற்றும் தமிழகத்தின் தென்பகுதியை சார்ந்த முஸ்லிம்கள் அதிகம் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
சாளை முஹம்மத் முஹ்யித்தீன் |