தமிழ்நாட்டில் 20.08.2012 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அன்று காலையில் காயல்பட்டினத்தின் அனைத்து பள்ளிவாசல்கள் - பெண்கள் தைக்காக்களில் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரைகள் நடைபெற்றன.
பின்னர், அனைவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களாக மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
பின்னர், தமதில்லங்களுக்குச் சென்று, குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் இணைந்தமர்ந்து பெருநாள் சிறப்பு உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
பின்னர், அவர்கள் தம் நெருங்கிய - தூரத்து உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்கிருந்தோருக்கு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, சிறுவர் - சிறுமியருக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தனர்.
அன்று மாலையில், தம் நண்பர்கள் புடைசூழ காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த அவர்கள், அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்தவாறு, ஊர்க்கதைகள் பேசி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி, இணைந்தமர்ந்து கொறித்தனர்.
பெருநாளன்று மாலையில் கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
பெருநாள் மாலையில் கடற்கரையில், மட்டன் கபாப், பஞ்சு மிட்டாய், வடை - கறி கஞ்சி, மஞ்சள் மிட்டாய் (ஜாங்கிரி) உள்ளிட்ட கடைகளும், பெண்கள் அழகு பொருட்கள் விற்பனைக் கடைகளும் நிறைய அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் விளையாடத்தக்க ராட்சத பலூன்களும் கடற்கரையில் நிறுவப்பட்டிருந்தது.
காயலர் ஒருவரால் தயாரித்து சந்தைப்படுத்தப்படும் வாசனைத் திரவிய வகைகள் கடற்கரைக்கு வந்தோரை வெகுவாகக் கவர்ந்தது.
நோன்புப் பெருநாள் மாலை கடற்கரை காட்சிகள் குறித்த குறித்த அனைத்து படங்களையும் தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக! |