காயல்பட்டினம் கடற்கரையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கரை ஒதுங்கியது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
காயல்பட்டினம் கடற்கரையில் இன்று மாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கரை ஒதுங்கியது. வான நீல நிற கால் சட்டையும், ஊதா நிற அரைக் கை சட்டையும் அணிந்துள்ளார். இடது கையில் டைட்டன் வாட்ச் உள்ளது.
இந்நிகழ்வு குறித்து அறிந்த ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர் சண்முகவேல் நிகழ்விடம் இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். புதுநிறம் கொண்ட அவர் யார், எந்த ஊரைச் சார்ந்தவர், கடற்கரையில் எப்படி பிணமாக ஒருங்கினார் என்பன குறித்து ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் விசாரணை நடத்தி வருகிறார்.
1. துயர சம்பவம்...துப்பு துலங்கட்டும். posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[24 August 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21475
பேன்ட் அணிந்திருப்பதால் நிச்சயமாக நமதுரைச் சார்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை! இவர் குளிக்கச் சென்றிருக்கவும் சாத்தியமில்லை! காரணம் சட்டை, பேண்ட்,வாட்ச் ஆகியவை அணிந்துள்ளார்.தற்கொலையா? அல்லது மது அருந்திவிட்டு தடுமாறிய நிலையில் தண்ணீரில் மூழ்கடிக்கப் பட்டாரா? என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது. நமது காவல்துறையினர் துப்பு துலக்கி நிச்சயம் ஓரிரு நாட்களுக்குள் அடையாளம் காண்பர் என்பது எனது நம்பிக்கை.எது எப்படியோ? நமதூரில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது மிக அரிது! அல்லாஹ் நம் யாவரையும் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross