இந்திய மாநிலம் அஸ்ஸாமில் நிலவும் பதட்டமான சூழல் காரணமாக - ஒரு SIM-இல் இருந்து தினசரி அனுப்பக்கூடிய குறுந்தகவல்கள் (SMS) எண்ணிக்கையை Telecom Regulatory Authority of India (TRAI), 200 இல் இருந்து 5 - என சமீபத்தில் குறைத்தது. ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை சற்று தளர்த்தி - மத்திய அரசு - தினமும் 20 குறுந்தகவல்கள் அனுப்பலாம் என தற்போது அறிவித்துள்ளது.
மொபைல் நிறுவனங்களின் சுமார் 8 சதவீத வருமானம் - குறுந்தகவல்கள் போன்ற சேவைகள் மூலம் வருகின்றது. அரசு அறிவித்த தடையினால் - மொபைல் நிறுவனங்களுக்கு - சுமார் 500 கோடி ரூபாய் நஷ்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross