தமிழ்நாடு க்ரிக்கெட் விளையாட்டுக் கழகம் சார்பில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் மைதானத்தில், 14 வயதுக்குட்பட்டோருக்கான க்ரிக்கெட் விளையாட்டு சுற்றுப் போட்டி இன்று துவங்கியது.
தூத்துக்குடி மாவட்ட க்ரிக்கெட் கழக செயலாளர் சிவகுமரன் துவக்க விழாவிற்குத் தலைமை தாங்கினார். அதன் செயற்குழு உறுப்பினர் எம்.பி.எஸ்.சுலைமான், தமிழ்நாடு க்ரிக்கெட் விளையாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பீட்டாளர் (ஸ்கோரர்) சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்த துவக்க விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி ஹாஜியார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போட்டியைத் துவக்கி வைத்தார். அவருக்கு, விழா தலைவர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பின்னர், துவக்கப் போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களும் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இன்று காலையில் நடைபெறும் துவக்கப் போட்டியில் தர்மபுரி மாவட்ட க்ரிக்கெட் கழக அணியும், திருப்பூர் மாவட்ட க்ரிக்கெட் கழக அணியும் விளையாடுகின்றன.
தகவல் & படங்கள்:
M.M.ஷாஹுல் ஹமீத் |